கொரோனா சமயத்திலும் 2020ல் மேலும் செல்வந்தர்கள் ஆன 13 பில்லியனர்கள்!
மார்ச் இறுதியிலிருந்து அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்குக்கு பின், பெரும் பணக்காரர்களாக சிலர் உருவெடுத்துள்ளனர். பல பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உயர்ந்துள்ள இந்த பில்லியனர்கள் குறித்து பார்ப்போம்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக உலக பொருளாதாரமே சரிவைக்கண்டது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான வணிகர்கள் தங்கள் தொழிலை இழந்தனர். தொழில்கள் முடங்கியதால் பலரின் சொத்து மதிப்புகள் குறைத்தன. இப்படி ஒருபக்கம் இருந்தாலும், உலகப் பணக்காரர்கள் இந்த காலக்கட்டத்தில் தான் மேலும் பணக்காரர்களாக வளர்ச்சி அடைந்துள்ளனர்.
மார்ச் இறுதியிலிருந்து அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்குக்கு பின், பெரும் பணக்காரர்களாக சிலர் உருவெடுத்துள்ளனர். பல பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உயர்ந்துள்ள இந்த பில்லியனர்கள் குறித்து பார்ப்போம்.
ஜெஃப் பெசோஸ் -அமேசான் நிறுவனர்
ஏப்ரல் 2020 முதல் 2020 டிசம்பர் வரை அவரது சொத்து 74 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.
மார்க் ஜுக்கர்பெர்க் (பேஸ்புக் சிஇஓ)
ஏப்ரல் 2020 முதல் 2020 டிசம்பர் வரை அவரது சொத்து 43.2 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
பில் கேட்ஸ் (பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணை நிறுவனர்)
ஏப்ரல் 2020 முதல் 2020 டிசம்பர் வரை அவரது சொத்து 22.1 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
வாரன் பஃபெட் (தலைமை நிர்வாக அதிகாரி, பெர்க்ஷயர் ஹாத்வே)
ஏப்ரல் 2020 முதல் 2020 டிசம்பர் வரை அவரது சொத்து 17 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.
லாரி எலிசன், (தலைவர், சி.டி.ஓ மற்றும் நிறுவனர், ஆரக்கிள்)
ஏப்ரல் 2020 முதல் 2020 டிசம்பர் வரை அவரது சொத்து 28.7 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
எலான் மஸ்க் (டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர்)
ஏப்ரல் 2020 முதல் 2020 டிசம்பர் வரை அவரது சொத்து 118.2 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.
முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர்)
ஏப்ரல் 2020 முதல் 2020 டிசம்பர் வரை அவரது சொத்து 37.6 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது.
கவுதம் அதானி (அதானி குழுமத்தின் தலைவர்)
ஏப்ரல் 2020 முதல் 2020 டிசம்பர் வரை அவரது செல்வம் 18.9 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது.
செர்ஜி பிரின் (கூகிள், இணை நிறுவனர்)
ஏப்ரல் 2020 முதல் 2020 டிசம்பர் வரை அவரது சொத்து 24.8 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது.
அமன்சியோ ஒர்டேகா (ஜாராவின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர்)
ஏப்ரல் 2020 முதல் 2020 டிசம்பர் வரை அவரது சொத்து 18.4 பில்லியன் டாலர் உயர்ந்தது.
ஜாக் மா (அலிபாபா குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர்)
ஏப்ரல் 2020 முதல் டிசம்பர் 2020 வரை அவரது செல்வம் 22 $ பில்லியனால் உயர்ந்தது.
ஸ்டீவ் பால்மர் (உரிமையாளர், லாஸ் ஏஞ்சல்ஸ் கிளிப்பர்ஸ்)
ஏப்ரல் 2020 முதல் 2020 டிசம்பர் வரை அவரது செல்வம் 22.9 $ பில்லியனாக உயர்ந்தது.
லாரி பேஜ் (கூகிள் இணை நிறுவனர்)
ஏப்ரல் 2020 முதல் 2020 டிசம்பர் வரை அவரது செல்வம் 25.1 $ பில்லியனாக உயர்ந்தது.