நெட்ஃப்ளிக்ஸுக்கு இரண்டு சிஇஓ ஏன்? - பாதகத்தை சாதகமாக்கிய பின்னணி!
பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தில் இரண்டு சிஇஒ முறை வெற்றிகரமாக இருப்பதற்குப் பின்னால் கவனிக்கத்தக்க சில உத்திகளும் உள்ளன.
லைவ் ஸ்ட்ரீமிங் சர்வீஸ் துறையில் சர்வதேச ஜாம்பவானாக இருக்கும் ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் அதன் புதுப்புது உள்ளடக்கங்களால் மட்டுமல்ல, தனித்துவ கார்ப்பரேட் கட்டமைப்பாலும் கூட முக்கியத்துவம் பெறுகிறது.
க்ரெக் பீட்டர்ஸ், டெட் சரண்டோஸ் என நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு இரண்டு சிஇஓ இருக்கின்றனர். இந்த கார்ப்பரேட் கட்டமைப்புக்கு மிகப் பெரிய சவால் என்றால், அது மிகையாகாது.
இதுபோன்ற வழக்கொழிந்த நடைமுறையை நிறைய கார்ப்பரேட் நிறுவனங்கள் கைவிட்டிருந்தாலும் கூட நெட்ஃப்ளிக்ஸ் அதனை லாவகமாக கையாண்டு வெற்றிகரமான முன்னோடியாகத் திகழ்கிறது. இந்தக் கட்டுரை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் எவ்வாறு இரண்டு சிஇஓ முறையைக் கையாள்கிறது என்பதையே அலசுகிறது.
இரண்டு சிஇஓ கட்டமைப்பு:
நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் இரண்டு சிஇஓ மாடல் 2023-ஆம் ஆண்டு முறைப்படி அறிவிக்கப்பட்டது. அப்போதுதான் கிரெக் பீட்டர்ஸ் உடன் இன்னொரு சிஇஓ-வாக டெட் சரண்டோஸ் இணைந்தார். இதனால் இணை நிறுவனரான ரீட் ஹாஸ்டிங்ஸ் நிர்வாக இயக்குநரானார்.
பீட்டர்ஸும், சரண்டோஸும் அவர்கள் பதவிகளுக்கு ஒருவொருக்கொருவர் துணையாக வலுசேர்க்கின்றனர். உள்ளடக்க உருவாக்கம், வெளிநாட்டு படைப்புகளில் கவனம் செலுத்துதல், மார்க்கெடிங், தொடர்புகளை ஏற்படுத்துதல் போன்றவற்றில் சரண்டோஸ் கவனம் செலுத்துகிறார். ப்ராடக்ட் டெவலப்மென்ட் தொழில்நுட்பம் மற்றும் நிதி சார்ந்த உத்திகளில் பீட்டர்ஸ் கவனம் செலுத்துகிறார்.
இவ்வாறாக பொறுப்புகளைப் பிரித்துக் கொண்டதால் இரண்டு சிஇஓ-வும் அவரவர் நிபுணத்துவம் சார்ந்த துறைகளில் கவனம் செலுத்துவது எளிதாகியுள்ளது. அதேவேளையில், மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றிணைந்து முடிவெடுப்பதையும் இயல்பாக்கிக் கொண்டுள்ளனர்.
நேர்மையான உரையாடல்களும், வெளிப்படைத்தன்மையும் இருவரின் பணிகளிலும் மேலோங்கி இருக்கிறது. இதுதான் இந்த இரட்டை சிஇஓ மாடலின் மிக முக்கியமான வெற்றியாகக் காணப்படுகிறது. இருவருமே நிறுவனத்தின் நலனை முன்னிறுத்தி அதன் வளர்ச்சிக்கான உத்திகளை வடிவமைப்பதில் ஒத்திசைவுடன் செயல்படுகின்றனர்.
முடிவெடுக்கும் செயல்முறை!
இரட்டை சிஇஓ முறையில் மிக முக்கியமான சவாலே ‘முடிவெடுத்தல்’தான். நெட்ஃப்ளிக்ஸில் அடுத்தடுத்த படிநிலைகளில் உள்ள அதிகாரிகள் அவரவர் பொறுப்புக்கு ஏற்ப பீட்டர்ஸிடமோ அல்லது சரண்டோஸிடமோ ரிப்போர்ட் செய்கின்றனர். இவ்வாறாக ரிப்போர்டிங் கூட தெளிவாக பிரித்து வைத்திருப்பது முடிவெடுத்தலில் தொய்வு ஏற்படுவதைத் தடுப்பதோடு அதை திறம்படச் செய்யவும் வழிவகுக்கிறது.
