சிறு, குறு நிறுவனங்கள் ரூ.2 கோடி வரை கடனுதவி பெற உதவும் மூன்று திட்டங்கள்!
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல் மூலதன சிக்கலை எதிர்கொண்டு வரும் நிலையில், தொழில் முனைவோர்கள் கடன் பெற வழி செய்யும் அரசின் மூன்று முக்கிய திட்டங்கள் பற்றி ஒரு பார்வை:
சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் எம்.எஸ்.எம்.இ (Msme) நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்கின்றன மற்றும் இந்தியாவின் வேலை வாய்ப்பு சிக்கலுக்கான தீர்வாக அமைகின்றன. இந்தியாவில் எம்.எஸ்.எம்.இ துறை 100 மில்லியன் பேருக்கு வேலை வாய்ப்பு அளித்து, நாட்டின் ஏற்றுமதியில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.
செயல்பாடுகள் மற்றும் விரிவாக்கத்திற்கு சிறு தொழில்களுக்கு போதுமான நிதி தேவை. இருப்பினும் இத்துறை செயல் மூலதன சிக்கலை எதிர்கொண்டிருப்பதால், தேவையான மூலதனத்தை பெறுவது கடினமாக உள்ளது.
சிறு தொழில்கள் மற்றும் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் நிதி திரட்ட பயன்படுத்திக் கொள்ளக்கூடிய மூன்று முக்கிய அரசு திட்டங்கள் தொடர்பான தகவல்கள் இதோ:
கடனுடன் இணந்த மூலதான மானியத் திட்டம் (The Credit Linked Capital Subsidy and Technology Upgradation Scheme (CLCSTUS)
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில்நுட்ப மேம்பாடு நடவடிக்கைகளுடன், கடனுடன் இணைந்த மூலதன மானியம் (சி..எல்.சி.எஸ்), பூஜ்ஜியம் பழுது, பூஜ்ஜியம் விளைவு உற்பத்திக்கான உதவி, வீணாவதை குறைப்பதன் மூலம் உற்பத்தித் திறன் மேம்பாடு, வடிவமைப்பு உதவி, கிளவுட் சேவை, அறிவு சொத்துரிமை உதவி ஆகியவை மூலம் சிறு தொழில் நிறுவனங்களின் போட்டித்தன்மையை அதிகரிக்கச் செய்வதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட 51 துணை பிரிவுகள்/ பொருட்களின் கீழ், தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக, பெறக்கூடிய ஒரு கோடி ரூபாய் வரையான நிதியுதவியில், குறுந்தொழில்கள், காதி, கிராமப்புற மற்றும் தேங்காய் நார் தொழில் உள்ளிட்ட எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு இத்திட்டம் முதலிலேயே 15 சதவீத மூலதன மானியம் அளிக்கிறது.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண்கள் நடத்தும் சிறிய, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்க மற்றும் ஜம்மூ காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தர்காண்ட் போன்ற மலைப்பகுதிகளுக்கு வாய்ப்பு அளிக்கவும் இத்திட்டம் சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ், மானியம் பெற தகுதி உடைய எம்.எஸ்.இ நிறுவனங்கள் ஆன்லைனில், கடன் பெற்ற முதன்மை கடன் வழங்கும் (பி.எல்.ஐ) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த படிவத்தை தொடர்புடைய பி.எல்.ஐ, உரிய அமைப்பிடம் பதிவேற்றும். அங்கிருந்து டிசி அலுவலகத்திற்கு மானியத்திற்காக பரிந்துரைக்கப்படும். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, போதுமான நிதி இருக்கும் பட்சத்தில், உரிய அதிகாரிகளால் அனுமதி அளிக்கப்படும். இதன் பிறகு நிதி உரிய மைய அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து நிறுவனங்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.
