வைரல் ஆன 15 வயது சிறுமி பதிவிட்ட ஜம்மு காஷ்மீர் பனிப்பொழிவு வீடியோ...!
மாநிலத்தில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு குறித்து 15 வயதான எய்துஹா இக்பால் டிவிட்டரில் பதிவிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. அந்தப் பகுதியின் புகைப்படங்களைப் பார்க்கையில் மாநிலம் முழுவதும் பனிமூட்டம் நிலவுவதைப் பார்க்கமுடிகிறது.
கடுமையான குளிர் நிலவுவதால் பெரும்பாலானோர் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில் ஷோபியன் மாவட்டத்தைச் சேர்ந்த சில குழந்தைகள் முதல் தளம் வரை பனிமூட்டம் சூழ்ந்துள்ள பகுதியில் ஒரு ரகசிய குகையை உருவாக்கியுள்ளனர். 15 வயதான எய்துஹா இக்பால் தனது வீடியோவில் இது குறித்து பதிவு செய்துள்ளார். கைகளில் மைக்ரோபோனுக்கு பதிலாக மார்பிளால் ஆன கம்பைப் பிடித்தவாறே இந்தக் குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்தும் படிப்பிலிருந்தும் தப்பித்து மறைந்துகொள்வதற்காகவே இந்த குகையைப் பயன்படுத்திக்கொள்வதாக தனது வீடியோவில் பதிவு செய்துள்ளார். மாநிலத்தில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு குறித்தும் அவர் பதிவிட்டுள்ளதாக ’இண்டியன் எக்ஸ்பிரஸ்’ குறிப்பிட்டுள்ளது.
19 விநாடிகள் பதிவாகியுள்ள இந்த வீடியோ வைரலாகப் பரவியுள்ளது. அதன் தனித்துவமான தன்மைக்காகவும் வேடிக்கையான அம்சத்திற்காகவும் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளதாக ’டிஎன்ஏ இண்டியா’ தெரிவித்துள்ளது.
குழந்தைகள் இவ்வாறு குகை அமைத்ததற்கான காரணம் குறித்து எய்துகா விவரிக்கையில்,
“இந்தக் குழந்தைகளின் பெற்றோர் நாள் முழுவதும் படிக்கவைப்பதால் அதிலிருந்து தப்புவதற்காகவே இதைக் கட்டியுள்ளனர். இவர்களது பெற்றோர்களுக்கு இதுவரை இந்த விஷயம் தெரியாது,” என்கிறார்.
பிப்ரவரி 8-ம் தேதி ஃபஹத் ஷாவால் இந்த வீடியோ டிவிட்டரில் பகிர்ந்துகொள்ளப்பட்டது. அப்போதிருந்து 1,426 முறை மறுட்வீட் செய்யப்பட்டுள்ளது. 47,000 பேர் இந்தப் பதிவிற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். காஷ்மீரிலும் நாடு முழுவதும் உள்ள பத்திரிக்கையாளர்கள் இந்தச் சிறுமியின் திறமையைப் பாராட்டி வருகின்றனர்.
கட்டுரை : THINK CHANGE INDIA