Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

இந்தியாவின் 'குடும்பக் கட்டுப்பாடு திட்டம்’ வகுப்பதில் பின்னால் இருந்த பெண்மணி இவர் தான்!

பெண்களின் நலனுக்கான குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை வகுப்பதில் முன்னோடியாக விளங்கிய ஆவாபாய் வாடியா, பாலின சமத்துவம் மற்றும் குழந்தை பிறப்பு உரிமையிலும் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார்.

இந்தியாவின் 'குடும்பக் கட்டுப்பாடு திட்டம்’ வகுப்பதில் பின்னால் இருந்த பெண்மணி இவர் தான்!

Saturday August 20, 2022 , 3 min Read

ஆவாபாய் வாடியா, (Avabai Bomanji Wadia) பெண்களின் நிலையை மேம்படுத்துவதில் குடும்பக் கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். குடும்பக் கட்டுப்பாடு, சமூக எதிர்பார்ப்பு மற்றும் உயிரியல் நோக்கிலான கட்டாயம் காரணமாக தொடர்ந்து குழந்தை பெற்றுக்கொள்வது எனும் பொறியில் இருந்து பெண்களை காக்க உதவும் என்றும் அவர் நம்பினார்.

தொடர்ந்து குழந்தைகள் பெற்றுக்கொள்வது, பெண்களின் ஆரோக்கியத்தை சீர்குலைப்பதோடு, குழந்தைகளை வளர்ப்பதையும் சிக்கலாக்கி, பெண்களை குழந்தை பிறப்பு வலையில் சிக்க வைப்பதை தடுக்க இது அவசியம் என்றும் நம்பிக்கைக் கொண்டிருந்தார். ஆனால், தன்னார்வ அடிப்படையில் அமைந்தால் மட்டுமே குடும்பக் கட்டுப்பாடு வெற்றிபெறும் என்றும் நம்பினார் ஆவாபாய்.

Family Planning

யார் இந்த ஆவாபாய் வாடியா?

ஆவாபாய் வாடியா, இலங்கையில் பார்சி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது தந்தை கப்பல் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தார். அவரது அம்மா, கற்றலில் ஈடுபாடு கொண்ட சுயேட்சை எண்ணம் கொண்ட பெண்மணியாக இருந்தார்.

1928ல் 15 வயதான வாடியா தனது அம்மாவுடன் இங்கிலாந்து சென்று அங்கு படித்துக் கொண்டிருந்த சகோதரருடன் சேர்ந்து, லண்டன் பள்ளியில் படிக்கத்துவங்கினார்.

சிறு வயதிலேயே வழக்கறிஞராக வேண்டும் எனத் தீர்மானித்திருந்ததால் அவர் 19 வயதில் இன்ஸ் ஆப் கோர்டில் பயிற்சி பெறத்துவங்கினார். இலங்கையில் இருந்து சட்டம் பயின்ற முதல் பெண்மணி எனும் சிறப்பையும் பெற்றார்.

1934ல் வழக்கறிஞராக பணியாற்ற அனுமதி கிடைத்தது. வழக்கறிஞர் அலுவலகத்தில் அவருக்கு இடம் கிடைத்தாலும், நீதிமன்றத்தில் வாதாட வாய்ப்பு கிடைப்பது கடினமாக இருந்தது. சட்ட அலுவலகங்களில் பெண்கள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலை இருந்ததால் அவர் பல நிராகரிப்புகளை எதிர்கொண்டார்.

இந்த காலகட்டத்தில் அவர் ஆங்கிலேயே பெண்கள் அமைப்புடன் அவருக்கு தொடர்பு உண்டானது. பிரிட்டிஷ் காமென்வெல்த் லீக் மற்றும் பெண்களுக்கான சர்வதேச கூட்டணி ஆகிய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டது, ஆங்கில சமூகத்தின் பலதரப்பட்ட மக்களுடன் அவருக்கு தொடர்பை ஏற்படுத்தியது. முக்கிய சீர்திருத்தவாதிகளும் இதில் இருந்தனர்.

1939ல் இந்தியா திரும்பிய வாடியா, மும்பையில் ஒரு மாத காலம் இருந்துவிட்டு இலங்கை சென்றார். அங்கு அவர் பார்சி வழக்கறிஞர் ஒருவருடன் இணைந்து வழக்காட்டத்துவங்கினார்.

மேலும், பெண்கள் அரசியல் சங்கம், அகில இந்திய பெண்கள் மாநாடு உள்ளிட்ட அமைப்புகளுடனும் இணைந்து செயல்பட்டார். 1941ல் அவர் நிரந்தரமாக மும்பை திரும்பினார். அங்கு தான் அவர் எதிர்கால கணவர் டாக்டர்.போமன்ஜி வாடியாவை சந்தித்தார். 1946ல் இவர்கள் திருமணம் நடைபெற்றது.

நேரு

குடும்பக் கட்டுப்பாடு திட்டம்

அகில இந்திய பெண்கள் மாநாடு அமைப்புடனான தொடர்பு ஆவாபாய் வாடியா-வை குடும்பக் கட்டுப்பாடு செயற்பாட்டாளர்களுடன் இணைந்து செயல்பட வைத்தது. இதன் காரணமாக, குடும்ப நலம் மற்றும் உரிமைகளை முக்கியமாகக் கருதி, 1949ல் இந்திய குடும்ப கட்டுப்பாடு சங்கத்தை (Family Planning Association of India- FPAI) நிறுவ வைத்தது.

இதன் தலைவராக அவர் 34 ஆண்டுகள் செயல்பட்டார். இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டவர், இந்தியாவின் முதல் ஐந்தாண்டு திட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு இடம்பெறுவதில் முக்கியப் பங்கு வகித்தார்.

1952ல் ஆவாபாய் வாடியா, கருச்சிதைவு காரணமாக லண்டன் சென்றார். எனினும் ஆறு மாதங்கள் கழித்து அவர் மும்பை திரும்பி, திட்டமிட்ட பெற்றோர் தன்மைக்கான மூன்றாவது சர்வதேச மாநாட்டை நடத்துவதில் தீவிரமாக ஈடுபட்டார்.

Avabai Wadia

Avabai Wadia

இதன் மூலம், எட்டு குடும்ப கட்டுப்பாடு சங்கங்களை ஒன்றாகக் கொண்டு வந்ததோடு, குடும்பக் கட்டுப்பாட்டு உலகின் முன்னோடிகள் மார்கரெட் சாங்கர் மற்றும் எலிசி ஒட்டிசென்  - ஜென்சனையும் (Elise Ottesen-Jensen) பங்கேற்க வைத்தார்.

மாநாட்டின் இறுதி நாளில், சர்வதேச அமைப்பை ஏற்படுத்துவதற்கான வாக்கெடுப்பு நிகழந்தது. இதன் மூலம் IPPF (The International Planned Parenthood Federation) அமைப்பு அதிகாரப்பூர்வமாக பிறந்தது.

1952 முதல் லண்டனில் இருந்து இந்த அமைப்புன் செயல்பாட்டை கவனித்தார். பல நாடுகளில் இதன் செயல்பாடுகளை விரிவாக்கினார். இவரது தலைமையின் கீழ், இந்த அமைப்பு ஐநா மக்கள்தொகை விருது பெற்ற முதல் அரசுசாரா அமைப்பாக விளங்கியது. 1980 வரை இரண்டு முறை தலைவராக இருந்தார். 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் இயற்கை எய்தினார்.

கட்டுரை உதவி: கார்டியன் இதழ் 2005 கட்டுரை