‘தனிநபர் வருமானம் உயரும்போது கண்டெண்ட்க்கு செலவு செய்வார்கள்’ - TechSparks நிகழ்வில் டெய்லிஹண்ட் உமங் பேடி!
பிரமாண்டமான டெக்ஸ்பார்க் நிகழ்ச்சியின் இரண்டாம் நிகழ்வு இன்று சிறப்பாகத் தொடங்கியது.
மற்றும் ஆப் ப்ராண்ட்களை கொண்டிருக்கும் VerSe Innovation நிறுவனத்தின் இணை நிறுவனர் உமங் பேடி உடன் யுவர் ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா சர்மா உரையாடினார்.எங்களுடைய முதலீட்டாளர்களிடம் பேசும்போது முதலீட்டாளர்கள் அனைவரும், கண்டெண்ட் நிறுவனமான ’டெய்லிஹண்ட்’ எப்படி வருமானம் ஈட்டுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள் என்று சொல்லுவார்கள். அந்த கேள்வியை நான் இப்போது உங்களிடம் கேட்கிறேன். கண்டெண்டில் இருந்து எப்படி வருமானம் ஈட்டுகிறீர்கள் என முதல் கேள்வியைக் கேட்டு கலகலப்பாக தொடங்கினார் ஷ்ரத்தா?
அதற்கு பதிலளித்த உமங் பேடி,
“கண்டெண்ட் டெக் இப்போதுதான் வளர்ந்து வருகிறது. நாங்கள் எப்படி வளர்ந்து வருகிறோம் என்பதை பார்க்கும் முன்பு இந்தியாவில் மக்கள் கண்டெண்டுக்கு பணம் செலுத்தும் சூழலில் இருக்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும், என்றார்.
அமெரிக்காவின் தனிநபர் வருமானம் 50,000 டாலர்கள். ஆனால், இந்தியாவின் தனிநபர் வருமானம் தோராயமாக 2,200 டாலர் மட்டுமே. இதுதான் நிலைமை. மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிலைமை இங்கு இருக்கிறது. ஆனால், இந்த சூழலில்தான் நாம் பிஸினஸில் இருந்தாக வேண்டும்.
”இந்தியாவில் முதல் பத்து நகரங்களில் 12 கோடி மக்கள் இருக்கிறார்கள். இவர்களின் தனிநபர் வருமானம் சுமார் 4,000 டாலர். இந்த மக்களை நம்பிதான் பெரும்பாலான தொழில்கள் உள்ளன. அப்படியான இந்தியாவின் பெரும்பாலானோரின் தனிநபர் வருமானம் 4,000 டாலர்கள் என்னும் அளவுக்கு உயரும்போது பெரிய வாய்ப்புகள் உருவாகும். அப்போது அந்த சந்தையை கைப்பற்ற நாம் தயராக இருக்க வேண்டும்,” என விரிவாகப் பேசினார்.
எப்படி உங்கள் பிராண்டை பிரபலப்படுத்தினீர்கள் என்னும் கேள்விக்கு கொஞ்சம் அரசியலுடன் பேசினார் உமங்.
2018-ம் ஆண்டு நாங்கள் ஒரு சர்வே நடத்தினோம். ஏசி நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து மிகப்பெரிய அரசியல் சர்வே நடத்தினோம். இதற்கு மட்டும் எங்களுக்கு ஒரு லட்சம் டாலர் அளவுக்கு செலவு ஆனது. அதுவரை இல்லாத அளவுக்கு 7 மில்லியன் நபர்கள் இந்த சர்வேயில் கலந்துகொண்டார்கள்.
”இதில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்னும் சர்வே கணிப்பை நாங்கள் வெளியிட்டிருந்தோம். ஆனால், வெளியிட்ட சில நாட்களில் மூன்று மாநிலங்களில் பாஜக தோற்றிருந்தது. இதனால் சந்தையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் எங்கள் ப்ராண்டுக்கு பிரபலமும், பெருமளவில் பார்வையாளர்கள் உயர்ந்தார்கள்,” எனத் தெரிவித்தார்.
