Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘இனி குழந்தைகள் மட்டுமல்ல, அவர்களது காலணியும் வளரும்’ – இது ஒரு புதிய தொழில் முயற்சி!

புனேவைச் சேர்ந்த டி2சி ஸ்டார்ட் அப் Aretto குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றியமைத்து பயன்படுத்தக்கூடிய காலணிகளை தொழில்நுட்பத்தின் உதவியுடன் வடிவமைத்திருக்கிறது.

‘இனி குழந்தைகள் மட்டுமல்ல, அவர்களது காலணியும் வளரும்’ – இது ஒரு புதிய தொழில் முயற்சி!

Monday April 10, 2023 , 3 min Read

குழந்தைகளுக்கான ஆடைகள், காலணிகள் ஆகியவற்றை வாங்க கடைகளுக்கு செல்லும் பெற்றோர்களை கவனித்திருக்கிறீர்களா? அவர்களில் பெரும்பாலானோர் இந்த வார்த்தைகளை சொல்லி கேட்டிருப்பீர்கள்...

‘வளர்ற குழந்தை’, ‘இவ்வளவு விலை கொடுத்து வாங்கி 2 மாசம்கூட போடமுடியாது’, இப்பவே டைட்டா இருக்கு, போகப்போக சின்னதா ஆகிடும்’ இப்படி பெற்றோர் சலித்துக்கொள்வதை நாம் கேட்டிருப்போம்.

இந்த சலிப்புக் குரல்கள் யார் காதுகளுக்கு எட்டியதோ இல்லையோ, நண்பர்களான சத்யஜித் மிட்டல், கிருத்திகா லால் காதுகளுக்கு சற்று உரக்கவே கேட்டுள்ளது. உடனே இதற்கு தீர்வுகாண முடிவுசெய்து ’Aretto’ என்கிற காலணி பிராண்ட் அறிமுகப்படுத்திவிட்டார்கள்.

Aretto Founders

கிருத்திகா லால், சத்யஜித் மிட்டல் - இணைநிறுவனர்கள், Aretto

குழந்தைகள் வளர வளர கால் அளவும் மாறிக்கொண்டே இருக்கும். இது இயல்புதான். ஆனால், உங்கள் குழந்தையைப் போலவே அவர்களது காலணியும் வளர்ந்துகொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு அனுபவத்தை வழங்குகிறது இந்த பிராண்ட்.

முக்கியத்துவம்

குழந்தைகள் தங்கள் கால்களுக்கு பொருத்தமான, கச்சிதமான காலணிகளை அணிவது முக்கியம். காலணிகள் நடக்கும்போது கழன்றுவிடும்படியோ கழட்டவே முடியாதபடி இறுக்கமாகவோ இருக்கக்கூடாது. ஓடி, ஆடி விளையாடும் வயதில் பொருத்தமான காலணிகள் அவர்களது வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமாகிறது.

“குழந்தைகளின் காலணி பிரச்சனைக்குத் தீர்வுகாண முடிவு செய்தோம். இதற்கான தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றோம். இந்த தொழில்நுட்பத்தின் உதவியால் குழந்தைகளுடன் சேர்ந்து அவர்களது காலணியும் வளரும்,” என்கிறார் Aretto சிஇஓ-வும் இணை நிறுவனருமான சத்யஜித் மிட்டல்.

கிரேக்க புராணங்களின்படி, Arete சிறப்பிற்கான கடவுள். அத்தகைய சிறப்பையும் வளர்ச்சியையும் சுட்டிக் காட்டும் வகையில் Aretto என்கிற பெயர் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கிறார் மிட்டல்.

இந்த ஸ்டார்ட் அப் தொடங்க 1,00,000 டாலர் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர் இந்நிறுவனர்கள்.

குழந்தைகளின் நண்பன்

புனேவைச் சேர்ந்த டி2சி ஸ்டார்ட் அப் Aretto குழந்தைகளின் உற்ற நண்பன். இந்த பிராண்ட் ஷூக்கள் 360 டிகிரி நெகிழ்வாகவும், காற்றோட்டமாகவும் கால் அளவுகளுக்கு ஏற்றபடியும் இருப்பதே இதன் சிறப்பம்சம். இவற்றை சாத்தியப்படுத்தும் சிறந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த பிராண்ட் முதலில் அறிமுகப்படுத்திய பிராடக்ட் Aretto Leaps.

“எஸ்கேயூ எண்ணிக்கை குறைவாக இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம்,” என்கிறார் மிட்டல்.

