இந்தியாவில் ஆப்பிள் விற்பனை வருவாய் சாதனையால் டிம் குக் உற்சாகம்!
இந்தியாவில் 4 புதிய ஆப்பிள் விற்பனை நிலையங்கள் துவக்கப்பட இருப்பதை டிம் குக் உறுதி செய்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் எதிர்கொண்டு வரும் வரவேற்பால் தொடர்ந்து உற்சாகம் கொண்டுள்ளதாக நிறுவன சி.இ.ஓ.டிம் குக் கூறியுள்ளார்.
இரண்டு காலாண்டுகளுக்கு பிறகு சர்வதேச அளவில், ஐபோன் விற்பனையில் வளர்ச்சி திரும்பியுள்ள சூழலில், செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் இது வரை இல்லாத சாதனை விற்பனையை நிறுவனம் எதிர்கொண்டுள்ளதை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“இந்தியாவில் புதிதாக நான்கு ஆப்பிள் விற்பனை நிலையங்களை துவக்க இனியும் காத்திருக்க முடியாது என்றும், நிறுவன நான்காவது காலாண்டு முடிவுகளின் போது,“ டிம் குக் கூறினார்.
“ஆப்பிள் 94.9 பில்லியன் டாலர் வருவாய் கண்டுள்ளது. இது செப்டம்பர் காலாண்டிற்கான சாதனை. கடந்த ஆண்டைவிட 6 சதவீதம் அதிகம். ஐபோன் ஒவ்வொரு பகுதியிலும் வளர்ச்சி அடைந்து புதிய செப்டம்பர் காலாண்டு சாதனையை நிகழ்த்தியுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையகமாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனம், அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியாவை உள்ளடக்கிய ஆசிய பசிபிக் உள்ளிட்ட பகுதிகளுக்கான விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன் மூன்றாவது பெரிய சந்தையான சீனாவில், செப்டம்பர் காலாண்டு விற்பனை சற்று சரிந்து, 7.7 சதவீதமாக உள்ளது.
இதனிடையே, ஐரோப்பாவில் நிறுவனம் ஒரு முறை வரி செலுத்தும் முடிவுக்கு உள்ளானதால் லாபம் பாதித்துள்ளது. காலாண்டில் அதன் நிகர லாபம் 14.7 பில்லியன் டாலராக, ஆண்டு அடிப்படையில் 35.8 சதவீதம் குறைந்துள்ளது.
“காலாண்டில் 10.2 பில்லியன் டாலர் அளவில் வருமான வரி முடிவுக்கு உள்ளானோம். ஐரோப்பிய பொது நீதிமன்ற முடிவுக்கு ஏற்ப இது அமைந்தது,” என நிறுவன முதன்மை நிதி அதிகாரி லுகா மேஸ்ட்ரி குறிப்பிட்டார்.
“இந்த ஒரு முறை செலவை கழித்துப்பார்த்தால், நிகர வருமானம் 25 பில்லியன் டாலர். கடந்த ஆண்டை விட 12 சதவீதம் அதிகம் என்றும் குறிப்பிட்டார்.
நிறுவனத்தின் 24 ஆம் நிதியாண்டு வருவாய் 391 பில்லியன் டாலராக ஆண்டு அடிப்படையில் 2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. நிகர லாபம் 93.7 பில்லியன் டாலராக 3.3 சதவீதம் குறைந்துள்ளது.
ஐபோன் சேவைகள்
ஐபோன் விற்பனை நிறுவன வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தாலும், அதன் சேவைகள் பிரிவும் சீரான வளர்ச்சி கண்டு வருவாயை அதிகரித்துள்ளது. இரண்டு காலாண்டுகள் சரிவுக்கு பின் ஐபோன் விற்பனை 5.5 சதவீதம் வளர்ச்சி அடைந்து, நான்காம் காலாண்டில் 46.2 பில்லியன் டாலராக இருந்தது.
