Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

'இவர்களைத் தாண்டி ஈ, காக்க கூட நுழைய முடியாது'; காடுகளைக் காக்கும் 'ரியல் காலாஸ்’

'இவர்களைத் தாண்டி ஈ, காக்க கூட நுழைய முடியாது'; காடுகளைக் காக்கும் 'ரியல் காலாஸ்’

Saturday November 28, 2020 , 2 min Read

சம்பல்பூர் வனப்பகுதியை மாஃபியா கும்பல்களிடம் இருந்து காத்து வரும் பழங்குடி பெண்களின் கதை!


கைகளில் லத்தியுடன், புடவையணிந்த படி, காட்டுக்கே அரணாக நிற்கிறது அந்த பெண்கள் கூட்டம். அவர்கள் யாரும் உடலால் வலிமையானவர்கள் அல்ல. மாறாக அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள்.


ஓடிசா மாநிலத்திலம் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள கரியகாமன் கிராமத்தைச்சேர்ந்த அந்த பெண்கள் குழு புறநகர் பகுதியில் உள்ள 'லேண்டகோட்’ ரிசர்வ் காடுகளுக்கு காவல் காக்கும் பாதுகாப்பு அரணாக திகழ்கிறார்கள். அவர்களைத் தாண்டி, மர மாஃபியாக்கள், வேட்டைக்காரர்களால் அந்த காடுகளில் எதையும் செய்ய முடியாது.


அந்த பெண்கள் அனுமதித்தால் மட்டுமே வெளிநாடு பயணிகள் உள்ளிட்ட யாராக இருந்தாலும், 'லேண்டகோட்’ வனப்பகுதிக்குள் அடியெடுத்து வைக்க முடியும். இதன் காரணமாக, மரம் வெட்டுதல், காட்டுத் தீ போன்ற அசாம்பாவிதங்கள் அங்கே நடைபெறுவதில்லை.

mao

கேப்பாறற்று, சீரழிவில் இருந்த அந்த வனப்பகுதி மீண்டும் பசுமையுடன் உயிர்பெறத் தொடங்கியிருக்கிறது அதற்குக் காரணம் இந்த பெண் காவல் தெய்வங்கள். வனத்துறையால் கடந்த ஆண்டு தொடக்கத்தில் ‘அனைத்து பெண்கள் வன சூராக்யா சமிதி’ (வி.எஸ்.எஸ்) என்ற அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.


மாநில அரசாங்கத்தின் ‘அமா ஜங்கிள் யோஜனா’ திட்டத்தின் கீழ் கரியகாமன் கிராமத்தைச் சேர்ந்த 15 பெண்களை அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். காடுகளில் 50 ஹெக்டேர் பரப்பளவில் வனங்களைப் பாதுகாத்தல் மற்றும் அதனை மறுசீரமைத்தல் ஆகியன இவற்றின் பிரதான நோக்கம். இதையடுத்து அந்த பெண்கள் உள்ளூர் பேச்சுவழக்கில் தெங்கப்பள்ளி என்று அழைக்கப்படும் வன ரோந்துப் பணிகளைத் தொடங்கினர்.

லத்திகளை கையில் பிடித்துக்கொண்டு, வி.எஸ்.எஸ். அமைப்பினால் நியமிக்கப்பட்ட பெண் உறுப்பினர்கள் மூன்று பேர் தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை காட்டில் ரோந்து செல்கின்றனர். கடந்த 23 மாதங்களில் ஒரு நாள் கூட வன ரோந்து பணிகளையும் எந்த தடையுமில்லை.

கரியகாமன் எனப்படும் அந்த கிராமத்தில் மொத்தம் 32 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திலுள்ள வேலை தேடி மற்ற மாவட்டங்களுக்கு புலம்பெயர்ந்து விடுகின்றனர். பலர் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். கிராமம் ஒரு மலைப்பாங்கான நிலப்பரப்பில் அமைந்திருப்பதால், ரோந்துப் பயணம் செல்வது அவ்வளவு எளிதான காரியமில்லை.


மலைப்பாங்கான நிலப்பரப்பு என்பதால் வேட்டைக்காரர்கள் மற்றும் மர மாஃபியாக்களுக்கு இந்த வனப்பகுதி காரியம் சாதிக்கும் இடமாகிவிட்டது.

“எங்களுக்கு சிறு விளைபொருட்களை வழங்கும் வனத்தை பாதுகாப்பது மிக முக்கியமானது. மேலும் இந்த காரணம்தான் எங்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது,” என்கிறார் கரியகாமன் கிராமத்தின் வி.எஸ்.எஸ் அமைப்பின் துணைத் தலைவர் சரோஜினி சமார்த்தா.

பெண்களில் சிலர் காலையில் மட்டுமல்லாமல், இரவிலும் ரோந்து பணியில் ஈடுபடும் வன அதிகாரிகளுக்கு உதவியாக உடன் செல்கின்றனர்.

பழங்குடி பெண்

ரேஞ்ச் அதிகாரி சுசாந்தா பந்தா கூறுகையில்,

“பெண்கள் முழு வனப்பகுதியிலிருந்தும் உலர்ந்த இலைகளை தவறாமல் சுத்தம் செய்கிறார்கள். கடந்த ஆண்டு முதல், காட்டில் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை," என்றார். 

இந்த முயற்சி அப்பகுதி பெண்களுக்கு பொருளாதாரத்தை விரிவுபடுத்த உதவியுள்ளது. அவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.298 ஊதியம் அளிக்கப்படுகிறது.


அய் ஜங்கிள் யோஜனாவின் கீழ் வன மேலாண்மை மற்றும் பாதுகாப்புப் பணிகளில் அதிகமான கிராமவாசிகளை, குறிப்பாக பெண்களை ஈடுபடுத்த முயற்சிகள் நடந்து வருவதாகவும், இது போன்ற திட்டங்கள் தவிர, திறன் மேம்பாடு மற்றும் சுய உதவிக்குழுக்களை உருவாக்குவதன் மூலம் கிராம மக்கள் வாழ்வாதாரத்திற்காக காடுகளை நம்பியிருப்பதற்கான தேவையை குறைக்கமுடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.