குறிப்பாக, கன்டென்ட் தொடர்பான முடிவுகள் சரண்டோஸின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. தொழில்நுட்பம், ப்ராடக்ட் டெவலப்மென்ட் பீட்டர்ஸின் பொறுப்பின் கீழ் வருகிறது.
இந்த நிர்வாகக் கட்டமைப்பானது, நிறுவனம் சந்தை மாற்றங்களையும், சவால்களையும், வாய்ப்புகளையும் துரிதமாகக் கையாள வழிவகுக்கிறது.
மிக முக்கியமான உத்திகள் சார்ந்த முடிவுகளை இருவரும் இணைந்தே எடுக்கின்றனர். ஒரு சிஇஓ-விடம் விஷயத்தை விவரித்துப் பேசினால் அது இருவரிடமும் சேர்த்ததாகிவிடும் என்பதை ஊழியர்கள் உணரச் செய்யும் வகையில் ஒத்திசைந்து செயல்படுகின்றனர். இவ்வாறாக ஒத்திசைந்து செயல்படுவதால் முரண்கள் கலையப்படுகிறது. இருவரின் நிபுணத்துவமும் நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்ல உதவுகிறது.
சாதக, பாதகங்கள்:
இரட்டை சிஇஓ மாடலில் நிறைய சாதகங்கள் உள்ளன. இரண்டு தலைவர்களின் திறமைகளையும் முழுமையாக நிறுவனத்தின் நலனுக்காக பெற முடிகிறது. ஒருவகையில் இதுவே நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் அபரிமித வளர்ச்சிக்கு ஒரு காரணமாகவும் இருக்கிறது. இதன் மூலமே நெட்ஃப்ளிக்ஸ் வாடிக்கையாளர்களும் அதிகரித்துள்ளனர். கூடவே சமீப காலங்களில் அதன் வருவாயும் அதிகரித்துள்ளது.
இருப்பினும், இந்த இரட்டை சிஇஓ மாடலில் சவால்களும் இல்லாமல் இல்லை. இரட்டைத் தலைமை என்பதும் எப்பவுமே சிறு பிசிறு தட்டினாலும் கூட பல்வேறு சிக்கல்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்திவிடக் கூடியது. அதனால் இதனை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு இரண்டு சிஇஓ இடையேயும் வலுவான இணக்கமான போக்கு இருக்க வேண்டும்.
அதேபோல், இருவருக்குமே நிறுவனத்தின் வளர்ச்சி மீது ஒத்திசைவுடன் கூடிய ஒருமித்த பார்வையும், இருவருக்கும் இடையே தெளிவான தொடர்பும் இருக்க வேண்டும்.
நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மையும், பரஸ்பர மரியாதையும் கூடிய கலாச்சாரம் அதனை இரட்டை சிஇஓ தலைமைக்குள்ளும் புகுத்திக் கொண்டு சறுக்கல்களைக் கடந்து செல்ல உதவிகரமாக இருக்கிறது.
பிற நிறுவனங்களுடனான ஒப்பீடு: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு இந்த இரட்டை சிஇஓ முறை மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது. ஆனால், சில நிறுவனங்களுக்கு கலவையான பலன்களே கிடைத்துள்ளன. சேல்ஸ்ஃபோர்ஸ் மற்று எஸ்ஏபி நிறுவனங்கள் இத்தகைய இரட்டை சிஇஓ முறையை நிர்வாக சிக்கல் காரணமாக கைவிட்டது.
மனித இயல்பும், தெளிவான முடிவுக்கான அழுத்தமும் எபோதுமே ஒற்றைத் தலைமையே சிறந்தது என்ற பொதுபுத்தியை உருவாக்கி வைத்துள்ளது. ஆனால், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் அணுகுமுறை சரியான சூழலில் கடைபிடிக்கப்படும் இரட்டை சிஇஓ முறையானது மிக மிகப் பயனுள்ளதாக இருக்கலாம் என்பதை நிரூபித்துள்ளது.
க்ரெக் பீட்டர்ஸ் மற்றும் டெட் சரண்டோஸின் தனித் திறமைகள் நிறுவனத்துக்கு நன்மை சேர்க்கிறது. அவர்களின் கூட்டு முயற்சி அணுகுமுறை வெளிப்படைத் தன்மை நிறைந்ததாகவும் இருக்கிறது. நிறுவனத்தின் வெற்றி மீது அவர்கள் பகிர்ந்து கொள்ளும் பொறுப்புணர்ச்சி இரட்டை சிஇஓ அனைவரும் பின்பற்றத்தக்கதே என்ற ஓர் உன்னத மாடலை முன்வைக்கிறது.
மூலம்: Nucleus_AI
Edited by Induja Raghunathan