இந்த திட்டம் பற்றி மேலும் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கான கடன் உறுதி நிதி அறக்கட்டளை (CGDMSE)
எம்.எஸ்.எம்.இ அமைச்சகம் மற்றும் சிட்பி இணைந்து உருவாக்கிய இத்திட்டம், கடன் பெறும் எம்.எஸ்.இ நிறுவனம் தனது கடனை செலுத்தத் தவறினால், அந்த தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை இந்த அறக்கட்டளை அளிக்கும் என உறுதி அளிக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்கள், புதிய மற்றும் ஏற்கனவே உள்ள குறு, சிறு நிறுவனங்களுக்கு வழங்கும் ரூ.2 கோடி வரையான கடன், இந்த அறக்கட்டளை நிதியின் கீழ் உறுதி பெற தகுதி உடையது.
குறும் நிறுவங்களுக்கு ரூ.5 லட்சம் வரையான கடனுக்கு, 85 சதவீதம் வரை கடன் உறுதி உண்டு. எம்.எஸ்.இ நிறுவனங்களுக்கு, ரூ.10 லட்சம் முதல் ரூ.100 லட்சம் வரை, கடன் உறுதி 50 சதவீதமாகும்.
பெண்கள் நடத்தும் எம்.எஸ்.இ நிறுவனம் எனில், இது 80 சதவீதம் வரை இருக்கலாம். வட கிழக்கு பகுதிக்கான கடன் உறுதி, ரூ.50 லட்சம் வரையான கடன்களுக்கு பொருந்தும்.
தகுதி உடையவர்கள், இந்தத் திட்டம் கீழ் கடன் பெற தகுதி உடைய வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களை அணுகலாம்.
தொடர்புக்கு: CEO, CGT MSE Ph: 022-61437805 Email: [email protected] Or, DC, O/o DC, MSME Ph: 011-23062241 Email : [email protected]
இத்திட்டம் பற்றி மேலும் விவரங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.
பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் (PMEGP)
சிறு தொழில்களை நிறுவுவதன் மூலம் இத்திட்டம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முயற்சிக்கிறது. வங்கிகள், சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ஊக்குவிப்பதும் ஒரு நோக்கம்.
18 வயதுக்கு மேல் உள்ள எவரும் இதில் பயன்பெறலாம். 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் மற்றும் உற்பத்தித் துறை எனில் திட்ட மதிப்பு ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும். சேவை துறையில் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
உற்பத்தித் துறையில் திட்டம் அல்லது ஆலைக்கான அதிக பட்ச தொகை ரூ. 25 லட்சம் மற்றும் சேவைத்துறையில் இது ரூ.10 லட்சம். மானிய அளவு, பொது பிரிவில், நகர் பகுதியில் 15 சதவீதம் மற்றும் கிராம பகுதியில் 25 சதவீதம்.
தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் இதர பிற்படுத்தப்படவர்கள், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், வடகிழக்கு பகுதி, மலைப்பகுதி, எல்லைப்பகுதி ஆகிய சிறப்பு பிரிவுகளில் இது நகர்புறங்களில் 25 சதவீதம் மற்றும் கிராமப்புறங்களில் 35 சதவீதம் ஆகும்.
கே.வி.ஐ.சியின் மாநில/மண்டல இயக்குனர்கள், கேவி.ஐபி மற்றும் மாநில தொழில்கள் இயக்குனர் ஆலோசனையுடன், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறக்கூடியவர்களிடம் இருந்து, திட்ட அறிக்கைகளுடன் விண்ணப்பத்தை கோருவதற்கான விளம்பரங்களை வெளியிடுகிறது.
பயனாளிகள் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்பிக்கலாம்:
https://www.kviconline.gov.in/pmegpeportal/pmegphome/index.jsp மேலும் விண்ணபத்தை அச்சிட்டு, ஆவணங்கள் மற்றும் திட்ட அறிக்கையுடன் தொடர்புடைய அலுவலகங்களில் சமர்பிக்கலாம்.
தொடர்புக்கு: State Director, KVIC Address available at http://www.kviconline.gov.in Dy. CEO (PMEGP), KVIC, Mumbai Ph: 022-26711017 Email: [email protected]