Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Ghost Jobs: அபாய ‘நிழல் வேலை’ - மாட்டிக் கொள்ளாமல் தவிர்க்க 5 அலர்ட் குறிப்புகள்!

ஒரே ஒரு காலிப் பணியிடத்துக்கு ஓராயிரம் விண்ணப்பங்கள் குவிகின்றன. போட்டி கடினமானதாக இருக்கிறது. இவற்றிற்கு இன்னும் சவால் சேர்ப்பதுதான் இந்த நிழல் வேலை வாய்ப்புகள்.

Ghost Jobs: அபாய ‘நிழல் வேலை’ - மாட்டிக் கொள்ளாமல் தவிர்க்க 5 அலர்ட் குறிப்புகள்!

Tuesday October 22, 2024 , 3 min Read

வேலைக்கு விண்ணப்பித்துவிட்டு எந்த ஒரு பதிலுமே வரவில்லையே என்று காத்துக் காத்து கண்கள் பூத்துப்போய் நிற்கிறீர்களா? தவறு உங்களுடையதுதான். விண்ணப்பிக்கும் முன்னர் இங்கே நிலவும் போலி வேலைவாய்ப்புகள் பற்றித் தெரிந்துகொண்டால் அந்த தேவையற்றை காத்திருத்தலைத் தவிர்க்கலாம்.

ஆங்கிலத்தில் ‘கோஸ்ட் ஜாப்ஸ்’ (Ghost Jobs) என்றழைக்கப்படும் இந்த நிழல் வாய்ப்புகளை அடையாளம் காண நாங்கள் சில டிப்ஸ் சொல்கிறோம்.

உலகளவில் இப்போது வேலைவாய்ப்பு தேடும் களம் வித்தியாசமாகிவிட்டது. ஒரே ஒரு காலிப் பணியிடத்துக்கு ஓராயிரம் விண்ணப்பங்கள் குவிகின்றன. போட்டி கடினமானதாக இருக்கிறது. இவற்றிற்கு இன்னும் சவால் சேர்ப்பதுதான் இந்த நிழல் வாய்ப்புகள்.

போலி வேலைவாய்ப்புகள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமா? விந்தையான சூழலில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டுமா?

இந்தக் கட்டுரை அதற்கான எளிமையான டிப்ஸ்களை உங்களுக்கு வழங்குகிறது.

jobs

போலி வேலைவாய்ப்புகள் என்றால் என்ன?

ஒரு நிறுவனம் பல மாதங்களாக ஒரே பணியிடத்துக்காக மீண்டும் மீண்டும் விளம்பரப்படுத்துகிறதா? அப்படியென்றால் அது ஒரு போலி வேலைவாய்ப்பு. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த வேலைக்கான இடம் அந்த நிறுவனத்தில் இப்போது இல்லை அல்லது இதற்கு முன்னர் இல்லை என்பது பொருள்.

ரெஸ்யூம் பில்டர் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், 40 சதவீத நிறுவனங்கள் போலி வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்புகளை வெளியிடுகின்றன. நாமும் அதில் சிலவற்றைக் கடந்து வந்திருக்கலாம். ஆனால், இப்படியான போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை அடையாளம் கண்டு புறந்தள்ளுவதற்கு முன்னர் ஏன் அவை விளம்பரப்படுத்தப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்வோம்.

போலி வேலைவாய்ப்புகள் ஏன் நிலவுகின்றன?

இத்தகைய போலி வேலைவாய்ப்புகள் பல்வேறு காரணங்களுக்காகவும் உருவாக்கப்படுகின்றன. முதல் காரணம், வேலை தேடுவோரை திசை திருப்பி அவர்களை சுரண்டுவதற்காக விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. அந்த விளம்பரத்தைப் பார்த்து அனுப்பப்படும் விண்ணப்பங்களை நிறுவனங்கள் தங்களின் பின்னால் தேவைக்காக சேமித்து வைத்துக் கொள்கின்றன.

