Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

24,000 பேருக்கு வேலை வாய்ப்பு: தமிழகத்தில் ரூ.171.24 கோடி மதிப்பீட்டில் 5 தொழிற்பேட்டைகள் திறப்பு!

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் வாயிலாக ரூ.171.24 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள 5 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் ரூ.2.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.

24,000 பேருக்கு வேலை வாய்ப்பு: தமிழகத்தில் ரூ.171.24 கோடி மதிப்பீட்டில் 5 தொழிற்பேட்டைகள் திறப்பு!

Monday June 27, 2022 , 3 min Read

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் வாயிலாக ரூ.171.24 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள 5 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் ரூ.2.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.

தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாடு மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அவைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனமாக நிறுவப்பட்டது.

புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் தொழில் முனைவோர் உடனடியாக தொழில் தொடங்க ஏதுவான வசதிகளை உள்ளடக்கிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள் உருவாக்குதல், தொழில்முனைவோர் குழுமங்களுக்கு பொது வசதி மையங்கள் ஏற்படுத்துதல், தொழிற்பேட்டைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற செயல்பாடுகளை தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

MSME

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.06.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் வாயிலாக ரூ.171.24 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ள 5 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் தண்டரையில் உள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஜவுளி பூங்காவில் ரூ.2.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பொது வசதி கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, புதிய தொழிற்பேட்டைகளின் தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

5 தொழிற்பேட்டைகள் திறப்பு:

  • தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் வாயிலாக செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், ஆலத்தூர் கிராமத்தில் 67.96 ஏக்கர் பரப்பளவில் ரூ.115.07 கோடி திட்ட மதிப்பீட்டில் 2000 நபர்கள் நேரடியாகவும், 4000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் 192 தொழில் மனைகளுடன் பகுதி-IIல் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழிற்பேட்டைகள் திறக்கப்பட்டுள்ளன.

  • திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பெரியகோளப்பாடி கிராமத்தில் 57.181 ஏக்கர் பரப்பளவில் ரூ.11.82 கோடி திட்ட மதிப்பீட்டில் 1800 நபர்கள் நேரடியாகவும், 4000 நபர்கள் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெறும் வகையில் 171 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

  • சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், பெரிய சீரகப்பாடி கிராமத்தில் 56.81 ஏக்கர் பரப்பளவில் ரூ.22.22 கோடி திட்ட மதிப்பீட்டில் 1,000 நபர்கள் நேரடியாகவும், 2,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில், 79 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை இன்று முதல் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

  • நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், இராசம்பாளையம் கிராமத்தில் 36.80 ஏக்கர் பரப்பளவில் ரூ.9.72 கோடி திட்ட மதிப்பீட்டில் 1,200 நபர்கள் நேரடியாகவும், 2,500 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் 107 தொழில்மனைகளுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழிற்பேட்டை;

  • புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், ஆலங்குடி கிராமத்தில் 36.47 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.41 கோடி திட்ட மதிப்பீட்டில் 1,200 நபர்கள் நேரடியாகவும், 2,500 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் 105 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

  • செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், தண்டரை கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஜவுளி பூங்காவில் 0.56 ஏக்கரில், 5700 சதுர அடி கட்டட பரப்பில் வங்கி, உணவகம், மருந்தகம், நிர்வாக அலுவலகம் மற்றும் கூட்டரங்கம் போன்ற வசதிகளுடன் தொழில்முனைவோர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பொது வசதி கட்டடத்தையும் முதல்வர் திறந்துவைத்தார்.
மொத்தம் ரூ.171.24 கோடி மதிப்பீட்டில் 7200 நபர்கள் நேரடியாகவும், 15,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 5 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது வசதிக் கட்டடம் ஆகியவற்றை முதல்வர் இன்று திறந்துவைத்துள்ளார்.

ஒரே ஆண்டில் 8,586 இளம் தொழில் முனைவோர்களுக்கு ரூ.275 கோடி மானியம்:

இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண் ராய், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஆனந்த், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தலைமைச்செயலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் அளித்த பேட்டியில்,

"குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் வாழ்த்துகள். கொரோனாவால் தொழில்கள் முடங்கிப்போன நிலையில் தொழிலை மேம்படுத்த பல்வேறு சலுகைகள், வசதிகள் கொரோனா காலக்கட்டத்தில் 3,545 நிறுவனங்களுக்கு ரூ.360 கோடி முதலீட்டு மானியம் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது,” என்றார்.
MSME

தொடர்ந்து பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன்,

“அரசு பொறுப்பேற்ற ஒரு வருடத்தில் 8,586 இளம் தொழில் முனைவோர்களுக்கு ரூ.275 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. சொத்தே இல்லாமல் இருப்பவர்களுக்கு ரூ.100 கோடி மதிப்பில் கடன் உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. தாய்கோ வங்கியில் 75% தொழில் தொடங்குபவர்களுக்கே பணம் தர ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒற்றைச்சாளர முறை மூலமாக 190 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. எந்தெந்த மாவட்டங்களில் எந்தத்தொழில் சிறந்து விளங்குகிறதோ அந்தத் தொழில் ஊக்குவிக்கப்படுகின்றது,” எனத் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் வாயிலாக ரூ.171.24 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ள 5 புதிய தொழிற்பேட்டைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். புதிய தொழிற்பேட்டைகளின் தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளையும் வழங்கினார்.