இந்த ஸ்டார்ட் அப் 38 எஸ்கேயூ-க்களைக் கொண்டுள்ளது. ஒன்பது வகையான ஸ்டைல், ஐந்து அளவுகள், நான்கு பிரிவுகளுடன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையளித்து வருகிறது. ரூபாய் 1,699 முதல் 2,899 வரையிலும் விலை நிர்ணயிக்கபட்டுள்ளது. 0-2 வயது, 5-7 வயது, 5-9 வயது என வெவ்வேறு வயது வரம்புகளை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு டிசைன்களை வழங்குகிறது.

Aretto இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 100% மாதாந்திர வளர்ச்சி காணப்படுகிறது. கடந்த மாதம் இந்த ஸ்டார்ட் அப் 12 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதுவரை இந்த பிராண்ட் 6,000 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

பிராண்ட் தயாரிப்புகள்

குழந்தையின் இயல்பான உடல் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் காலணிகளை வடிவமைக்க Aretto மூன்று தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதாக இந்நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகளின் காலின் மில்லிமீட்டர் அளவிலான வளர்ச்சிக்கு ஏற்றபடி SuperGrooves, மிருதுவான இன்சோல் கொண்ட Aretto Squishy Foam ஆகிய தயாரிப்புகளை Aretto வழங்குகிறது. நெகிழ்தன்மையும் காற்றோட்ட வசதியும் கொண்ட இந்த காலணிகள் அழுத்தத்தைக் குறைத்து வசதியாக இருப்பதை உறுதிசெய்கின்றன.

Aretto shoes

Aretto காலணிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது எனவும் மும்மடங்கு அதிகம் நீடித்து உழைக்கும் என்றும் நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.

“ஷூக்களின் உள்ளே இருக்கும் சோல் பகுதியில் நாங்கள் முழு கவனம் செலுத்துகிறோம். இது மிருதுவாகவும் நெகிழ்தன்மையுடனும் இருக்கும் அதேசமயம் குழந்தைகள் தடையின்றி விளையாட உதவும் வகையில் கிரிப் இருப்பதையும் கவனமாக உறுதிசெய்கிறோம்,” என்கிறார் மிட்டல்.

சோல் டெக்னாலஜிக்கான இந்திய அரசாங்கத்தின் காப்புரிமை அலுவலகம் இந்நிறுவனத்திற்கு காப்புரிமை வழங்கியிருக்கிறது.

பரிசோதனைகள்

காலணி தொடர்பான சிக்கலுக்கு தீர்வுகாணும் புதிய முயற்சியில் களமிறங்கியது பற்றி பேசும்போது,

“இது ஒரு புதுமையான முயற்சி. ஆரம்பத்திலிருந்து உருவாக்க வேண்டியிருந்தது. எப்படிப்பட்ட சவால்கள் இதன்பின் மறைந்திருக்கும் என்பது தெரியாது. உற்சாகமாக துணிந்து செயல்படுவோம்,” என்கிறார் Aretto சிஎம்ஓ-வும் இணைநிறுவனருமான லால்.

சந்தையில் அறிமுகப்படுவதற்கு முன்பு கிட்டத்தட்ட 500 பெற்றோர்களுடன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

”இந்த காலணிகளின் அம்சங்களை பெற்றோர் பாராட்டினார்கள். சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக வடிவமைத்திருப்பது பலரைக் கவர்ந்திருக்கிறது,” என்கிறார் மிட்டல்.

ஆண், பெண் என இரண்டு பாலினத்தவரும் பயன்படுத்தும் வகையில் இந்த ஷூக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நிறுவனத்திற்குள் இருக்கும் டிசைன் குழு இவற்றை வடிவமைக்கிறது. இந்தியாவில் உள்ள அசல் உபகரண உற்பத்தியாளர்கள் இவற்றைத் தயாரிக்கின்றனர்.

வருங்காலத் திட்டம்

2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து Aretto 273400 டாலர் தொகை நிதி திரட்டியுள்ளது.

2021ம் ஆண்டு இந்திய காலணி சந்தை 13.5 பில்லியன் டாலர் கொண்டதாக மதிப்பிடப்பட்டது, 2027ம் ஆண்டு 12.65 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் 27.7 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக IMARC தெரிவிக்கிறது.

தற்சமயம் Aretto வலைதளத்தில் அதன் தயாரிப்புகள் கிடைக்கின்றன. 2-8 வயதுடையவர்களில் கவனம் செலுத்தும் நிலையில் விரைவில் 0-11 வயது வரையிலும் விரிவாக்கம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ப்ரீ-ஸ்கூல், ஆரம்பப்பள்ளிகள், குழந்தைகளுக்காக பிரத்யேகமாக செயல்படும் மையங்கள் போன்ற இடங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து வாடிக்கையாளர்களுடன் இணையவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆங்கில கட்டுரையாளர்: பூஜா மாலிக்