ஆண்டுக்கு 1லட்சம் கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு STEM பயிற்சி: ஐஐடி மெட்ராஸ் உடன் தமிழக அரசு கூட்டு!
கிராமப்புற பள்ளி மாணவர்களை கோடைகாலப் பயிற்சி மூலம் ஸ்டெம் (STEM) திட்டத்தில் இணைக்க உள்ளது ஐஐடி மெட்ராஸ்.
ஐஐடி மெட்ராஸ் கிராமப்புற பள்ளி மாணவர்களை கோடைகாலப் பயிற்சி மூலம் ஸ்டெம் (STEM) திட்டத்தில் இணைக்க உள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்றது முதலே பள்ளிக் கல்வித்துறையில் பல அதிரடி மாற்றங்கள் மற்றும் சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் படிக்க முடியாமல் தவித்த குழந்தைகளுக்கு கல்வி செல்வத்தை கிடைக்க வைக்கும் பொருட்டு தமிழக அரசு ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. குழந்தைகளின் வசிப்பிடத்தில் மையங்கள் அமைத்து, மாலை நேரங்களில் தன்னார்வலர்களின் துணையுடன் ஆடல், பாடலுடன் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டி கூகுள் மற்றும் ஐஐடி மெட்ராஸ் போன்ற நிறுவனங்களுடன் கைகோர்த்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதற்கு அடுத்ததாக கடந்த மார்ச் மாதம் அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்து கொள்ள ஏதுவாக ’Google Read Along’ என்ற செயலியை பயன்படுத்த பள்ளிக் கல்வித்துறை கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. தற்போது ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஸ்டெம் திட்டத்தின் கூட்டுமுயற்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால பயிற்சியை ஆரம்பிக்க உள்ளது.
ஸ்டெம் என்றால் என்ன?
STEM என்பது Science, Technology, Engineering, மற்றும் Mathematics ஆகியவற்றின் பாடங்களில் பெரிதும் கவனம் செலுத்துகின்ற ஒரு கல்வி பாடத்திட்டமாகும். நடப்பு ஆண்டு முதல் பள்ளிகளில் ஸ்டெம் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது அதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஸ்டெம் உடன் கரம் கோர்க்கும் ஐஐடி மெட்ராஸ்:
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஐஐடி மெட்ராஸ் கிராமப்புற பள்ளி மாணவர்களை கோடைகாலப் பயிற்சி மூலம் ஸ்டெம் (STEM) திட்டத்தை தொடங்கிவைத்தார்.
இந்த முன்முயற்சியின் மூலம் ஆண்டுதோறும் நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சம் பள்ளி மாணவர்களைச் சென்றடைய இக்கல்வி நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (Science Technology, Engineering and Mathematics STEM) அரசுப் பள்ளி மாணவர்களைச் சென்றடையும் வகையில் கோடைகாலப் பயிற்சி வகுப்பை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐ4. மெட்ராஸ்) ஜூன் 21ந் தேதி முதல் 25ந் தேதி வரை நடத்துகிறது.
இளம் மாணவர்களை ஊக்குவித்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக ஆக்கப்பூர்வமாகவும், புதுமையாகவும் சிந்திக்கும் ஆர்வத்தை அவர்களிடையே தூண்டச் செய்வதுதான் இதன் நோக்கம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் பாடங்கள் கற்பிக்கப்படும்.
