2021: ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் அதிகம் ட்ரென்டிங் ஆன தலைப்புகள் எவை தெரியுமா?
2021ம் ஆண்டிற்கான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் சிறந்த ட்ரெண்டிங் தலைப்புகளை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. தடுப்பூசிகள், ஒலிம்பிக்ஸ் உள்ளிட்ட தலைப்புகள் ட்ரெண்டிங்கில் லிஸ்டில் இடம் பெற்றுள்ளன.
2021ம் ஆண்டிற்கான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் சிறந்த ட்ரெண்டிங் தலைப்புகளை Meta நிறுவனம் வெளியிட்டுள்ளது. தடுப்பூசிகள், ஒலிம்பிக்ஸ் உள்ளிட்ட தலைப்புகள் ட்ரென்டிங்கி லிஸ்டில் இடம் பெற்றுள்ளன.
2021ம் ஆண்டு நிறைவு பெற இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால், பிரபல சர்வே நிறுவனங்கள், வார மற்றும் மாத இதழ்கள், பிரபல சோசியல் மீடியாக்கள் என அனைத்தும் இந்த ஆண்டு சிறப்பாக இருந்த விஷயங்கள் மற்றும் பிரபலமான நபர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பகுப்பாய்வின் படி, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ட்ரென்டிங் தலைப்புகள் குறித்த பட்டியலை மெட்டா நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, 2021 ஆம் ஆண்டில், கோவிட் மற்றும் உடல்நலம், விளையாட்டு மற்றும் கலாச்சார தருணங்கள் ஆகிய தலைப்புகளை வகைப்படுத்தி Facebook மற்றும் Instagram இந்திய மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த ட்ரென்டிங் வார்த்தைகளை வெளியிட்டுள்ளது.
கோவிட் மற்றும் ஆரோக்கியம்:
இதனைக் கருப்பொருளாகக் கொண்டு ‘பிரார்த்தனை’ (Prayer), ‘ஆக்ஸிஜன்’ (Oxygen) மற்றும் ‘மருத்துவமனை’ (Hospital) ஆகியவை சிறந்த ட்ரென்டிங் தலைப்புகளாக இருந்துள்ளன. கொரோனா 2வது அலையின் தாக்கம் தீவிரமாக இருந்த போது, ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடுகள் ஏற்பட்டது. அப்போது மக்கள் பிறரிடம் உதவி கோரவும், பிரார்த்திக்கவும், உதவவும் இதுபோன்ற வார்த்தைகளை அதிக அளவில் பயன்படுத்தியுள்ளனர்.
இது பின்னர் கொரோனா தடுப்பூசி பற்றியும், அதன் நன்மைகள் குறித்தும் மக்கள் அதிக அளவில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டதால் ‘தடுப்பூசி’ (Vaccine) என்பதும் ட்ரென்டிங் டாப்பிங்காக இருந்துள்ளது.
இதில் ஒரு ஆச்சர்யமான தலைப்பாக இருப்பது ‘Flaxseed’ எனப்படும் 'ஆளிவிதை' என்ற வார்த்தை இடம் பெற்றது தான். ஆரோக்கியம் தொடர்பான உள்ளடக்கத்தில் ஆளி விதைகளின் நன்மைகள் குறித்து கருத்துக்களை சோசியல் மீடியாவில் நிறைய பேர் விவாதித்தும், பகிர்ந்தும் இருப்பது தெரியவந்துள்ளது.
விளையாட்டு:
2021ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியா வரலாறு படைத்த ஆண்டாக மாறியுள்ளது. ‘டோக்கியோ ஒலிம்பிக்ஸ்’ மற்றும் ‘பாராலிம்பிக்ஸ் கேம்ஸ்’ (Tokyo Olympics and Paralympics Games) ஆகியவற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களைப் பெற்றது. எனவே இந்திய மக்கள் தங்களது வீரர்களை கொண்டாடி தருணங்களில் ‘டோக்கியோ ஒலிம்பிக்ஸ்’ மற்றும் ‘பாராலிம்பிக்ஸ் கேம்ஸ்’, ‘தங்க பதக்கம்’ ஆகிய தலைப்புகளை அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியும் இந்திய அணிக்கு ஒரு மறுபிரவேசமாக அமைந்தது. குறிப்பாக இந்தியா தொடக்க ‘ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின்’ (ICC World Test Championship). இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மேலும், மிதாலி ராஜ், ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜூலன் கோஸ்வாமி போன்ற கிரிக்கெட் வீரர்கள் களத்தில் தங்கள் செயல்பாட்டின் மூலம் இந்தியாவை பெருமைப்படுத்தியதால், ‘மகளிர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்’ (Women's One Day International cricket) ஒரு டிரெண்டிங் தலைப்பாக உள்ளது.
கலாச்சார தருணங்கள் மற்றும் ட்ரெண்டிங்:
இந்தியாவின் பண்டிகை கொண்டாடங்களைப் பொறுத்தவரை ‘கர்பா’ என்ற ஹேஷ்டேக் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பாலிவுட் திரைப்படமான ‘ஷெர்ஷா’ வெளியானது. எனவே பரம் வீர் சக்ரா விருது பெற்ற ‘கேப்டன் விக்ரம் பத்ரா’வை அவரது துணிச்சலுக்காக மக்கள் சோசியல் மீடியாவில் நினைவு கூர்ந்தனர். இதனால் Independence Day, Captain Vikram Batra, Shershaah ஆகிய ஹேஷ்டேக்குகள் மற்றும் தலைப்புகள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கருப்பொருளில் இறுதியாக 'நகைகள்' மற்றும் 'கிரிப்டோகரன்சி' ஆகியவை மக்கள் அதிக ஆர்வத்துடன் பயன்படுத்திய ஹேஷ்டேக்குகளாக இடம் பெற்றுள்ளது.
ரீல்ஸ் ட்ரெண்டிங்:
இன்ஸ்டாகிராமில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை சுண்டி இழுக்கும் ரீல்ஸ் சேவையில் பிரபலமான பல பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
1. ஷெர்ஷாவில் இருந்து ‘ராதன் லம்பியன்’
2. தனிஷ்க் பாக்ச்சியின் ‘லவ் வந்திட்டி’
3. பாடகர் ராஜ் பர்மன் பாடிய ‘து மில்நா ஹை முஜே’ ஆகிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
ரீல்ஸில் பிரபலமான சவால்கள்:
(1) பச்பன் கா பியார், இது லிப் சிங்க் & டான்ஸ் ட்ரெண்ட்
(2) பாரிஷ் கி ஜாயே, இது ரீமிக்ஸ் & ஏஆர் எஃபெக்ட்
(3) லுட் கயே, இதுவும் ஒரு லிப் சிங்க் ட்ரெண்ட் ஆகும்.
தகவல் உதவி: Meta