இன்ஸ்டாவில் 20 கோடி ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்தியர்; சாதனை படைத்த விராட் கோலி!
இன்ஸ்டாகிராமில் 20 கோடி ஃபாலோயர்களைக் கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் 20 கோடி இன்ஸ்டாகிராவில் 20 கோடி ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்தியர்; சாதனை படைத்த விராட் கோலி!
இன்ஸ்டாகிராமில் 20 கோடி ஃபாலோயர்களைக் கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.
இன்றைய இன்டர்நெட் யுகத்தில் ஃபேஸ்புக், ட்விட்ட்ரை விட இன்ஸ்டாகிராம் இளம் தலைமுறையினர் விரும்பும் சோசியல் மீடியா தளமாக உள்ளது. இதில் சாமானியர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். தங்களது வாழ்க்கை முதற்கொண்டு பல விஷயங்கள் தொடர்பாகவும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பிரபலங்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஏராளமான பிரபலங்களில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியும் ஒருவர். இவர் மட்டுமல்ல இவரது மனைவி அனுஷ்கா சர்மா, குழந்தை வாமிகாவும் பிரபலமானவர்களாக வலம் வருகின்றனர். தற்போது இன்ஸ்டாகிராமில் இந்தியர்கள் யாருமே செய்யாத சாதனை படைத்து விராட் கோலி அசத்தியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் 20 கோடி ஃபாலோயர்கள்:
உலக அளவில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் 200 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட பிரபலமாக விராட் கோலியும் இடம் பிடித்துள்ளார்.
அந்தபட்டியலில் விராட் கோலி கடைசி இடத்தைப் பிடித்திருந்தாலும், இந்தியாவிலேயே 20 மில்லியன், அதாவது 20 கோடி ஃபாலோயர்களைப் பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட பிரபலங்கள்:
கிறிஸ்டியானோ ரொனால்டோ - 451 மில்லியன் ஃபாலோயர்கள்
கைலி ஜெனர் - 345 மில்லியன் ஃபாலோயர்கள்
லியோனல் மெஸ்ஸி - 334 மில்லியன் ஃபாலோயர்கள்
செலினா கோமஸ் - 325 மில்லியன் ஃபாலோயர்கள்
கிம் கர்தாசியன்- 316 மில்லியன் ஃபாலோயர்கள்
அரியானா கிராண்டே - 315 மில்லியன் ஃபாலோயர்கள்
பியான்ஸ்- 261 மில்லியன் ஃபாலோயர்கள்
க்ளோ கர்தாஷியன் - 249 மில்லியன் ஃபாலோயர்கள்
கெண்டல் ஜென்னர் - 241 மில்லியன் ஃபாலோயர்கள்
ஜஸ்டின் பீபர் - 239 மில்லியன் ஃபாலோயர்கள்
டெய்லர் ஸ்விஃப்ட் - 213 மில்லியன் ஃபாலோயர்கள்
ஜெனிஃபர் லோபஸ் - 212 மில்லியன் ஃபாலோயர்கள்
விராட் கோலி - 200 மில்லியன் ஃபாலோயர்கள்
2021ம் ஆண்டு ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட “2021-ன் அதிகம் விரும்பபப்ட்ட ட்வீட்” என விராட் கோலி தனக்கு மகள் பிறந்திருப்பதை அறிவித்த ட்வீட் லைக்குகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.