Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஊரடங்கு நீட்டிப்பு: புதிய கட்டுப்பாடுகள் என்ன? எதற்கு அனுமதி? அனுமதி இல்லை?

மே 4 முதல் 2 வாரத்துக்கு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் எதற்கெல்லாம் அனுமதி -அனுமதி இல்லை என்ற தொகுப்பு:

ஊரடங்கு நீட்டிப்பு: புதிய கட்டுப்பாடுகள் என்ன? எதற்கு அனுமதி? அனுமதி இல்லை?

Friday May 01, 2020 , 2 min Read

மே 3ம் தேதியுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முடிவடையும் சூழலில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம் மே 4ம் தேதி முதல் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு தொடரும் என்று கூறியுள்ளது.


இந்த இரு வார ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளையும் அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ரெட், ஆரஞ்ச் மற்றும் பச்சை மண்டலங்கள் பொறுத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் அதிக தளர்வுகளும், சிவப்பு மணடலத்தில் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

india lockdown

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் எதற்கெல்லாம் அனுமதி- அனுமதி இல்லை:


  1. பேருந்து, ரயில், விமானம், மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.
  2. சில காரணங்களுக்கு மட்டும் பேருந்து ரயில் விமானத்தை பயன்படுத்த அனுமதி.
  3. பள்ளி கல்லூரி செயல்பட அனுமதி இல்லை.
  4. வணிக வளாகம், திரையரங்குகள், ஹோட்டல்கள் இயங்க அனுமதி இல்லை.
  5. கோயில்கள் உட்பட வழிப்பாடு தலங்கள் இயங்க அனுமதி இல்லை.
  6. இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை வெளியில் நடமாட தடை.
  7. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லா மண்டலங்களிலும் வெளியில் வர தடை.
  8. பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வெளியில் வர தடை.
  9. உள்ளூர் கிளினிக் மற்றும் புறநோயாளிகள் வரும் சிறு மருத்துவமனைகள் எல்லா மண்டலங்களிலும் அனுமதி.
  10. சிவப்பு மண்டலப் பகுதிகளில் ஆட்டோ டாக்ஸி இயங்க தடை.
  11. சிவப்பு மண்டலப் பகுதிகளில் சலூன்கள் செயல்பட தடை.
  12. மருந்துகள், சுகாதாரப் பொருட்கள் உற்பத்தியும் செய்யும் தொழிற்சாலைகள் அனுமதி.
  13. சிவப்பு மண்டலப் பகுதிகளில் நான்கு சக்கர வாகனத்தில் இருவர் பயணிக்க அனுமதி.
  14. சிவப்பு மண்டலத்தில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டும் செல்ல அனுமதி.
  15. ஆரஞ்சு மண்டலத்தில் இருசக்கர வாகனத்தில் இருவர் பயணிக்க அனுமதி.
  16. சிவப்பு மண்டலத்தில் சிறு கடைகள் செயல்பட அனுமதி.
  17. எல்லா மண்டலங்களிலும் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்பனை செய்யும் தனியாக இயங்கும் கடைகள் இயங்க அனுமதி.
  18. மால்களில் உள்ள அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்பனை கடைகள் இயங்க தடை.
  19. ஆன்லைன் வணிக நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்கள் விற்க அனுமதி.
  20. சிவப்பு மண்டலத்தில் தனியார் நிறுவனங்கள் 33% ஊழியர்களுடன் செயல்படலாம்.
  21. அரசு அலுவலகங்களில் 33% ஊழியர்களுடன் இயங்க அனுமதி.
  22. பச்சை மண்டலங்களில் 50 % பேருந்துகள் 50% பயணிகளுடன் பயணிக்கலாம்.
  23. சிவப்பு மண்டலத்தில் வேளாண் பணிகள் தொடர அனுமதி.
  24. சிவப்பு மண்டலத்தில் அங்கன்வாடிகள் செயல்பட அனுமதி.
  25. சலூன் கடைகள் தவிர மற்ற சிறு கடைகள் இயங்கலாம்.
  26. கிராமப்பகுதிகளில் ஷாப்பிங் மால்கள் தவிர அனைத்து கடைகளும் இயங்கலாம்.
  27. நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்துக்குத் தடை இல்லை.
  28. வங்கி, நிதி நிறுவனம், கூட்டுறவு வங்கி, காப்பீடு நிறுவனங்கள் செயல்பட தடையில்லை.
  29. சிவப்பு மண்டலம் கிராமப்பகுதிகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் இயங்கலாம்.
  30. சிறார் காப்பகம் மற்றும் முதியோர் இல்லம் இயங்க அனுமதி.


மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை தவிர மேலும் சில இடங்களில் கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் உள்ளன. அது மண்டலங்கள் அடிப்படையில் அமைந்திருக்கிறது. மத்திய அரசு மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள இந்த கட்டுப்பாடுகளை தீவிரமாக செயல்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.