Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

ஒரு நாள் செலவு 21 ரூபாய்; 300k சப்ஸ்கிரைப்பர்கள்: யூட்யூப் சேனலில் வெற்றிக் கண்ட சலோனி!

பிரபல யூட்யூபர் மற்றும் உள்ளடக்கம் உருவாக்குபவரான சலோனி ஸ்ரீவத்சவா HustlePost Academy தொடங்கி ஆன்லைன் வணிகத்தில் ஈடுபவடுவதற்கான வழிகாட்டல்களை வழங்குகிறார்.

ஒரு நாள் செலவு 21 ரூபாய்; 300k சப்ஸ்கிரைப்பர்கள்: யூட்யூப் சேனலில் வெற்றிக் கண்ட சலோனி!

Wednesday December 02, 2020 , 4 min Read

சலோனி ஸ்ரீவத்சவா. 27 வயதான இவர், ஒரு யூட்யூபர். உள்ளடக்கம் உருவாக்குகிறார். இவரது வெற்றி பலருக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்துள்ளது.


ஆன்லைனில் வணிகம் தொடங்கவேண்டும் என்கிற விருப்பம் பலருக்கு இருக்கும். ஆனால் பலருக்கு சரியான வழிகாட்டல் கிடைக்காததே பிரச்சனையாக இருக்கும். எந்தத் துறையில் செயல்படலாம்? எதில் நமக்கு ஆர்வம் உள்ளது? எது பலனளிக்கும்? எதில் வாய்ப்புகள் அதிகம்? என்ன பிரச்சனைகளை சமாளிக்கவேண்டியிருக்கும்? இப்படி ஒவ்வொருவரிடமும் விடை தெரியாத கேள்விகள் ஏராளமாக இருக்கும்.


சலோனியின் வெற்றியைக் கண்ட பலர் ஆன்லைனில் வணிகத்தை உருவாக்குவதற்கு வழிகாட்டுமாறு கேட்டுக்கொண்டனர். ஒருகட்டத்தில் இதுபோன்ற கோரிக்கைகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது.

ஆன்லைனில் செயல்பட விரும்புவோரின் எண்ணிக்கை ஒருபுறமும் அவர்கள் மனதில் எழும் கேள்விகள் மற்றொருபுறமும் தொடர்ந்து அதிகரித்து வருவதை சலோனி கவனித்தார். இதற்கான வழிகாட்டல் என்பது ஒருவரியில் சுருக்கமாக இருக்கமுடியாது என்பதையும் விரிவாக வகைப்படுத்தி வழங்கினால் சிறப்பாக பலனளிக்கும் என்பதையும் உணர்ந்த தருணத்தில் இவருக்கு உதித்த யோசனைதான் மற்றொரு வணிகமாக உருவெடுத்தது.

HustlePost Academy

சலோனி கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சமயத்தில் HustlePost Academy என்கிற புதிய வணிகத்தைத் தொடங்கினார்.

2

சமூக வலைதளங்களை சிறப்பாகப் பயன்படுத்தி வருவாய் ஈட்ட விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதே இந்த வணிகத்தின் நோக்கம். கொரோனா பெருந்தொற்று மக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது.


பலர் வேலையை இழந்தார்கள். வெளியில் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில் ஆன்லைன் வணிகத்தில் ஈடுபட்டு வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை ஏராளமானோர் தீவிரமாக ஆராயத் தொடங்கினார்கள்.


சலோனி இந்த முயற்சிக்காக கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் உறக்கமின்றி உழைக்க வேண்டியிருந்தது. 13 கோர்ஸ் வடிவமைத்தார். புதிய வணிக வாய்ப்புகளை ஆராயவும் புதிய வணிகத்தைத் தொடங்கவும் உதவும் வகையில் இந்த கோர்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“எப்படி படைப்பாளி ஆவது? ஆன்லைனில் எப்படி வணிகம் தொடங்குவது? இப்படி ஏராளமானோர் கேள்வியெழுப்பினார்கள். என்னால் முடிந்த வரை அனைவருக்கும் உதவினேன். அதேசமயம் விரிவான, ஒழுங்குபடுத்தப்பட்ட வழிகாட்டல் அவசியம் என்று எண்ணினேன். மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது என்னுடைய ஆலோசனைகளை மக்கள் பயன்படுத்திக்கொள்வதற்கான சரியான தருணம் இதுதான் என்று தோன்றியது,” என்று ஹெர்ஸ்டோரி இடம் தெரிவித்தார் சலோனி.