”Content is King என்று சொல்லுவார்கள் ஆனால், King has no Money என்பதுதான் சூழலாக இருக்கிறது. இந்த சூழலை எப்படி சமாளிக்கிறீர்கள், என்ற ஷ்ரத்தாவின் கேள்விக்கு,
”கண்டெண்ட் இல்லாமல் பணம் வராது. ஹாட் ஸ்டார் ஐபிஎல் ஏலம் எடுத்த அந்த உரிமம்தான் அவர்களுக்கு பெரிய மதிப்பைத் தந்தது. அந்த மதிப்பை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும். குறுகிய காலத்துக்கு யோசிக்காமல் நீண்ட காலத்துக்கு யோசிக்க வேண்டும். இது நமக்கு மட்டுமல்லாமல் கூகுள், ஃபேஸ்புக் என அனைத்து நிறுவனங்களுக்குமே விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானம் குறைந்திருக்கிறது. வேறு வழியை நாம் கண்டறிய வேண்டும். உதாரணத்துக்கு யுவர் ஸ்டோரி ஸ்டார்ட் அப் பற்றிய செய்திகளை வெளியிடும் நிறுவனம் என்றால் டெக்ஸ்பார்க் என்பது யுவர் ஸ்டோரிக்கு வருமானம் கொடுக்கும் வழிகளில் இதுவும் ஒன்று. இதுபோல ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும். ஏற்கெனவே சொன்னதுபோல தனிநபர் வருமானம் 4000 டாலர் என்னும் அளவுக்கு உயரும்போது மக்களாக பணம் கொடுத்து கண்டெண்ட் வாங்குவார்கள். என்னைப் பொறுத்தவரை ‘Content is King’ ஆனால், ஒவ்வொருவரும் நமக்கான ஒரு தனிச்சிறப்பை உருவாக்கவேண்டும் அதுவே மதிப்பையும், வருவாயையும் தரும், என்றார்.
நீங்கள் விற்பனைக்கான ஆட்களை எடுப்பதில் வல்லவர் என்பது எங்களுக்கு தெரியும். அதை பற்றி சொல்ல முடியுமா?
விற்பனைக்கான ஆட்களை எடுக்கும்போது அவர்களுக்கு விற்பனையில் ஹங்கர் (ஆர்வம்) இருக்கிறதா, அவர்களிடம் தொழில்முனைவுக்கான சிந்தனை இருக்கிறதா என்பதை பார்ப்பேன். அடுத்து ஒரு முக்கியமான கேள்வியை கேட்பேன். உங்களை வேலையில் எடுக்கக் கூடாததற்கான மூன்று காரணங்களைக் கேட்பேன். இதிலே பல விஷயங்கள் புரியும்.
மேலும், எப்.எம்.சி.ஜி உள்ளிட்ட வேறு துறைகளில் பணியாற்றியவர்களை மீடியாவுக்கு கொண்டுவரும்போது அவர்களின் சிந்தனை புதிதாக இருக்கும். இதுபோல பல வகைகளில் ஆட்களை எடுக்கிறோம் உமாங் தெரிவித்தார்.
ஐபிஒ மற்றும் நிதி தகவல் குறித்து கேட்டதற்கு,
எங்களிடம் இரு பிரிவுகள் உள்ளன டெய்லி ஹண்ட் கடந்த 18 மாதங்களாக லாபத்தில் இருக்கிறது. ஆனால், ஜோஷ் ஆப் வருமானம் ஈட்டத்தொடங்கி இருக்கிறது. ஆனால் இன்னும் லாப பாதைக்கு திரும்பவில்லை. அடுத்த 18 மாதங்களில் பிரேக் ஈவன் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறோம். அதற்குபிறகுதான் ஐபிஓ குறித்து திட்டமிடவேண்டும், என்றார்.
2016-ம் ஆண்டு சமயத்தில் 2 மாதங்களுக்கு மட்டுமே நிதி இருந்தது. அந்த சமயத்தில் அலிபாபா பெரிய தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அலிபாபா கொடுக்கவில்லை. மிகப்பெரிய சிக்கல் இருந்தது. அப்போது பலரை சந்தித்து முதலீடு பெற்றோம். அதேபோல,
“20200ம் ஆண்டு தொடக்கத்திலும் இதேபோல சூழல் இருந்தது. ஆனால் அப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் தற்போது எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது ஒரு பயத்தை உருவாக்குகிறது. அதனால் ஸ்டார்ட் அப் பயணத்தை அனுபவிக்கவும்.
உங்கள் ஸ்டார்ட் அப்க்கு பெரிய சந்தையும், புதிய தீர்வையும் நீங்கள் கொடுக்கும்பட்சத்தில் சந்தையில் முதலீடு இருந்துகொண்டுதான் இருக்கிறது,” என உமாங் பேடி முடித்தார்.
கண்டெண்ட் மூலம் எப்படி பிஸினஸை வளர்ப்பது என்பது அனைத்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது.
'Tesla for west; Ola for Rest' - யுவர்ஸ்டோரி TechSparks விழாவில் ஓலா பாவிஷ் அகர்வால்!