சென்னை டு மைசூர் ஜெட் வேகத்தில் ‘வந்தே பாரத்’ ரயில் - எவ்வளவு நேரத்தில் போகும் தெரியுமா?
சென்னை - மைசூர் இடையிலான புதிய வந்தே பாரத் ரயிலுக்கான சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக முடிந்துள்ளது.
சென்னை - மைசூர் இடையிலான புதிய வந்தே பாரத் ரயிலுக்கான சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக முடிந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதனை சிறப்பிக்கும் விதமாக 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் இயக்க உள்ளதாக ரயில்வே அறிவித்தது.
'வந்தே பாரத்' என்பது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ரயிலாகும். இதனை தயாரிக்கும் பணி சென்னையில் ஐசிஎஃப்-யில் நடைபெற்று வருகிறது.
பயோ-வாக்யூம் டாய்லெட்டுகள், வைஃபை ஆன்போர்டு, முழு தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, எல்.இ.டி டிவி, 24 மணி நேரமும் உணவு மற்றும் தண்ணீர் சப்ளை மற்றும் பாதுகாப்பு என தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ள வந்தே பாரத் ரயில், சதாப்தி எக்ஸ்பிரஸை விட மணிக்கு 180 கிமீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்டதாகும்.
2019ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் சேவை டெல்லி - வாரணாசி வழித்தடத்திலும், 2-வது சேவை டெல்லி - காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3-வது சேவை மும்பை - காந்தி நகர் வழித்தடத்திலும், 4-வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் 5வது சேவைக்கான சோதனை ஓட்டம் தற்போது வெற்றிகரமாக அரங்கேறியுள்ளது.
சென்னை டூ மைசூர்:
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் அதிவேக ரயில் வந்தே பாரத் ரயிலுக்கான சோதனை ஓட்டம் தென்னிந்தியாவில் முதல் முறையாக வெற்றிகரமாக முடிந்துள்ளது. சென்னை எம்ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 5.50 மணிக்கு சோதனை ஓட்டமாக வந்தே பாரத் ரயில் மைசூரு புறப்பட்டு சென்றது. இந்த சோதனை ஓட்டத்தை தென்மண்டல ரயில்வே மேலாளரான மல்லையா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பெங்களூரு சிட்டி சந்திப்பை காலை 10:25 மணிக்கு சென்றடையும் ரயில், பெங்களூருவில் இருந்து காலை 10:30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12:30 மணிக்கு இறுதி இலக்கான மைசூருவை அடைந்தது. இந்த ரயில் சுமார் 497 கிமீ தூரத்தை 6 மணி 40 நிமிடங்களில் கடக்கும் மற்றும் வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11ம் தேதி பெங்களூரு செல்ல உள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் ஐந்தாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். 5,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை திறந்து வைக்கிறார்.
மேலும், பெங்களூருவின் நிறுவனர் நடபிரபு கெம்பேகவுடாவின் 108 அடி உயர சிலையையும் திறந்து வைக்க உள்ளார்.
ஸ்ரீராமாயண யாத்திரை: அயோத்தி டூ ராமேஸ்வரம் வரை ஸ்பெஷல் டூர் பற்றி தெரியுமா?