'WeddingWishlist'- மணமக்கள் சாய்ஸில் திருமணப் பரிசளிக்க உதவும் அசத்தல் தளம்!
திருமணம் என்றாலே, மாப்பிள்ளை, மணப்பெண், மாங்கல்யம், குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், விருந்து இவையெல்லாம் நம் நினைவிற்கு உடனே வருபவை. அதைவிட முக்கியமான சுவாரசியமான ஒன்று கல்யாணப்பரிசு. திருமண வரவேற்பில், ஜோடிகள் கைகளில் குவியும் பரிசுப்பொருட்கள், அதை பின்னர் பிரித்து பார்க்கும் உற்சாகம் இதானே வழக்கம். ஆனால், பல சமயங்களில் அந்த பரிசு பொருட்களைப் பிரித்து பார்க்கும்போது, பெரும்பாலானவை அவர்களின் கனவு வாழ்க்கைக்கு தேவையற்றதாய் இருந்துவிடுகிறது. பொதுவாக பரிசுப்பொருட்களாய்; கடிகாரங்கள், மலர் குவளைகள், குடுவைகள், விளக்குகள் என்றே அமைந்துவிடுகிறது. பரிசு கொடுக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களும் கல்யாணப் பரிசாக என்ன கொடுப்பதென்று தெரியாமல் கடைசியில் இதுபோன்ற ஏதோ ஒரு சாதரண பரிசையே வாங்கி கொடுத்துவிடுகின்றனர்.
ஏன் அவற்றிக்கு மாறாக புதிய ஜோடியின் கனவு வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருட்களை நாம் பரிசாக அளிக்கக்கூடாது? இந்த சிந்தனையைக் கொண்டு தொடங்கப்பட்ட தளமே 'வெட்டிங் விஷ்லிஸ்ட்.காம்' (WeddingWishlist.com). இந்த இணையத்தளத்தில், திருமணம் செய்து கொள்ளப்போகும் தம்பதியினர், தங்கள் புதிய வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை அவர்களே தேர்வு செய்யலாம். பின் நண்பர்களும், உறவினர்களும் அந்த பொருட்களுக்குப் பணம் செலுத்தி அதனைப் பரிசாக அளிக்கலாம். ஒருவேளை செலுத்த முடியாத தொகையில் பரிசுப்பொருள் இருந்தால், அதற்கு நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஒன்று சேர்ந்து, அதற்கான தொகையை செலுத்தி அப்பரிசு பொருளைக் கல்யாண பரிசாக வழங்கலாம். கேட்கவே சுவாரசியமான இந்த தொழில்முனைவின் தொடக்கக் கதை குறித்து, வெட்டிங் விஷ்லிஸ்ட்-இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான 'கனிகா சுப்பையா' பகிர்ந்து கொண்டவை இதோ!
புதுமை பிறந்த வழி
திருமணத்திற்கு பின் தனக்கு கிடைத்திருக்கும் பரிசுப்பொருட்கள் குறித்து கனிகாவின் தோழி ஒருவர் புலம்பி இவரிடம் மனம் வருந்தியதுதான், இந்த புது யோசனைக்கு வழிவகுத்துள்ளது. அமெரிக்காவில் இவர் கலந்து கொண்ட அனைத்து திருமணங்களிலும் 'வெட்டிங் ரெஜிஸ்டரி' என்று பதிவை பார்த்திருக்கிறார். அமெரிக்காவில் 89% திருமணங்களில் இந்த பதிவிருக்கும். அதில் தம்பதியினருக்கு தேவையான பொருட்களை விருந்தாளிகள் கல்யாணப்பரிசாக நன்கொடை வழங்கலாம். இந்த சிறு கருத்துப்படிவத்தை, நம் மக்களுக்கு ஏற்றவாறு எளிதாக வடிவைத்த கனிகா, 'வெட்டிங் விஷ்லிஸ்ட்' எனும் தளத்தை தொடங்கினார். 'சதீஷ் சுப்ரமணியன்' என்பவர் 'வெட்டிங் விஷ்லிஸ்ட்'-இன் துணை நிறுவனராக இவருடன் இணைந்தார். இதன் தொழில்நுட்ப சார்ந்த வேலைகளை சதீஷ் கையாளுகிறார்.
கனிகா கடந்து வந்த பாதை
கனிகா சண்டிகர்-இல் பிறந்து, சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் மற்றும் எம்.பி.ஏ படித்து, பின் கலிபோர்னியாவில் 'மைக்ரோஸ்ட்ரடஜி' எனும் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். 2008இல் இவர் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். அன்றிலிருந்து இந்த தொழில்முனைவில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். இவர்களின் தளத்தில் உள்ள பரிசுப்பொருட்கள் விதவிதமாகவும், புதுமை நிறைந்ததாகவும் உள்ளது. அடிப்படை சமையறைக்கு தேவையான பொருட்கள், வீட்டு அழகுப்பொருட்கள், சாதனங்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பரிசு பொருட்களாகத்தான் இருக்கவேண்டுமா என்ன? இல்லை இவர்களின் தளத்தின் மூலம் திருமண ஜோடிக்கு பரிசாக ஹனிமூன பேக்கேஜ், ஆயுர்வேதா ஸ்பா, போட்டோ ஷூட் எடுக்கக்கூட ஏற்பாடு செய்யமுடியும்.
குழுவின் நோக்கம் மற்றும் முதலீட்டளர்கள் விவரம்
புதிய ஜோடிக்காக 'என்ன வாங்க வேண்டும்?', 'எப்படி வாங்க வேண்டும்?', 'எங்கு வாங்கி அனுப்ப வேண்டும்?' முதலிய கேள்விகளுக்கு பதிலாய் நல்ல கல்யாணப் பரிசை விருந்தாளிகள் அளிக்க வழிவகுப்பது தான் 'வெட்டிங் விஷ்லிஸ்ட்'.