இந்த பயிற்சித் திட்டத்தை ஆன்லைன் முறையில் செயல்படுத்தி, இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கச் செய்ய இக்கல்வி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
அடிப்படை கோட்பாடுகள் பற்றிய அறிவை வழங்கி மாணவர்களை ஊக்குவிப்பதும் பரந்த அளவில் சிந்திக்க உதவும் அனுபவங்களை அவர்களுக்கு வழங்குவதும்தான் இதன் மையக்கருத்தாகும் 884 மெட்ராஸ்ன் கோடைகாலப் பயிற்சி மூலம் அறிவியல், தொழில்நுட்பம் பொறியியல் கணிதம் (STEM) ஆகிய பாடங்கள் கிராமப்புற பள்ளி மாணவர்களைச் சென்றடையும் திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் காமகோடி, ஐஐடி மெட்ராஸ் மின்சாரப் பொறியியல் துறை பேராசிரியர்களான பேரா, ஆர்.சாரதி, பேரா. அன்பரசு மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் உரையாற்றிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்,
'இந்த ஐந்து நாட்கள் உங்கள் மாணவர்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் இத்திட்டம் அரசுப் பள்ளி மாணவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும். மாணவர்களின் பெருமைக்குரிய இடமாக அரசுப் பள்ளிகள் மாற வேண்டும் என்பதில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதியாக உள்ளார் வேலை தேடுவோருக்கு பதிலாக வேலைகளை உருவாக்குவோராக மாணவர்களை ஊக்குவிக்க இத்திட்டம் உதவும் ஸ்டெம் (STEM) கல்வி பெருமளவில் கற்றல் விளைவுகளை மேம்படுத்தும்,” எனத் தெரிவித்தார்
இந்த முயற்சியை மேற்கொண்டதற்காக ஐஐடி மெட்ராஸ்-க்கு நன்றி தெரிவித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இத்திட்டத்திற்காக மாணவர்களைத் தேர்வுசெய்யும்போது, பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வித்துறை முக்கியத்துவம் அளித்துள்ளது. இந்த 133 மாணவர்கள் ஒரு தொடக்கம் மட்டும்தான் இன்னும் ஏராளமான மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
இந்தத் திட்டத்தில் 7 விழுக்காடு நடைமுறைக் கூறுகளாகவும் எஞ்சியவை கோட்பாடாகவும் அமைத்துள்ளதாகவும் கூறினார். முக்கியமான காப்புரிமை பற்றி மாணவர்களும் அறிந்து கொள்வார்கள் நாட்டிலேயே காப்புரிமைக்காக தாக்கல் செய்வதில் தமிழகம் முதலிடம் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் இளம் மாணவர்களுக்கு அறிவைப் புகட்டுவதும், நாடு முழுவதும் ஏறத்தாழ ஒரு லட்சம் கிராமப்புற மாணவர்களை ஆண்டுதோறும் இணைப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும் ஐந்த பாடத் திட்டத்தின் 70 விழுக்காடு நடைமுறைக் கூறுகளையும் மீதமுள்ள 30 விழுக்காடு தொழில் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் நிபுணர்களாக விளங்குவோரின் ஊக்கமளிக்கும் உரைகளையும் உள்ளடக்கியதாகும்.
நிகழ்ச்சியில் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி பேசியதாவது,
“இந்த ஐந்து நாள் நிகழ்வில் கற்றுக் கொடுப்பதற்காக, நாட்டிற்கு இன்றியமையாத பல்வேறு முக்கிய தலைப்புகளைத் தேர்வு செய்துள்ளோம். ஐஐடி மெட்ராஸ் நடத்தும் இதுபோன்ற முதல் நிகழ்ச்சி இதுவாகும். தற்போது 100 மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்று உள்ளனர். ஆனால், ஒரு லட்சம் மாணவர்களை சென்றடைவதுதான் எங்கள் நோக்கம்,” என்றார்.
பேராசிரியர் வி.காமகோடி மேலும் பேசுகையில், இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பை நல்கிய தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் மாணவர்கள் தங்கள் வகுப்புகளில் நிறைய கோட்பாட்டைக் கற்றுக் கொள்கின்றனர். ஆனால் செய்முறை வகுப்புகளும் முக்கியம் கல்வி நிறுவனங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்பதில்லை இந்த பயிற்சி வகுப்பின்போது வீடுகளில் கூட செய்முறைகளைச் செய்ய உதவும் கருவிகளை நாங்கள் வழங்குகிறோம். இந்த 1 மாணவர்களும் ஐஐடி மெட்ராஸ்-ல் பட்டம் பெற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்,” எனக் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் தொடக்சுமாக முதலாவது 'பேட்ச்'சில், கிராமப் புறங்களில் இருந்து அரசுப் பள்ளிகளில் படிக்கும் 100 மாணவர்கள் இருப்பிட கோடைகாலப் பயிற்சிக்காக (residential summer) ஐஐடி மெட்ராஸ்க்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். பொறியியல் துறையில் சுற்றுச்சூழல் மற்றும் மின்னணு அம்சங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் தொழில்நுட்ப வளர்ச்சி, பயன்பாட்டுக் கணிதம் உள்ளிட்ட தொடர்பான தலைப்புகள் இடம்பெறும்.
அரியலூர், கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம் திருச்சி திருவண்ணாமலை விழுப்புரம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் வந்துள்ளனர். மாணவர்களை இந்த வளாகத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை இக்கல்வி நிறுவனம் செய்திருப்பதுடன், உணவு மற்றும் தங்குமிட வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 100. மின்னணு பரிசோதனைகளை மாணவர்கள் மேற்கொள்ளும் வகையில் சிறப்புக் கருவியும் தயார் செய்யப்பட்டுள்ளது.