வாட்ஸ்அப் குறை தீர்க்கும் அதிகாரியாக பரேஷ் பி லால் நியமனம்!
மத்திய அரசின் உத்தரவை அடுத்து நியமனம்!
வாட்ஸ்அப் இந்தியாவுக்கான குறை தீர்க்கும் அதிகாரியாக பரேஷ் பி லால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் தொடர்பாக கடந்த வாரம் எழுந்த பிரச்னைக்கு அடுத்து இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, "50 லட்சம் பயனர்களைக் கொண்ட சமூக ஊடகம், ஒரு குறை தீர்க்கும் அதிகாரி, நோடல் அதிகாரி மற்றும் ஒரு தலைமை இணக்க அதிகாரியை நியமிக்க வேண்டும். இந்த பணியாளர்கள் இந்தியாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்," என்று மத்திய அரசு வகுத்த விதியில் சொல்லப்பட்டிருந்தது.
அதன்படியே இந்த நியமனம் நியமிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்'பின் வலைத்தளத்தின்படி,
பயனர்கள் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸில் வசிக்கும் குறை தீர்க்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் பரேஷ் பி லால் ஐ தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, வாட்ஸ்அப் அதன் மேடையில் இருக்கும் தகவல்களை மாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட புதிய குறை தீர்க்கும் அதிகாரிகளின் விவரங்களை புதுப்பித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. வாட்ஸ்அப் மட்டுமல்ல, கூகுள் போன்ற மற்ற பெரிய டிஜிட்டல் நிறுவனங்கள் புதிய சமூக ஊடக விதிகளின்படி குறை தீர்க்கும் அதிகாரிகளின் நியமனத்தை பிரதிபலிக்கும் வகையில் தங்கள் வலைத்தளங்களை புதுப்பிக்கத் தொடங்கியுள்ளன.
கூகுளின் 'எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்' பக்கம் அமெரிக்காவின் மவுண்டன் வியூவின் முகவரியுடன் தொடர்பு கொண்ட நபரான, ஜோ க்ரியரின் விவரங்களைக் காட்டுகிறது. யூடியூபிற்கான குறை தீர்க்கும் வழிமுறை பற்றிய விவரங்களும் இந்தப் பக்கத்தில் உள்ளன.
மத்திய அரசின் விதிகளின்படி, அனைத்து ஊடகங்களும் தங்கள் வலைத்தளம், ஆப் அல்லது இரண்டிலும், குறை தீர்க்கும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொடர்பு விவரங்கள் மற்றும் ஒரு பயனர் அல்லது பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்கக்கூடிய வழிமுறை ஆகியவற்றை முக்கியமாக வெளியிட வேண்டும்.
குறை தீர்க்கும் அதிகாரி 24 மணி நேரத்திற்குள் புகாரை ஒப்புக் கொள்ள வேண்டும் மற்றும் அத்தகைய புகாரைப் பெற்ற நாளிலிருந்து 15 நாட்களுக்குள் பதிலளித்திருக்க வேண்டும்.
மற்றும் அதிகாரிகள் வழங்கிய எந்த உத்தரவு, அறிவிப்பு அல்லது வழிகாட்டுதலையும் பெற்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.
புதிய விதிகளின் கீழ், சமூக ஊடக நிறுவனங்கள் புகாருக்குள்ளான பதிவுகளை 36 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும். மேலும், நிர்வாணம், ஆபாச படங்கள் போன்ற பதிவுகளை 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும். புதிய விதிகள் தளங்களை துஷ்பிரயோகம் செய்வதையும் தவறாகப் பயன்படுத்துவதையும் தடுப்பதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளதாகவும், பயனர்களுக்கு குறை தீர்க்கும் ஒரு வலுவான மன்றத்தை வழங்குவதாகவும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், கூகுள் போன்ற பெரிய தளங்கள் ஒவ்வொரு மாதமும் பெறப்பட்ட புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களைக் குறிப்பிட்டு அவ்வப்போது இணக்க அறிக்கைகளையும் வெளியிட வேண்டும் என மத்திய அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: பிடிஐ | தொகுப்பு: மலையரசு