செப்டம்பர் மாதத்தில் ஆப்பிள், ஐபோன் புரோ மற்றும் ஐபோன் புரோ மேக்ஸ் உள்ளிட்ட புதிய போன்களை அறிமுகம் செய்தது. ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகிய போன்களோடு, அதன் ஏஐ சேவையான ஆப்பிள் இண்டலிஜென்சை அறிமுகம் செய்தது. ஆப்பிள் இண்டலிஜென்ஸ் புதிய போனை வாங்குவதற்கு பொருத்தமான மேம்பாடு என்று டிம் குக் தெரிவித்தார்.
எனினும், நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு வளர்ச்சி ஆண்டு அடிப்படையில் குறைவான முதல் இடைப்பட்ட ஒற்றை இலக்க அளவில் இருக்கலாம், என மிஸ்ட்ரி தெரிவித்தார். சேவை வருவாய் பிரிவில், 2024 நிதியாண்டு போல இரண்டு இலக்க வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்தார்.
சேவை வருவாய், 12.9 சதவீதம் வளர்ந்து 96.1 பில்லியன் டாலராக இருந்தது. செப்டம்பர் காலாண்டில் இது 12 சதவீதம் அதிகரித்து 25 பில்லியன் டாலராக இருந்தது.
மற்ற பிரிவுகளில், மேக் மற்றும் ஐபேடில், நிகர விற்பனை அதிகரித்து, அணிகணிணி பிரிவில் குறைந்துள்ளது. 2024ல் மேக் விற்பனை அதிகரித்தாலும் மற்ற இரண்டு பிரிவுகள் குறைந்துள்ளது.
நான்காம் காலாண்டில் மேக் வருவாய் 7.7 பில்லியன் டாலராக ஆண்டு அடிப்படையில் 2 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது, ஐபேடு வருவாய் 7 (8 சதவீத வளர்ச்சி) பில்லியன் டாலராக உள்ளது. துணைப்பொருட்கள் விற்பனை 9 பில்லியன் டாலராக 3 சதவீதம் குறைந்துள்ளது.
இந்தியாவில் இரண்டு இலக்கு வளர்ச்சி உள்பட வளர்ந்து வரும் சந்தையில் ஐபேடு நல்ல வளர்ச்சி கண்டுள்ளதாக நிதி அதிகாரி தெரிவித்தார். மொத்தமாக செப்டம்பர் காலாண்டில் ஆப்பிள் பொருட்கள் விற்பனை 70ம் பில்லியன் டாலராக உள்ளது. ஆண்டு அடிப்படையில் இது 4.1 சதவீத வளர்ச்சி. 24 நிதியாண்டிற்கான விற்பனை 294.9 பில்லியன் டாலராக ஒரு சதவீதம் குறைந்துள்ளது.
ஆப்பிள் இண்டெலிஜென்ஸ்
ஆப்பிள் தனது பொருட்களை ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் ஒருங்கிணைப்புடன் மேம்படுத்தியுள்ளது. எம் 4 சிப் கொண்ட புதிய ஐமேக் தவிர, புதிய மேக் மினி- எம்4 மற்றும் எம் 4 புரோ சிப் கொண்டவை, புதிய மேக்புரோ ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இவை அனைத்தும் ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் ஒருங்கிணைப்பு கொண்டவை.
ஐபேடு புரோ, ஐபேட் ஏர், மேக்புக் ஏர், மேக்புக்புரோ, மேக்மினி, (எம் 1 அல்லது புதிய சிப் கொண்டவை), மேக் ஸ்டூடியோ மற்றும் ஐபோன் 15 உள்ளிட்ட பழைய சாதனங்களுக்கும் ஆதரவு அளிக்கப்படுகிறது. இந்த வார துவக்கத்தில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட் மற்றும் மேக்கில் ஆங்கிலத்தில் ஐபோன் இண்டெலிஜென்ஸ் வசதியை ஒருங்கிணைத்தது.
“வாடிக்கையாளர்கள் மற்றும் டெவலப்பர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் மூன்று நாட்களில் 18.1 சதவீத ஏற்பு உள்ளது. கடந்த ஆண்டு காலாண்டின் 17.1 சதவீத ஏற்பைவிட இரு மடங்கு,” என்று டிம் குக் தெரிவித்தார்.
ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் சேவைகளுக்கு நிச்சயம் தேவையும் ஆர்வமும் உள்ளது, என்றார்.
ஆங்கிலத்தில்: இஷான் பத்ரா, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan