Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

கேரளாவில் மூன்றாவது நபருக்கு கொரோனா வைரஸ் நோய் உறுதி!

சீனாவிற்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் இந்தியா எடுத்துள்ள தற்காப்பு நடவடிக்கைகள் இதோ!

கேரளாவில் மூன்றாவது நபருக்கு கொரோனா வைரஸ் நோய் உறுதி!

Monday February 03, 2020 , 2 min Read

சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, வெளியுறவுத்துறை, உள்துறை, விமானப் போக்குவரத்து, சுகாதார ஆராய்ச்சி ஆகிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் இந்திய – திபெத் எல்லைக் காவல்படை, ராணுவ மருத்துவ சேவைகள், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் புதிய கொரோனா வைரஸ் குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தை அமைச்சரவை செயலாளர் இன்று நடத்தினார்.


தற்போது வரை 445 விமானங்களில் பயணம் செய்து வந்த 58 ஆயிரத்து 658 பயணிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் 142 பயணிகளுக்கு ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின்மூலம் நோய் அறிகுறிகள் சோதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தும் பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 130 ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு, 128-ல் நோய்த் தொற்று இல்லையென்பது கண்டறியப்பட்டுள்ளது. 
Corona

இரண்டாவது கட்டமாக (7 மாலத்தீவு குடிமக்கள் உட்பட) 330 பயணிகள் வூஹானிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளனர்.  இவர்களில் (7 மாலத்தீவு குடிமக்கள் உட்பட) 300 பயணிகள் இந்தியா – திபெத் எல்லை காவல்படையின் சாவ்லா முகாமிலும், மற்ற 30 பேர் மனேசாரிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


சீனாவுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், 2020 ஜனவரி 15-ஆம் தேதிமுதல் சீனாவுக்குப் பயணம் செய்தவர்களும், அண்மையில் பயணம் செய்தவர்களும்  தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

  • சீன பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான இ-விசா வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
  • சீன நாட்டினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட இ-விசா தற்காலிகமாக செல்லாது என அறிவிக்கப்படுகிறது.
  • சீனாவிலிருந்து நேரடி விசா பெறுவதற்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பம் அளிப்பதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
  • கட்டாயமான காரணங்களால் சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்ய வேண்டியவர்கள் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தை அல்லது ஷாங்காய் அல்லது குவாங்ஷூ-வில் உள்ள துணைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


கேரளாவில் இரண்டு பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் மூன்றாவது நபருக்குப் புதிய கொரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர் சீனாவின் வூஹானில் பயணம் செய்த தகவல் கிடைத்துள்ளது.


இவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்டு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் சீரான உடல் நிலையுடன் உள்ளார். உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.


தகவல்: பிடிஐ