2020-க்குள் 20,000 ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க WhiteHat Jr திட்டம்!

By YS TEAM TAMIL|3rd Sep 2020
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

பிரபல கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் WhiteHat Jr இந்தியா முழுவதும் ஆசிரியைகளை பணியில் நியமிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 220 பெண் ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிவரும் இந்நிறுவனம், விரைவில் 20 ஆயிரம் ஆசிரியர்களை தங்களது ஆனலைன் தளத்தில் கற்பித்தலுக்காக பணி நியமனம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.


WhiteHat Jr அண்மையில் தான் பிரபல கல்வி நிறுவனமான Byju's-ஆல் கையகப்படுத்தப்பட்டது. தற்போது இவர்களின் தளத்தில் 7000 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

Whitehat Jr

Whitehat Jr சி இ ஒ கரண் பஜாஜ்

லாக்டவுனை தொடர்ந்து பெருகிவரும் ஆன்லைன் கல்வியால், இது போன்ற கல்வி நிறுவனங்களுக்கு மக்களிடையே பெரிய ஈர்ப்பும், ஆதரவும் கிடைத்துள்ளது. WhiteHat Jr இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, யூகே, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் தங்கள் செயல்பாட்டை துவங்கி விரிவாக்கம் செய்துள்ளது.

“கோவிட்-19 காலத்தில், கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் கல்வி மற்றும் புத்தாக்க கற்றல் முறைகள் பிரபலமடைந்து வருகிறது. பெற்றோர்களும் இம்முறைகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டு முழு ஆதரவு கொடுத்து வருகின்றனர்,” என்றார் WhiteHat Jr நிறுவனர் கரன் பஜாஜ்.

மேலும் அவர் பேசுகையில், ஆசிரியர்கள் எங்கள் நிறுவனத்தின் முதுகெலும்பு மற்றும் அவர்கள் தான் எங்களின் கனவு இலக்கை, தொழில்நுட்பத்தை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க உதவுபவர்கள் என்றார்.

“எங்களின் இந்த நீண்ட இலக்கில், எங்களுடன் பயணிக்க, இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி அவர்களுக்கும் ஒரு நீண்ட பணி அனுபவத்தை தர ஆர்வமாக உள்ளோம். இதற்கு எங்களுக்குக் கிடைத்துள்ள ஆதரவும் அற்புதமாக இருக்கிறது,” என்றார்.

WhiteHat Jr இந்தியாவில் பல மொழி பேசும் மாணவர்களுக்கு சேவை வழங்க திட்டமிட்டு இருப்பதால், அதற்கேற்ப பிராந்திய மொழிகள் தெரிந்த, கற்பிக்கக்கூடிய ஆசிரியர்களையும் இணைக்கின்றார்கள். தாய்மொழியில் கற்பிப்பதன்மூலம் குழந்தைகளுக்கு ஒரு சுலபமான கற்பித்தல் அனுபவத்தையும், புரிதலையும் கொடுக்க இவர்கள் செயல்பட உள்ளனர்.


தற்போது இந்த தளத்தில் 84 சதவீத ஆசிரியர்கள் 35 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் 6-12 வயது குழந்தைகளுக்கு கோடிங் கற்றுக் கொடுக்கின்றனர். ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் இந்த கற்றலை வழங்குகிறார்கள்.

“WhiteHat Jr தளத்தில் பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரிகள். இவர்கள் மாதத்திற்கு சுமார் ரூ.50,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர்.

இந்நிறுவனம் 6 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு கோடிங், கேம் உருவாக்கம், அனிமேஷன், ஆப் உருவாக்கம் உள்ளிட்ட பல தொழில்நுட்ப கோர்சுகளை வயதுக்கேற்ற கட்டங்கள் வாரியாக ஆன்லைனில் கற்றுக்கொடுக்கின்றனர்.


தகவல்: பிடிஐ