'திமிங்கலத்தின் வாந்திக்கு இவ்வளவு மதிப்பா?’ - கோடீஸ்வரர் ஆன தாய்லாந்து மீனவர்!

தாய்லாந்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு லக் அடித்துள்ளது. அவருக்கான அதிர்ஷடம் பாறைப்போன்ற கட்டிகள் வடிவத்தில் வந்துள்ளது.
4 CLAPS
0

அதிர்ஷ்ட தேவதை எப்போது வேண்டுமானாலும் கதவைத்தட்டலாம். கதவைத் தட்டும்போது அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அப்படித்தான் தாய்லாந்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு லக் அடித்துள்ளது. அவருக்கான அதிர்ஷடம் பாறைப்போன்ற கட்டிகள் வடிவத்தில் வந்துள்ளது.

திமிங்கலம் ஒன்றின் வாந்தி, கட்டி வடிவில் கடற்கரையில் கிடைத்துள்ளது. வெறுமனே அது ஒரு வாந்தி என்று கடந்துவிட முடியாது. அதன் மதிப்பு 3.2 மில்லியன் டாலர் என்பது தான் ஆச்சரியம்.

அதுமட்டுமல்லாமல் வாந்தியா! என மூக்கை மூடிக்கொண்டு அருவருப்பாக தள்ளி நின்று பார்க்கும் வகையில் அல்ல அந்த திமிங்கலத்தின் வாந்தி.

அம்பெர்கிரிஸ் (Ambergris) என்று அழைக்கும் திமிங்கலத்திலிருந்து வெளியேற்றப்படும் அந்த வாந்தி தான், உலகின் மிக உயர்ந்த மற்றும் ஆடம்பரமான வாசனை திரவியங்களைத் தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருள்.

220பவுண்டுகள் மதிப்புள்ள இந்த அம்பெர்கிரிஸ் உயர்ந்த வாசனைத் திரவியங்களுள் ஒன்றான Chanel No.5 உள்ளிட்டவற்றுடன் சேர்க்கப்படுகிறது.

இவ்வளவு விலைமதிப்புள்ள, முக்கியமான அம்பெர்கிரிஸை கடற்கரையில் கண்டறிவதற்கு முன்பு வரை, தாய்லாந்தின் அந்த மீனவர் மாதத்துக்கு 670 டாலர் சம்பாதித்துக் கொண்டிருந்தார். தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தவும், பணப் பிரச்னையில் சிக்கிதவித்துக் கொண்டிருந்தவருக்கும் அதிர்ஷ்ட தேவதை அனுப்பிய கட்டியாக வந்துமாட்டியது திமிங்கலத்தின் வாந்தி.

60 வயதான நரிஸ் சுவண்ணாசங், தெற்கு தாய்லாந்தின் ‘நகோன் சி தம்மரத்’ கடற்கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, வெளிர்நிற பாறை போன்ற நன்கு வெளிறிய கட்டிகள் கிடப்பதைக்கண்டார். அவை கழுவி சுத்தம் செய்யப்பட்டதுபோல் காட்சியளித்தன. உடனே அவர் தனது உறவினரை அழைத்து, இந்த கட்டிகளை வீட்டுக்கு எடுத்துச்செல்ல உதவுமாறு கோரினார். வீட்டுக்குச் சென்றதும் அவர்கள், வித்தியாசமாக காட்சியளிக்கும் இந்த கட்டிகள் குறித்து ஆராயத் தொடங்கினர்.

அவர்கள் ஆய்வு செய்து, அம்பெர்கிரிஸை போல இந்த பாறைகள் காணப்படுகின்றன என்பதை தெரிந்துகொண்டவர்கள். அம்பெர்கிரிஸ் குறித்து தேடிப்பார்த்தனர். அப்போது அம்பெர்கிரிஸ் என்பது திமிங்கலத்திலின் அரிய வகை சுரப்பு காரணமாக வெளிவரும் திரவம். இது வாசனை திரவிய உற்பத்தியில் விலையுயர்ந்த மூலப்பொருளாக பயன்படுகிறது. சேனல் 5 போன்ற விலைமதிப்புமிக்க வாசனை திரவியங்களில் பயன்படுத்தபடுகின்றன என்பதை அறிந்துகொண்டனர்.

இதை சோதித்து பார்க்க முடிவு செய்தவர்கள், கட்டியின் மேற்பரப்பை லைட்டர் கொண்டு எரித்து பார்த்தனர். அப்போது, அது உடனே உருகி, அதிலிருந்து கஸ்தூரி போன்ற மணம் வீசத்தொடங்கியது. இது அவர்களின் எண்ண ஓட்டத்தை உறுதிசெய்தது.

”நான் கண்டறிந்த அம்பெர்கிரிஸ் தரமானதாக இருந்த காரணத்தால் அது அதிக விலைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறினார்கள். அதன் விலை என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

“ஒரு கிலோவுக்கு 960,000THB வரை கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். தொழிலதிபர் ஒருவர் இதன் தரத்தை சரிபார்க்க வருவதாக கூறியிருக்கிறார். நான் காவல்நிலையத்துக்குச் சென்று, நான் கண்டறிந்த பொருள் தொடர்பாக பதிவிட வேண்டும். இல்லையென்றால் அதிக விலைமதிப்புடைய இந்த பொருள் திருடுப்போக வாய்ப்பிருக்கிறது,” என்கிறார் அந்த 60வயதான அதிர்ஷ்டசாலி.

தகவல் உதவி - indiatimes

Latest

Updates from around the world