Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்யணும்’ - இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் கருத்து சர்ச்சை ஆனது ஏன்?

இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

‘இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்யணும்’ - இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் கருத்து சர்ச்சை ஆனது ஏன்?

Saturday October 28, 2023 , 3 min Read

இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இன்ஃபோசிஸின் நிறுவனர் நாராயணமூர்த்தி, பணி கலாச்சாரம் குறித்து சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வளர்ந்த நாடுகளை இந்தியா பிடிக்க வேண்டுமானால், இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

70 மணி நேர பணி நேரம்:

பொதுவாக இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வேலை நேரம் 8 முதல் 9 மணி நேரம் வரை உள்ளது. சில ஐடி நிறுவனங்களில் வேலை நேரம் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் என்றாலும், வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கின்றன. இந்நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ள கருத்து ஐ.டி. துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

infosys

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி தற்போது அதிர்ச்சிகரமான கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த 20, 30 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ள நாடுகளின் சார்பாக இந்தியா நிற்க வேண்டுமானால், இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார்.

யூடியூப்பில் வெளியிடப்பட்ட 3one4 கேபிட்டலின் பாட்காஸ்ட் 'தி ரெக்கார்ட்' இன் முதல் எபிசோடில் இந்தியாவின் கட்டுமானம், தொழில்நுட்பம் நிறுவனமான இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி பங்கேற்றார். இந்த பாட்காஸ்டில் அவரிடம் இன்போசிஸின் முன்னாள் சிஎஃபோ மோகன்தாஸ் பாய் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அப்போது இந்திய இளைஞர்கள் குறித்து நாராயண மூர்த்தி தெரிவித்துள்ள கருத்து சோசியல் மீடியாவில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.

இந்திய இளைஞர்கள் குறித்து விமர்சனம்:

இந்தியாவின் வேலை உற்பத்தித் திறன் உலகிலேயே மிகக் குறைவு என்ற நாராயண மூர்த்தி, சீனா உள்ளிட்ட பிற நாடுகளை பிடிக்க, இந்திய இளைஞர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் இதைப் பின்பற்றி வெற்றி பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

"உலகிலேயே இந்தியாவில் வேலை உற்பத்தித்திறன் மிகக் குறைவு. நாம் வேலை உற்பத்தியை அதிகரிக்கவில்லை என்றால், அது உண்மையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், நாட்டில் நாம் அன்றாடம் காணும் ஊழலை ஒழிக்காவிட்டால்; இதுபற்றி நாம் விரைவான முடிவுகளை எடுக்கவில்லை என்றால்; சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளுக்கு எதிராக இந்தியாவால் நிற்க முடியாது. அதனால்தான் இளைஞர்கள் சுயமாகச் சிந்தித்து, வாரத்தில் 70 மணிநேரம் உழைக்க உறுதிபூண்டு இந்தியாவின் வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும்," எனத் தெரிவித்துள்ளார்.
infosys
இந்தியர்களின் கலாசாரம், பணி பாரம்பரியம் கண்டிப்பாக மாற வேண்டும். ஒழுக்கம், விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் அரசுகள் எதையும் செய்ய முடியும். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்று விளக்கினார்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான், ஜெர்மனி மக்கள் ஓய்வின்றி உழைத்தது போல், இந்திய இளைஞர்களும் உழைக்க வேண்டும் என்ற நாராயணமூர்த்தியின் கருத்துக்கு நெட்டிசன்கள் மத்தியில் நெகட்டிவ் கமெண்ட்களை குவித்து வருகிறது. மேலும், 70 மணி நேரம் வேலை செய்வதாக அவர் கூறியதை பல ஐடி ஊழியர்கள் ஏற்கவில்லை.

சோசியல் மீடியாக்களில் நாராயணமூர்த்தியின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 2005ல், இன்ஃபோசிஸில் புதிதாக ஒரு ஊழியருக்கு ஆண்டுக்கு 3.5 லட்சம் சம்பளம் என்றால், 2023ல் அதே சம்பளம் வழங்கப்படுவதாகவும், அதே ஆண்டுக்கு 15 லட்சம் பேக்கேஜ் கொடுத்தால், 40 மணிநேரம் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்றும் இளைஞர்கள் பதிவிடத் தொடங்கியுள்ளனர்.

infosys

குறைந்த சம்பளத்தில் நீண்ட நேரம் வேலை செய்வது எப்படி என கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், நாராயணமூர்த்தியின் கருத்துகளுக்கு பதிலளித்த, ஓலா சிஇஓ பவிஷ் அகர்வால்,

“இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கருத்துடன் தானும் உடன்படுவதாகவும், குறைவாக உழைக்க வேண்டிய நேரம் இதுவல்ல என்றும், பணியை விரைவுபடுத்தி கடினமாக உழைக்க வேண்டிய நேரம் இது,” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

நாராயணமூர்த்தி கூறிய கருத்துகளை சிலர் ஏற்றுக்கொண்டாலும், அவர்களில் பலர் அதிக வேலை செய்தால் அதிக ஊதியம் வழங்கப்படுமா? என்று முக்கியக் கேள்வியை எழுப்பி வருகின்றனர். இதனால், பணி கலாச்சாரம் குறித்து இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் கருத்துக்கள் தற்போது சோசியல் மீடியாவில் காரசாரமான விவாதத்தை கிளப்பியுள்ளது.