கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஜாக் மா 100 கோடி நிதி உதவி!
உயிர்க் கொல்லி கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க, அலிபாபா நிறுவனர் 100 கோடி நிதி அளித்துள்ளார்.
சீனாவில் வேகமாக பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க, சீனாவின் முன்னணி தொழிலதிபரான அலிபாபா நிறுவனர் ஜாக் மா, 100 கோடி நிதி அளித்துள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸ் எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ், சீனாவின் தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் 170 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் மற்ற நாடுகளில் பரவிவிடாமல் இருக்க அனைத்து நாடுகளிலும் உள்ள சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளதாக என சோதனை செய்த பின்னரே தங்கள் நாடுகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவிலும் இத்தகைய சோதனை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
இதனிடையே, இந்த வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டறிய மருத்துவ விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும், செல்வந்தர்களும் நிதி உதவிகளை வழங்கி வருகிறார்கள்.
அதில், கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க அலிபாபா நிறுவனத்தின், நிறுவனர் ஜாக் மா, ரூ.100 கோடி நிதியை, சீன அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிதியில், ரூ.41 கோடி தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள, இரண்டு அரசு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள தொகை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் என, அமெரிக்க நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தொகுப்பு: சைபர்சிம்மன்