மருத்துவமனை, வீடு, பொது இடங்களில் கொரோனாவை எதிர்கொள்ள உதவும் 3 வகை ரோபோட்கள்!
மருத்துவர்கள்/நர்சுகளுக்கு உதவும் ரோபோ, வீட்டில் கிருமிநாசி செயும் ரோபோ கருவி மற்றும் பொது இடங்களில் கிருமிகளை அழிக்கும் ரோபோ என 3 வகைகளை வடிவமைத்துள்ளனர் கோவை இளம் நிறுவனர்கள்.
மூன்று நிறுவனங்கள் இணைந்து, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவு மூன்று ரோபோட்களை வடிவமைத்துள்ளனர். மத்திய மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவையை தலைமையிடமாகக் கொண்டு மூன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. உலகத்திற்கே பெரும் சவாலாக விளங்கும் கொரோனா வைரஸில் இருந்து , மருத்துவர்களையும், அவர்களது உதவியாளர்களையும் பாதுகாக்கும் வகையில் மூன்று ரோபோட்களை வடிவமைத்துள்ளனர் இவர்கள்.
அது குறித்து கேட்டமன் டெக்னாலஜி மற்றும் பிசினஸ் சொல்யூசன்ஸின் முதன்மை செயல் அதிகாரி முத்துவங்களியப்பன் பேசுகையில், ராட்வெல் டெக்னாலஜிஸ் மற்றும் ஏரீஸ் பயோமெட் டெக்னாலஜி என்ற மூன்று நிறுவனங்களோடு இணைந்து மூன்று ரோபோட்களை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
டோக்கட் டாரா, என்ற ரோபோட் கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்துகள் மட்டும் உணவுகளை கொண்டு போய் அவர்களிடம் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தானியங்கி முறையிலும், ரீமோட் கண்ட்ரோல் மூலமாகவும் இயக்க முடியும்.
இதனால் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்களின் பணி எளிதாக இருக்கும். இத்தாலி போன்ற நாடுகளில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டதால் இந்த ரோபோவை பயன்படுத்தி பாதிப்பைக் கடுப்படுத்த முடியும்.
இந்தியாவில் கோவிட் 19 பாதிக்கப்பட்டவரிடமிருந்து செவிலியர் மற்றும் உதவியாளர்களுக்கு பரவாமல் தடுக்க இந்த ரோபோவால் முடியும். மேலும் என்ன மாத்திரைகள் மற்றும் உணவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை மென்பொருளில் பதிவு செய்துகொள்ள முடியும். இதனை கையாள்வதும் மிக எளிதாக இருக்கும் என்றார்.
இரண்டாவது ரோபோட் டாக்கெட் குரா, இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் அறையிலுள்ள கொரோனா வைரஸை புற ஊதாக்கதிரை கொண்டு அழிக்க முடியும். ஏற்கனவே மருந்துவமனைகளிகுள்ள அறுவை சிகிச்சை அறையில் புற ஊதாக்கதிர்களைப் பயன்படுத்தி பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழித்து வருகின்றனர். இந்த தொழில்நுட்பத்தை ரோபோட்கள் மூலம் பயன்படுத்தி வைரஸை அழிக்க முடியும்.
இந்த ரோபோபவை சீனா மற்றும் இத்தாலி நாடுகள் கொரோனா வைரஸை கொல்ல பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதில் இரண்டு வகை ரோபோக்கள் இருப்பதாகத் தெரிவித்தார். ஒன்று டவர் வடிவில் இருப்பதாகவும் அதை பேருந்துகளில் பயன்படுத்தும் போது அந்த இடங்களிலுள்ள கிருமிகள் அழிக்கப்படும் என்றார்.
மேலும் வீடுகளில் இந்த டவர் ரோபோவை வைக்கும் போது அந்த அறையிலுள்ள வைரஸை அழித்து நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும் என்றார். கிருமி நாசினிகளுக்கான செலவுகள் இதுக்கு தேவையில்லை எனவும், பணியாளர்களும் அவசியமில்லை என்றார்.
மூன்றாவது வகையான ரோபோக்கள், மருத்துவமனைகள் மற்றும் ரயில் நிலையங்களில் தொடர்ந்து கிருமிநாசினி பயன்படுத்த முடியாது. அங்கு மக்களின் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும் பகுதிகளில் தானியங்கி மற்றும் ரீமோட் கண்ட்ரோல் மூலம் இந்த ரோபோட்களை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு இயக்கி ஒரு இடத்தில் வைத்து புற ஊதாக்கதிர்களைப் பயன்படுத்தி வைரஸை அழிக்க முடியும் என்றார்.
மேலும் ஒரு பத்துக்கு பத்து அறையில் எத்தனை பல்புகளை பயன்படுத்தி புற ஊதாக்கதிர்களை செலுத்தினால், கொரோனா வைரஸை அழிக்க முடியும் என்பதை மருத்துவர்களும் அரசும்தான் சொல்ல வேண்டும் என்றார்.
இந்த பரிசோதனைகளை செய்து தர அரசு உதவ வேண்டுமென்றனர். இந்த மூன்று ரோபோக்களை பயன்படுத்தி இப்போது இருக்கும் சுகாதாரத்தை விட, மேம்பட்ட சுகாதாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார் முத்துவங்களியப்பன்.
இந்த ரோபோட்கள் சீனா மற்றும் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்தால் 20 லிருந்து 30 லட்ச ரூபாய் வரை செலவாகும். ஆனால் இவற்றைத் தாங்களே தயாரிப்பதால் நமது நாட்டிற்காக 5 லட்சத்திற்குள் கொடுக்க முடியும் எனவும், 100 ரோபோட்களுக்கு மேல் செய்யும் போது 2 லட்ச ரூபாய்க்கு செய்ய முடியும் என்றனர்.
அரசுத் தரப்பில் இருந்தும், மருத்துவ அறிஞர்களிடமிருந்தும் புற ஊதாக்கதிர்களை கொரோனா வைரஸ் மீது செலுத்தினால் எப்போது சாகும், அதற்கான வரையறையை அவர்கள் கொடுத்தால் உடனடியாக இதில் செயல்படுத்த முடியும் என்றார்.
கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மையும், நமது சமுதாயத்தையும் காப்பாற்றும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோட்களை பயன்படுத்தவும், இவர்களுக்கு உதவவும் அரசு முன்வர வேண்டும் என்பதே இந்த நிறுவனர்களின் வேண்டுகோள்.