2021ல் Whatsapp கொண்டு வந்த புதுமையான அம்சங்கள் என்னென்ன?
கொரோனா கால ஊரடங்கின் போது மக்கள் ஒன்றாக இணைந்திருக்க முடியாத நேரங்களில் தூரங்களை குறைத்து மனங்களை இணைக்க உதவிய வாட்ஸ் அப் செயலி 2021ம் ஆண்டில் செய்த சில முக்கிய சிறப்பம்சங்களைக் பட்டியலிட்டுள்ளது.
கொரோனா கால ஊரடங்கின் போது மக்கள் ஒன்றாக இணைந்திருக்க முடியாத நேரங்களில் தூரங்களை குறைத்து மனங்களை இணைக்க உதவிய வாட்ஸ் அப் செயலி 2021ம் ஆண்டில் செய்த சில முக்கிய சிறப்பம்சங்களைக் பட்டியலிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஆப் தான் வீடியோ, ஆடியோ, டாக்குமெண்ட், மெசெஜ் தகவல்களை அனுப்புவதற்கு உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
100க்கும் மேற்பட்ட நாடுகளில், 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் மட்டும் 390 மில்லியன் மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
Meta (ஃபேஸ்புக்) நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் 2020ம் ஆண்டுக்கான வருமானம் 4.9 மில்லியன் என கணிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களின் பட்டியலைப் பொறுத்தவரை ஃபேஸ்புக், யூடியூப்பிற்கு அடுத்த படியாக வாட்ஸ் அப் செயலியை தான் மக்கள் அதிகம் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
வாட்ஸ் அப் 2021ம் ஆண்டில் இந்தியாவில் மேற்கொண்ட சில முக்கிய முயற்சிகள் மற்றும் புதுமையான சிறப்பம்சங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப் சாட் பாட் (CHAT BOT):
கொரோனா தொற்று பரவல் தொடங்கியதில் இருந்து, மக்கள் அதிகாரப்பூர்வமான தகவல்களைக் கண்டறியவும், ஆதரவைத் தேடவும், பெறவும், தொடர்ந்து இணைந்திருக்கவும் விரும்பப்படும் ஊடகமாக WhatsApp இருந்து வந்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கான உதவித் தகவல்களை பகிர்ந்துகொள்ள பயன்படுத்திக்கொள்ளும் வகையில், இன்ட்ராபாட் (IntroBot) எனும் முன்னோடி சேவை உருவாக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டில், மத்திய மற்றும் மாநில நிர்வாகங்கள் வாட்ஸ்அப் பிசினஸ் தளத்தைப் பயன்படுத்தி நாடு முழுவதும் தடுப்பூசி திட்டத்தை கொண்டு சேர்க்க பயன்படுத்தின. 15 வெவ்வேறு மாநில அரசுகள் வாட்ஸ்அப்பில் பிரத்யேக கோவிட் ஹெல்ப்லைன்களை அறிமுகப்படுத்தியது.
இன்று வாட்ஸ்அப்பில் உள்ள MyGov சாட் பாட் மூலமாக தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கம், முன்பதிவுகள் போன்ற பல்வேறு வகையான கோரிக்கைகளை நிர்வகிக்க முடியும். இதுவரை, 55 மில்லியனுக்கும் அதிகமானோர் இதனை பயன்படுத்தியுள்ளனர், 12 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்களது தடுப்பூசி சான்றிதழ்களை தரவிறக்கம் செய்துள்ளனர்.
தானாகவே அழியும் வாட்ஸ்அப் மெசேஜ்:
வாட்ஸ் அப் தனது பயனர்களின் கூடுதல் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு அனுபவங்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வந்தது. அதில் வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் அனுப்பும் தகவல்கள் தானாகவே அழியும் வசதி பெரும்பாலானோரால் விருப்பப்படும் அம்சமாக பார்க்கப்பட்டது.
இதன்படி, பயனாளர்கள் தாங்கள் அனுப்பும் அனைத்து தகவல்களையும் ஒரு குறிப்பிட்ட அவகாசத்திற்குப் பிறகு அழிந்துவிடும்படி தேர்வு செய்யமுடியும். இந்த அவகாசம் 24 மணி நேரமாகவோ, 7 நாட்களாகவோ அல்லது 90 நாட்களாகவோ இருக்கலாம் வாட்ஸ் அப் 2021ம் ஆண்டு அறிவித்திருந்தது.