சிலர் தங்களின் பிராண்டை இணையவெளியில் பிரபலப்படுத்தவும் இதைச் செய்கின்றனர். இன்னும் சிலர் தனிப்பட்ட அடையாளங்களைத் திருடிக்கொள்ள இதனைச் செய்கின்றனர். எனவே, தான் வேலை தேடுவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

வேலைக்கு விண்ணப்பிக்கும் முன்னர் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரத்தின் நம்பகத்தன்மை அறிந்து விண்ணப்பித்தால் இதுபோன்ற போலி வேலைவாய்ப்பு வலையில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

போலி வேலைவாய்ப்புகளில் இருந்து தப்பிக்க 5 வழிகள்:

ஆங்காங்கே வேலையிழப்புகளும், மோசமான பொருளாதார தேக்கநிலைகளும் நிலவும் சூழலில் மக்கள் நல்ல பலன் தரும் வேலையைத் தேடிக் கொண்டே இருக்கின்றனர். இருப்பினும், உங்களின் பொன்னான நேரத்தையும், உழைப்பையும் இத்தகைய போலி வேலைவாய்ப்புகளுக்காக வீணடித்துவிடக் கூடாது. நீங்கள் தெளிவுடன் அவற்றை அணுக இதோ 5 டிப்ஸ் உங்களுக்காக...

job

1. நீங்கள் வேலைக்கு விண்ணப்பிக்கவிருக்கும் நிறுவனம் பற்றி கொஞ்சமேனும் மெனக்கடலுடன் தேடுங்கள். அதன் நம்பகத்தன்மையை லிங்க்ட்இன் போன்ற தளங்களில் தேடி கண்டறியுங்கள். அது மிகவும் எளிமையான வழியும் கூட. அதிலிருக்கும் பின்னூட்டங்கள், ரேட்டிங்க்ஸ் எல்லாம் பாருங்கள். அது உங்களுக்கு அந்த விளம்பரத்தின் மீது புரிதலை உண்டாக்கும். கூடுதல் டிப் என்னவென்றால், நிறுவனத்தின் இணைய பக்கத்துக்குச் சென்று அங்கே அச்சில் வெளியான அதே விளம்பரம் அங்கேயும் பதிவிடப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

2. இன்னொரு எளிய வழி என்னவென்றால், நீங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனத்துக்கே நேரடியாக தொடர்பு கொண்டு அந்த வேலைவாய்ப்பு பற்றி விசாரித்தல். அந்த வேலையின் தன்மை பற்றி அவர்களிடமே விசாரிக்கலாம். வேலைக்கு அழைப்பு விடுத்த மேலாளர் அது பற்றி விளக்கவும் பொறுப்பு கொண்டவரே. ஒருவேளை சம்பந்தப்பட்ட நபர் அந்த வேலைவாய்ப்பு பற்றி தெளிவான, உங்களுக்குத் தேவையான தகவலைத் தரவில்லை என்றால் அது நிச்சயமாக போலி வேலைவாய்ப்பு தான்.

3. உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைப் பற்றி கேட்டால் நீங்கள் கொஞ்சம் உஷாராகிவிடலாம். நீங்கள் விண்ணப்பிக்க இருக்கும் வேலைக்குத் தேவையான தகவல்களை மட்டும் பகிருங்கள். வங்கிக் கணக்கு விவரம் போன்ற எந்தவொரு தனிப்பட்ட விவரத்தையும் பகிராதீர்கள்.

4. நம்பகத்தன்மை மிகுந்த வேலைவாய்ப்புத் தளங்கள் மூலமாகப் பெறப்படும் வேலைவாய்ப்பு விளம்பரங்களையே கருத்தில் கொள்ளுங்கள். அவை நிச்சயமாக நிஜமான வேலைவாய்ப்புத் தரவுகளையே பட்டியலிடும். ஆகையால் அத்தகைய நம்பகத்தன்மை கொண்ட இணையதளங்கள், பிரத்யேக தளங்களை மட்டும் வேலைவாய்ப்பு தேடும்போது நாடுங்கள்.

Ghost jobs

5. உங்களை பணியமர்த்துபவரின் ப்ரொஃபைல் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். அவரின் லிங்க்ட் இன் ப்ரொஃபைல் பற்றி ஆராய்ந்து தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம் அவர்கள் தொடர்ச்சியாகவே இதுபோல் வேலைவாய்ப்புகளைப் பட்டியலிட்டு வேலை அமர்த்துகிறீர்களா எனத் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் கூட இப்போது இதுபோன்ற போலிகள் ஊடுருவல் அதிகரித்துவிட்டது. அதனால் விளம்பரங்களில் இருந்தே அவற்றின் நம்பகத்தன்மையை கண்டறிய தெரிந்து கொள்ளுங்கள். ஆகையால் இல்லாத வேலைக்கு விண்ணப்பித்துவிட்ட வரவேவராத வாய்ப்புக்காக காத்திருக்கும் போக்கை மாற்றுங்கள்.

தகவல் உறுதுணை: ஆசம் கான்


Edited by Induja Raghunathan