நிலையான வணிகத்தைத் தொடங்க சமூக வலைதளங்களையும் இணையத்தையும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள உதவவேண்டும் என்பதே இவரது முயற்சியின் நோக்கம்.


தனிப்பட்ட முறையில் அமர்வுகள் ஏற்பாடு செய்வதே சலோனியின் திட்டமாக இருந்தது. ஆனால் பயனர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. இதனால் பிரத்யேக வலைதளத்தையும் பாடதிட்டத்தையும் அமைக்க திட்டமிட்டார்.


ஆலோசனைகள் கேட்போரின் தேவைகளையும் அவர்கள் எழுப்பும் கேள்விகளையும் கருத்தில் கொண்டே பாடங்களை வடிவமைத்தார். இதுகுறித்து அவர் விவரிக்கும்போது,

“ஆன்லைன் வணிகத்தைத் தொடங்குவதற்கான முக்கியத் தகவல்களை வழங்கும் அடிப்படை கோர்ஸ் ஒன்று உள்ளது. 12 மினி கோர்ஸ் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய கோர்ஸ் அறிமுகப்படுத்தப்படுகிறது. யூட்யூபர் ஆவது, இன்ஸ்டாகிரமைப் பயன்படுத்திக்கொள்வது என பல்வேறு வழிகாட்டல்கள் இதில் இடம்பெற்றிருக்கும். நீங்கள் செயல்பட எத்தகைய பாதையைத் தேர்வு செய்கிறீர்களோ, அந்தப் பாதையில் பயணிக்க இந்த 13 பாடதிட்டங்கள் உதவியாக இருக்கும்,” என்கிறார்.

HustlePost Academy ஆரம்பத்தில் இருந்து வழிகாட்டுகிறது. யூட்யூபர் ஆகவேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருக்கிறது. இந்த விருப்பத்துடன் இந்த அகாடெமியை அணுகுபவர்களுக்கு, அவர்களது ஆர்வம் எந்தப் பகுதியில் இருக்கிறது என்பது முதலில் கண்டறியப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு எந்த மாதிரியான வீடியோக்கள் உருவாக்கலாம் என்பது தீர்மானிக்கப்படுகிறது.

“ஆர்வமான பகுதியைக் கண்டறிவது, உள்ளடக்கம் உருவாக்குவதற்கான உத்தி, தம்ப்நெயில் வடிவமைப்பு, பிராண்டுகளைக் கையாளுதல், சொந்த பிராண்ட் உருவாக்குதல், படைப்பை பணமாக்குவது என ஒரு யூட்யூபர் மேற்கொள்ளவேண்டிய ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் நாங்கள் வழிகாட்டுகிறோம். இந்தப் பகுதியில் எனக்கு அனுபவமும் ஆழ்ந்த புரிதலும் இருப்பதால் அடுத்தடுத்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை எளிதாகப் புரியும்படி பிரித்து வகைப்படுத்தியிருக்கிறேன்,” என்கிறார் சலோனி.

HustlePost Academy முயற்சிக்கு கிடைத்த வரவேற்பு சலோனியை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த அகாடமியைத் தொடங்கியபோது சுமார் 100 பேர் இணைவார்கள் என இவர் எதிர்பார்த்தார். அதற்கேற்றவாறே இவர் தன்னைத் தயார்படுத்திகொண்டிருந்தார். ஆனால் இவர் அறிமுகப்படுத்திய ஒரு மணி நேரத்தில் 100 பேர் இணைந்துவிட்டனர். 24 மணி நேரத்தில் 600 பேர் அகாடமியில் இணைந்தார்கள்.

3
“இரண்டு மாதங்களிலேயே கிட்டத்தட்ட 2,000 பேர் இணைந்துவிடுவார்கள் என்று நான் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. என்னுடைய செயல்பாடுகள் அனைத்தையும் மீண்டும் சரிபார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிஸ்டம், ஆட்டோமேஷன் என அனைத்தையும் மறுபரிசீலனை செய்தேன். அதிகளவிலான பயனர்கள் தொடர்பில் இருக்க உதவும் வகையில் வலைதளத்தைப் புதுப்பிக்க ஆட்களை பணியமர்த்தினேன்,” என்றார்.

