தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் சொந்த மாநிலங்கள் செல்ல அனுமதி!
கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக நாட்டில் சிக்கித்தவிக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட, மாநிலங்களுக்கு இடையேயான மக்களின் பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கோவிட்-19 எதிர்த்துப் போரிட அமலில் உள்ள பொது முடக்கக் கட்டுப்பாடுகளின் காரணமாக இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் இதர மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.
தற்போது, இந்த சிக்கித் தவிக்கும் நபர்களின் சாலைவழிப் பயணத்தை மத்திய அரசு அனுமதித்துள்ளது. தொடர்புடைய மாநிலங்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு ஒத்துக்கொண்ட பின்னர், இவர்கள் ஒரு மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் இருந்து இன்னொரு மாநிலம்/ யூனியன் பிரதேசத்துக்கு பயணிக்க அனுமதிக்கப்படுவர்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலம்/ ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதிகாரிகளின் உரிய அனுமதி பெற்று அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று டெஸ்ட் எடுக்கப்பட்டு, அதில் நெகடிவ் என்று வந்தால் மட்டுமே அத்தொழிலாளர்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
அவர்கள் தங்களது இலக்குகளை அடைந்தவுடன், உள்ளூர் அதிகாரிகள் இவர்களை மதிப்பீடு செய்து, மருத்துவமனையில் தனிமைப்படுத்துதல் தேவைப்படாத பட்சத்தில், வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதே போல் அவர்கள் பயணித்த பேருந்துகள் இலக்கை அடைந்தவுடன் கிருமி நாசினி கொண்டு மொத்தமாக வைரஸ் தொற்று நீக்கப்படும். சமூக விலகல் மேற்கொண்டு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் இவர்களுக்குச் சுகாதாரப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். இக்காரணத்துக்காக, ஆரோகிய சேது செயலியைப் பயப்படுத்த இந்த நபர்களை ஊக்கப்படுத்த மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் இவர்களின் சுகாதார நிலைமையைக் கண்காணித்துப் பின் தொடரலாம்.
தகவல்: பிஐபி