ஆன்லைன் வாடிக்கையாளர் பரிசு தளமான 'செர்ரிடின்', இரண்டு கோடி ரூபாய் இதில் முதலீடு செய்து, பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பரிசுப்பொருட்களை வெட்டிங் விஷ்லிஸ்ட்-க்கு கொடுத்து, பரிசு பங்குத்தாரராக இருந்துவருகிறது. இந்திய ஃபேஸ்புக்-நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான 'கிருத்திகா ரெட்டி' மற்றும் முல்டிப்லஸ் எஃயுட்டி நிறுவனத்தின் நிறுவனரான 'ரேணுகா ராமநாத்' ஆகியோர் வெட்டிங் விஷ்லிஸ்ட்-இன் குறிப்பிடத்தக்க முதலீட்டாளர்கள் ஆவர். ரேணுகா, கனிகாவின் முன்மாதிரியும் ஆவார்.
தொழில்நுட்பம், வடிவமைப்பு, சமூக ஊடகங்கள், உள்ளடக்கம், வாடிக்கையாளர் கையகப்படுத்தல், சேவை மற்றும் சந்தைப்படுத்தல் என தனிச்சிறப்புடன் பணியாற்றும் 20 பேர் அடங்கிய குழுவை வெட்டிங் விஷ்லிஸ்ட் கொண்டிருக்கிறது.
மக்களிடம் நல்ல வரவேற்பு
இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் தான், வெட்டிங் விஷ்லிஸ்ட்' நாங்கள் வெளியிட்டோம். எங்கள் சேவை குறித்து வந்த கருத்துகள் எங்களுக்கு திருப்தி மற்றும் மனமகிழ்வை அளிக்கிறது. திருமண ஜோடி மட்டுமல்லாது, திருமண விருந்தாளிகளிடமும் நல்ல வரவேற்பு வருகிறது, என்றார் கனிகா.
'சரியான செயல்பாடு இடத்தை கண்டறிந்து, அவ்விடத்தில் செயல்படுவது', என்பது பெரும்பாலான தொழில்முனைவுகள் சந்திக்கும் பொதுவான சவாலாகும். அதில்தான் நாங்களும் சிக்கல்கள் சந்திக்கிறோம். புதிய இடங்களில் மார்கெடிங் செய்யும் திறன்கொண்ட திறமைசாலிகளைக் கொண்டு செயல்படுவதில் தற்போது நாங்கள் ஈடுப்பட்டு வருகிறோம்.
"மக்கள் புரிந்துகொள்ளவதற்கு இது நகை போன்ற விஷயம் அல்ல. நாங்கள் சமூகத்தில் ஒரு கருத்தை செயல்படுத்த பணிபுரிந்து கொண்டிருக்கிறோம். மக்களுக்கு முறையே விளக்கி, அதனை அர்த்தமுள்ள ஒன்றாய் செயல்படுத்த வேண்டும்", என்கிறார்.
எதிர்காலம் அற்புதமானதாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் தெரிகிறது. அடுத்தக்கட்டமாக, இணையதளம் சேவை மட்டுமின்றி மொபைல் செயலியும் வெளியிட உள்ளார்கள். படைப்பாற்றலுக்கும் கண்டுப்பிடிப்பிற்கும் ஆன்லைன் சேவையில் பெரியளவில் வாய்ப்பும் வரவேற்பும் காணமுடிகிறது. மேலும் எங்களைப் போன்ற ஒத்தக்கருத்துடைய மக்களுடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளை வெட்டிங் விஷ்லிஸ்ட் நிகழ்த்த உள்ளது. எங்கள் சேவையில் மக்களை ஈர்க்க, புதுமையான செயல்பாடுகள் கையாளுவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம் என்று பகிர்ந்து கொண்டார், கனிகா.
அனுபவம் கூறும் அறிவுரை
பெண்கள் மனபூர்வமாக உணர்ச்சியோடு செயல்பட்டு வந்தால், அவர்களும் ஆண்களைப்போல் வெற்றிக்கொள்ள முடியும் என நம்புவதாக கனிகா கூறுகிறார்.
ஒருவன் பெரியதாய் கனவு காணவேண்டும். அதில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு செயல்பட வேண்டும். நாம் செய்யும் ஏது ஒரு காரியமானாலும் அது சமூகத்திற்கு பயனளிப்பதாய் இருக்கவேண்டும், இல்லையெனில், அதை செய்யாமல் இருப்பதே நல்லது. என் அனுபவத்திலிருந்து நான் கூறவது என்னவென்றால்,
"பாலின வேறுபாடு அல்லாது ஒருவரிடம் இருக்கும் நோக்கம் , நேர்மறையான அணுகுமுறை மற்றும் பேரார்வம் தான், விடாமுயற்சியுடன், விருப்பத்துடனும் செயல்படும் தொழில்முனைவோனை வரையறைக்கும்", என்கிறார்.
முக்கியதத்துவம் அளிக்கும் திறன் தான் பல தொழில்முனைவோர்களுக்கு பிடிப்படாத கடினமான திறனாகும். சரியான அணுகுமுறை , விருப்பத்தை தொடர்ந்து கற்று ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சம அளவான அர்ப்பணிப்பு ஆகிய வளரும் தொழில்முனைவோரின் வெற்றி இயக்கிகள் என நான் நம்புகிறேன். வெற்றி என்பது வெவ்வேறு மக்களுக்கு வெவ்வேறு விஷயங்கள் ஆகும் ஆனால் இந்த பண்புகள்தான் ஒருவனது முக்கியமான அடித்தளம் என்று கூறி விடைப்பெற்றார், கனிகா சுப்பையா.
.