'குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து தொழில் முனைவோர் கற்றுக் கொள்ள வேண்டியவை என்ன?
எப்போதும் தனித்துவத்துக்கு பேர் போன விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளான Super Singer, நீயா நானா, Big Boss, ஐோடி நம்பர்-1 , அது இது எது, லொல்லு சபா போன்ற நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து சூப்பர் ஹிட் ஆன ஷோக்கள். தற்போது இதே போல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ரியாலிட்டி ஷோவான ‘Cook With Comali’ மக்கள் மனதை வெகுவாகக் கவர்ந்து அதில் இடம்பெற்ற பங்கேற்பாளர்களுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உருவெடுத்தது.
Cooking Show என்றாலே இறுக்கமாகவும், Serious ஆகவும் நடத்திக் கொண்டிருந்த நிகழ்ச்சிகளின் மத்தியில் 'Cook With Comali’-யின் தனித்துவமே; fun ஆக மாற்றி அதை break செய்ததே இந்நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணம் ஆகும்.
நன்கு சமைக்க தெரிந்த Cook-ம் சமையலறை பக்கமே செல்லாத Comali-களும் சேர்ந்து சமைப்பதே இந்நிகழ்ச்சியின் Format.
ஒரு சிறந்த Weekend Stress Buster ஆக இருந்த இந்நிகழ்ச்சியில் இருந்து பல படிப்பினைகளை பெறமுடியும். ஒரு தொழில் முனைவோராக இந்நிகழ்ச்சியில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதை இத்தொகுப்பில் காணலாம்...
1.Lateral Thinking-Random Entry Technique :
வித்தியாசமான முரண்பாடு கொண்ட இரு விஷயத்தை சேர்ப்பதன் மூலம் மாபெரும் வெற்றி காணுதல்.
நன்கு சமைக்கத் தெரிந்த Cook-ம், சமையறை பக்கமே செல்லாத Comali-யும் சேர்ந்து சமைக்கும் இந்நிகழ்ச்சியானது, lateral Thinking என்ற Random Entry Technique பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளது.
இதே போன்று ஒரு தொழில் முனைவோராக, Lateral Thinking-யை பயன்படுத்தி வித்தியாசமான முறையில் வாடிக்கையாளரிடம் நமது Product-ஐ எப்படி ரீச் செய்ய முடியும் என்பதை எண்ணி வெற்றியடையலாம்.
2.Select Natural Fit Candidate :
சிவாங்கியின்- Cuteness, புகழின்- Expressions, பாலாவின்- Counter, மணிமேகலையின்- Timing Sense, சுனிதாவின்- கொஞ்சும் தமிழ், இவர்கள் ஒவ்வொருவரின் தனித்துவமே இந்நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்குக்காரணம் ஆகும்.
தனித்துவமிக்க நபர்களைத் தேர்ந்தெடுத்தல். அத்தனித்துவம் குழுவினை பலப்படுத்தும். மேலும், நிறுவனத்தின் வளர்ச்சியையும் பெருக்கும்.
3.Freedom at Workplace :
இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஒவ்வொருவரும் எந்தவித தயக்கமும் இன்றி தனது இயல்பையும், திறமையையும் வெளிப்படுத்தினார்கள். அதற்கு அவர்கள் கொடுத்த Freedom Culture ஒரு முக்கியக் காரணி ஆகும்.
ஊழியர்களின் சுதந்திரம் மற்றும் சந்தோஷ உணர்வே ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதையை தீர்மானிக்கிறது. முக்கியமாக Creativity, கலைத்திறன் சம்பந்தப்பட்ட துறையில் இவை மிக முக்கியமானவை.
4.Multi Brand Strategy :
இன்று Coook with Comali நிகழ்ச்சி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட வயதினரையும் கவர்ந்து இருக்கிறது என்றால் இதில் உள்ள Varieties தான் மிக முக்கியக் காரணம் ஆகும்.
சிவாங்கி- புகழ், பாபா பாஸ்கர்- பாலா, கனி - சுனிதா, அஷ்வின் - மணிமேகலை, பவித்ரா - புகழ், ஷகிலா அம்மா - புகழ் இவர்களின் Combination மக்கள் மிகவும் ரசித்தனர், மேலும், சிவாங்கி - அஷ்வின் இவர்களுக்காவே தனி Fan Base இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த Combination of varieties தான் இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு விதையாய் அமைந்தது.