மெசேஜ் லெவல் ரிப்போர்டிங்:
வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுக்குப் பிடிக்காத உள்ளடக்கத்தை பற்றி புகார் அளிக்க மெசேஜ் லெவல் ரிப்போர்டிங் (Message Level Reporting) என்ற சேவையை 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு வந்த விரும்பதகாத மெசெஜ் குறித்து நிறுவனத்திடம் நேரடியாக புகாரளிக்கலாம்.
மேலும், ஐ-போனுக்கான டச் ஐடி மற்றும் ஃபேஸ் ஐடி மற்றும் ஆண்ட்ராய்டுக்கான கைரேகை பூட்டு மற்றும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட காப்புப்பிரதி, பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை வழங்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
வாட்ஸ் அப் மூலம் பணப் பரிவர்த்தனை:
இந்தியாவின் சமூக-பொருளாதார மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கு வாட்ஸ் அப் தொடர்ந்து பங்களித்து வருகிறது. அதன் அடுத்த கட்டமாக 2021 ஆம் ஆண்டு இந்நிறுவனம் ‘வாட்ஸ்அப்பில் மூலம் பணம் செலுத்தும்’ வசதியை அறிமுகப்படுத்தியது. யுபிஐ உடன் இணைக்கப்பட்ட வங்கி எண் மூலமாக மெசெஜ் அனுப்புவது போல் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியை முதலில் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியது.
அதன் பின்னர், இந்தியர்களிடையே இதை மேலும் எளிமையாக்கும் விதமாக ரூபாய் குறியீடான ₹ -யை தனது குறுஞ்செய்தி சேவையில் இணைத்தது. மேலும் வாட்ஸ் அப் கேமரா மூலம் கியூஆர்கோட்-களை(QR Code) ஸ்கேன் செய்தும் பணம் செலுத்தும் வசதி மேம்படுத்தப்பட்டது.
வாட்ஸ்அப் பிசினஸ் APP:
வாட்ஸ் அப் மூலமாக செய்திகள், புகைப்படப் பரிமாற்றம், குரல் ஆடியோக்கள், வீடியோக்கள் மற்றும் பணப்பரிவர்த்தனை ஆகிய சேவைகள் கிடைக்கப்பெற்று வந்த நிலையில், வாட்ஸ்அப் பிசினஸ் (WhatsApp Business) என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. வர்த்தகம் தொடர்பான அனைத்து தகவல்களும் இடம்பெறும் என்றும் தொழிற்துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பயனாளர்களும் நேரடியாக நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டுப் பெற முடியும்.
உலகிலேயே முதன் முறையாக வாட்ஸ்அப் பிசினஸ் பிளாட்ஃபார்மில் Uber இன் அதிகாரப்பூர்வ WhatsApp chatbot மூலம் Uber சவாரிக்கு முன்பதிவு செய்ய மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது சிறந்த உதாரணம் ஆகும். இந்த இலவச வாட்ஸ்அப் பிசினஸ் ஆப் 15 மில்லியனுக்கும் அதிகமான சிறு மற்றும் குறு வணிகர்கள் தங்களது டிஜிட்டல் தளத்தை பயன்படுத்த உதவுகிறது.
வாட்ஸ் அப் சேவா மூலமாக சுயதொழில் பெண்கள் சங்கத்துடன் (SEWA) இணைந்து, காஷ்மீரைச் சேர்ந்த பெண் விவசாயிகள் குஜராத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆயிரக்கணக்கான கிலோகிராம் ஆப்பிள் மற்றும் செர்ரிகளை விற்க உதவுகிறது.
மஹாராஷ்டிராவை தளமாகக் கொண்ட அமைப்பான மன் தேஷி அறக்கட்டளையுடன் இணைந்து பெண்களுக்கு டிஜிட்டல் மற்றும் நிதியியல் கல்வியறிவின் பல்வேறு அம்சங்களுக்கான பயிற்சி பட்டறைகளையும் வழங்கி வருகிறது.
2022 ஆம் ஆண்டு நெருங்கிவிட்ட நிலையில், வாட்ஸ்அப் உலகை தனிப்பட்ட முறையில் இணைப்பதில் உறுதியாக உள்ளது. வணிகர்கள், வாடிக்கையாளர்களுடனும், பயனுள்ள குடிமக்கள் ஈடுபாடு மற்றும் திறமையான நிர்வாகத்தை இயக்க அரசாங்கங்களுக்கு ஆதரவளிக்கிறது. மேலும் டிஜிட்டல் இந்தியாவின் ஒரு அங்கமாகவும் வாட்ஸ் அப் செயலட்டு வருகிறது. டிஜிட்டல் உள்ளடக்கம்.