வெறும் ரூ.279 செலவில் வீட்டிலேயே இயற்கை காய்கறிகளை வளர்ப்பது எப்படி?
உங்களுக்கான காய்கறிகளை நீங்களே சொந்தமாக வளர்க்க வேண்டுமா? டிப்ஸ் இதோ...
தோட்டக்கலை எளிதல்ல. நான் சமீபத்தில் தோட்டக்கலைக்கு அதிக இடம் மட்டும் போதுமானதல்ல என்று தெரிந்துகொண்டேன், செடி வளர்ப்புக்கு மண், பராமரிப்பு, சிறந்த தரமான உரம் மற்றும் தேவையான சூரிய ஒளி, நீர் ஆகியவையும் அவசியம்.
இவையெல்லாம், நீங்கள் தோட்டக்கலையை கைவிட வேண்டும் எபதற்கு கூறவில்லை. உங்கள் தாவரங்கள் வாடுவதை பார்த்தாலோ அல்லது விதைகளிலிருந்து ஒரு தாவரம் முளைக்கவில்லை என்றால், இங்கே ஒரு ஸ்டார்டர் கிட் கிடைக்கிறது, இது உங்களுக்கு கரிம காய்கறிகளை வளர்க்க உதவும்.
உங்களுக்கான காய்கறிகளை நீங்களே ஏன் சொந்தமாக வளர்க்க வேண்டும்?
இதற்கு மிக முக்கியக் காரணம் பணம். சில மாதங்களுக்கு ஒருமுறை காய்கறிகளின் விலை உயர்ந்து வருவதால், நம்மைப் போன்ற சாதாரண மக்கள் மற்ற அத்தியாவசிய பொருட்களை தவிர்க்க முடியாது அல்லது காய்கறிகளை வாங்கி சாப்பிடுவதற்காக நாம் நம் பட்ஜெட்டை அதிகப்படுத்த முடியாது.
இரண்டாவது, இது உங்களைச் சுற்றி உள்ள பகுதிகளை பசுமையானதாக மாற்றவும் உதவுகிறது. உங்கள் வீட்டில் இருக்கும் பால்கனிகள், மொட்டை மாடிகள், வராண்டா போன்ற காலி மனைகளைப் பயன்படுத்தி தக்காளி, கொத்தமல்லி, மிளகாய் அல்லது பிற காய்கறிகளை வளர்த்து பசுமையாக வைத்திருக்கலாம்.
மூன்றாவது முக்கியமான காரணம் என்னவென்றால், தற்போது, உங்கள் காய்கறிகளில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடுகள் இருக்கலாம். கரிம (ஆர்கானிக்) காய்கறிகளை வாங்குவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம், ஆனால் இவை விலை அதிகமாக இருக்கும். எனவே, ஆர்கானிக் காய்கறிகளை வளர்ப்பது அதிக பணம் செலவில்லாமலும் சுத்தமான காய்கறிகளில் உணவு சமைப்பதை உறுதி செய்யும்.
தோட்டக்கலை கிட்டில் என்ன இருக்கும் ?
மிகவும் மலிவான இந்த கிட் ரூ.279 மட்டுமே! உங்கள் தோட்டத்தைத் உருவாக்கத் தேவையான அனைத்துக் கூறுகளும் இதில் உள்ளன. உங்கள் காய்கறிகளை வளர்க்க ஒரு பானை அல்லது இடத்தை ஏற்பாடு செய்து, இந்த கிட் வாங்கிச் செல்லுங்கள்!
தோட்டக்கலை கிட்-ல் வழங்கப்படுபவை:
- ஆரம்ப கட்டத்திற்குத் தேவையான 1 மக்கும் பானை. உங்கள் தோட்டக்கலை உருவாக்கும் செயலை இங்கே தொடங்கவும், பின்னர் இந்த கலவையை நிரந்தர பானை அல்லது தோட்டம் உருவாக்கும் இடத்திற்கு மாற்றவும்.
- கொஞ்சம் மண், இவை விதை சிறந்த தரமான சூழலில் வளர உதவும்.
- தேவையான உரம், இவை ஒவ்வொரு தாவரத்திற்கு உந்துதலைக் கொடுக்கிறது (இரசாயன கலப்பில்லாத உரம்).
- நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய தாவர விதைகள் (செர்ரி, தக்காளி, கொத்தமல்லி, வெள்ளரி, ஓக்ரா, பப்பாளி, கீரை, இனிப்பு துளசி, தக்காளி அல்லது தர்பூசணி)
- உங்களுக்கு வழிகாட்ட ஒரு வழிமுறை கையேடு.
- உங்கள் தாவரத்தின் வளர்ச்சியைக் கண்காணிக்க உதவும் ஒரு பராமரிப்பு விளக்கப்படம்.
கிட் உடன் காய்கறி தோட்டத்தை உருவாக்கத் தேவையான அடிப்படை வழிமுறைகள்:
உங்களிடம் கிட் மற்றும் சிறிது நேரம் இருந்தால், நீங்கள் விதைகளை எவ்வாறு விதைக்க வேண்டும் மற்றும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
- மக்கும் கலவை மற்றும் உரத்தை மக்கும் பானையில் நிரப்பவும்.
- விதைகள் வளர ஈரமான சூழல் தேவை, அதனால் மண்ணில் தண்ணீர் தெளித்து ஈரப்பதமாக வைத்திருக்கவும்.
- ஒரு அங்குல ஆழத்தில் ஒன்றுக்கொன்று சுமார் 2-4 செ.மீ தூரத்திலும் விதையை நடவு செய்யுங்கள். இது ஒவ்வொரு விதையும் வளர போதுமான இடத்தை அளிக்கிறது.
- மண் கலவை மற்றும் மீதமுள்ள உரத்தை விதையின் மீது போட்டு மூடி வைக்கவும் மற்றும் காற்று புகாமல் இருப்பதற்காக மண்ணை நன்கு அழுத்தி விடவும்.
- முளைக்கும் பகுதி ஈரமாக வைத்திருப்பதற்காக தினமும் இருமுறை தண்ணீர் ஊற்றவும்.