ஒரு பொருள் பலதரப்பட்ட வயதினரையும் கவரும் வகையில் இருக்குமேயானால், எளிதான மக்களையும் சென்றடைய முடியும். அதுமட்டுமின்றி சந்தையில் மேலோங்கியும் நிற்க இயலும்.
சரியான முறையில் Multi-Brand Strategy - Varieties of Prodcuts & Price Range-யை பயன்படுத்துவதன் மூலம் தொழிலில் அதீத வெற்றியை பெற முடியும்.
5. Connect Emotionally :
இதற்கு முன்பு Cooking சம்பந்தமான பல ரியாலிட்டி ஷோ வந்திருந்தாலும் Cook with Comali ஒரு Icon ஆக மாறி இருப்பதற்குக் காரணம் பார்வையாளர்களிடம் கொண்டுள்ள அந்த ஒரு Emotional Bonding தான்.
நம்ம வீட்டு பிள்ளை, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அந்த ஒரு Emotional Bonding தான் இந்நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணமாய் அமைந்தது.
பெரிய பெரிய நிறுவனத்தின் வெற்றிக்குக் காரணமும் இதுவே, வாடிக்கையாளர்களைத் தமது பொருளோடு உணர்வுப்பூர்வமாக கவர வைத்தல் மாபெரும் வெற்றியைத் தரும்.
6.Win - Win Policy :
இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் Cook with Comali-க்கு முன் Cook With Comali-க்கு பின் எனப் பிரிக்கலாம்.
அதாவது Cook With Comali முன்பு சமூகத்தில் ஷகிலா அவர்களின் மீது வைத்திருந்த கண்ணோட்டமே வேறு, ஆனால் தற்போது அவரை நாம் மனமுவந்து அம்மா என அழைக்கிறோம்.
Expression King என அழைக்கப்படும் புகழ், இதற்கு முன் பல நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு வாய்ப்பிற்காகவும், தனக்கான ஒரு அடையாளம் வேண்டும் என பல சிரமங்களைக் கண்டவர். ஆனால் இன்று பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார்.
ஒரு பாடகியாக நமக்குத் தெரிந்த சிவாங்கி இன்று நம் வீட்டுப்பெண்ணாய் கருதும் அளவிற்கு நமக்குப் பிடித்தமானவராய் மாறியிருக்கிறார்.
Counter King என அழைக்கப்படும் பாலா ஒரு காலத்தில் KPY 6 Title Winner ஆகியும் நெட்டிசன்களால் அவமதிக்கப்பட்டவர், ஆனால் இன்று அதே நெட்டிசன்கள் அவரைப் புகழ்ந்து தள்ளும் அளவிற்கு இந்நிகழ்ச்சியில் கலக்கியிருக்கிறார். தனக்கென ஒரு புது பாணியில் Standup Comedian ஆகவும் Actor ஆகவும் மக்களை மகிழ்வித்துக் கொண்டு வருகிறார்.
இதே போன்று அஷ்வின், மணிமேகலை, கனி, பவித்ரா, சுனிதா, பாபா பாஸ்கர் போன்றோரும் மக்களின் மனதை கவர்ந்து மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கெல்லாம் விதையாய் அமைந்தது Cook with Comali நிகழ்ச்சி, அதே போல் இவர்களின் துணைக் கொண்டே இந்நிகழ்ச்சியும் இவ்வளவு பிரபலம் அடைந்துள்ளது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதுவே Win - Win Policy.
இதே போன்று ஒரு தொழில் முனைவராக நம் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் நிறை, குறையினை அறிந்து, அவர்களின் தேவையை உணர்ந்து ஊழியர்களின் வாழ்வை மேம்படுத்துவதன் மூலம், மாதச் சம்பளத்தை தாண்டி நிறுவனத்தின் மீது உணர்வுப்பூர்வமாக ஒரு நன்மதிப்பை ஆர்களிடத்தில் ஏற்படுத்தமுடியும்.
இதனால், Employees Attrition Count-ம் குறையும், நோக்கத்தோடு பணிபுரியக்கூடிய விசுவாசமிக்க ஊழியர்கள் நமக்கு அமைவர். மேலும், தொழிலும் லாபத்தை நோக்கி முன்னேறும்.