வாரன் பஃபெட் உடன் மதிய உணவருந்த 31 கோடி ரூபாய் தெரியுமா...!
சான்பிரான்சிஸ்கோ நகரில் ஏழைகள் மற்றும் வீடட்டவர்களுக்காக இயங்கி வரும் (Glide) கிளைட் என்ற தொண்டு நிறுவனத்திற்கு உதவும் பொருட்டு ஆண்டுதோறும் வாரன் பஃபெட் நடத்தும் ஏலத்தில் வென்ற சீன தொழிலதிபர்
சான்பிரான்சிஸ்கோ நகரின் உலகப் புகழ்பெற்ற பெரிய பணக்காரரும், பங்குச் சந்தையின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான வாரன் பஃபெட் (Warren Buffet) உடன் ஒருவேளை மதிய உணவு அருந்துவதற்கு, வருடா வருடம் ஏலம் விடப்படுவது வழக்கம்.
சான்பிரான்சிஸ்கோ நகரில் ஏழைகள் மற்றும் வீடட்டவர்களுக்காக இயங்கி வரும் ’Glide’ என்ற தொண்டு நிறுவனத்திற்கு உதவும் பொருட்டு ஆண்டுதோறும் வாரன் பஃபெட் இந்த ஏலத்தை நடத்துகிறார்.
நிகழாண்டு ஏலத்தில் கிருப்டோகரன்சி நிறுவன தொழிலதிபர் ஜஸ்டின் சன் என்பவர் ஏலத்தில் வெற்றிப்பெற்று தேர்தெடுக்கப்பட்டார். இதற்காக இவர் செலுத்திய ஏலத்தொகை இந்திய மதிப்பில் ரூ.31 கோடியாகும்.
இந்த தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வந்த இவரது மனைவி சூசி பஃபெட், கடந்த 2004ஆம் ஆண்டு காலமானார். இதையடுத்து, ஆண்டுதோறும் அவரது நினைவாக வாரன் பஃபெட் இந்த ஏலத்தை நடத்தி வருகிறார்.
தன்னுடன் ஒருவேளை மதிய உணவு உண்பதற்கு யார் அதிக அளவில் நன்கொடை தர முன் வருகிறார்களோ, அவர்களுடன் வாரன் பஃபெட் உணவருந்துவார். இதுவரை அவர் இவ்வாறு 16 மில்லியன் அமெரிக்க டாலர் வரை பெற்று அந்த நிறுவனத்துக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார்.
சான் பிரான்சிஸ்கோ நகரில் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உண்ண உணவும், இருக்க வீடும் இல்லாமல் கஷ்டப்படும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், மனநிலை சரியில்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்கவுமே தான் இப்படி ஓர் ஏலத்தை நடத்தி வருவதாக அவர் கூறுகிறார்.
நாட்டின் ஓர் பகுதியில் வானுயர்ந்த கட்டடங்கள் உயர்ந்து நின்றாலும், மற்றொரு புறம் வசிக்க வீடின்றி சுமார் 8000 மக்கள் அவதிப்படுவதாகவும் கூறுகிறார். இது நாட்டில் ஓர் சமத்துவமின்மையைக் காட்டுகிறது. இவர்களுக்கு உதவுவதற்காகவே வாரன் பப்ஃபெட் இப்படியொரு திட்டத்தை அறிமுகம் செய்தாராம்.
கடந்த ஆண்டு பஃபெட்டுடன் உணவருந்தியவர் ஏறத்தாழ 1 மில்லியன் அமெரிக்க டாலரை செலுத்தினார். அதற்கு முந்தைய ஆண்டுகளில் 2 மில்லியன் அமெரிக்க டாலர் வரை மதிய உணவு நிகழ்வு ஏலம் விடப்பட்டது.
2012ம் ஆண்டு 3.4 மில்லியன் அமெரிக்க டாலர் செலுத்தியவர் வாரனுடன் உணவருந்தினார். 15வது ஆண்டாக நடைபெறும் நிகழாண்டு மதிய உணவுக்கான ஏலம் ரூ.25 ஆயிரம் அமெரிக்க டாலர் என்ற முதல் கட்ட விலையுடன் ஈ-பே (e-bay) என்ற இணைய வர்த்தக நிறுவனத்தில் தொடங்கியது.
இதில், ஜஸ்டின் சன் என்ற சீனாவைச் சேர்ந்த 29 வயது தொழிலதிபர் வெற்றி பெற்றுள்ளார். பிட்காயினின் முன்னோடி என அழைக்கப்படும் இவர் கேட்ட ஏலத்தொகை 4.6 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.31.66 கோடியாகும்.
மன்ஹாட்டனில் உள்ள ஹோட்டலில் நடைபெறும் இந்த விருந்துக்கு பிளாக்செயின் தொழில்நுட்பம் சார்ந்த தனது நண்பர்கள் 7 பேரையும் உடன் அழைத்துச் செல்ல இருப்பதாக ஜஸ்டின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் பிட் காயின் குறித்த எதிர்மறையான கருத்தைக் கொண்டவர் வாரன்.
இந்நிலையில், வாரன் பஃபெட்டுடன் ஜூலை 25ம் தேதி உணவருந்த தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜஸ்டின் சிறுநீரக கல் பிரச்னையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், உணவருந்தும் நிகழ்ச்சியை மற்றொரு நாளுக்குத் தள்ளி வைத்துள்ளார்களாம்.
இந்திய மதிப்பில் ரூ. 31 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த இந்த ஏலம்தான், உலகிலேயே அதிக விலைமதிப்பு மிக்க மதிய உணவாக கருதப்படுகிறது.
இந்நிலையில் தவிர்க்க இயலாத இச்சூழலால் நிகழாண்டு மதிய உணவு விருந்து நிகழ்ச்சி தள்ளிப் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.