இவர் வடிவமைத்துள்ள பாடதிட்டத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

1. ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட விரிவுரைகள் அடங்கிய நூலகம் (மாணவர்கள் 24X7 இவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும்)

2. வீட்டுப்பாடம் ஒதுக்கப்படும்

3. சலோனியுடனும் மற்ற மாணவர்களுடனும் நேரலை தொடர்பு மாணவர்கள் அனைவருமே ஆன்லைன் வணிகத்தில் ஈடுபடவேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் இந்தப் பயணத்தில் இணைந்திருப்பதால் ஆன்லைன் செயல்முறை சிலசமயங்களில் தனிமையான உணர்வு ஏற்படுத்துவதுண்டு என்கிறார் சலோனி.

“சரியான நபரை அணுகும் முறை உங்களுக்குத் தெரியாமல் போகலாம். நாங்கள் நேரலையில் உரையாடும் வசதியை வழங்குவதால் அனைவரும் ஒருவரோடொருவர் கலந்துரையாடி, திறன்களை பரிமாறிக்கொண்டு, தேவையானோரை பணியமர்த்திக்கொள்ளலாம். வாரந்தோறும் நேரலை அழைப்புகள் ஏற்பாடு செய்கிறேன். அனைவரின் கேள்விகளுக்கும் தனிப்பட்ட முறையில் பதில்களையும் ஆலோசனைகளையும் வழங்குகிறேன்,” என்றார்.

HustlePost Academy பாடதிட்டத்திற்கான கட்டணம் 7,665 ரூபாய். வலைதளத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து உள்ளடக்கங்களையும் ஓராண்டு வரை பயன்படுத்திக் கொள்ளவதற்கான அனுமதியும் அளிக்கப்படும். நேரலையில் வழிகாட்டல் வழங்கப்படும். இவை அனைத்தையும் நீங்கள் பெறுவதற்கு செய்யவேண்டிய முதலீடு நாள் ஒன்றிற்கு 21 ரூபாய் மட்டுமே என்கிறார் சலோனி.


HustlePost Academy படைப்பாளி சார்ந்த செயல்படுவது அதன் தனித்துவமான அம்சமாகும்.

“எத்தனையோ ஆன்லைன் தளங்கள் செயல்பட்டாலும் ஒரு சில தளங்களே படைப்பாளி சார்ந்து செயல்படுகிறது. இவற்றை நடத்துபவரின் பிராண்ட் அடையாளம் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். நேரலையில் நாங்கள் ஆதரவளிக்கும் அம்சம், வெவ்வேறு தளங்களை ஆராய்ந்து பொருத்தமானவற்றைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு போன்றவையே எங்களது தனித்துவமான அம்சங்கள்,” என்கிறார் சலோனி.

HustlePost Academy பல வெற்றிக் கதைகளை உருவாக்கியுள்ளது. பட்டயக் கணக்காளர் ஒருவர் ஆன்மீகம் தொடர்பான ஆன்லைன் பாடம் ஒன்றை தொடங்கியுள்ளார். ஃப்ரீலான்ஸ் உள்ளடக்க எழுத்தாளர் ஒருவர் மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கிறார். இப்படி எத்தனையோ வெற்றிக் கதைகள் உள்ளன.


இந்த அகாடமியின் பயனர்கள் 27 முதல் 30 வயதுடையவர்கள். இவர்களில் 13 வயதுடையவர் மிகவும் இளம் வயதினர். 55 வயதுடையவர் மூத்த வயதுடையவர். இவருக்கு யூட்யூபில் 3 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர்.

“தனிப்பட்ட முறையில் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வது சிறப்பாக பலனளித்தது. வருவாய் ஈட்டுவது என்னுடைய நோக்கமல்ல. ஒத்த சிந்தனையுடைய நபர்களை குழுவாக ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறேன். இதில் வெற்றியடைந்துள்ளேன் என்று நம்புகிறேன். ஏனெனில் புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்தினால் குழுவினர் விரைவாக அதை ஏற்றுகொள்ளும் போக்கினை பார்க்கமுடிகிறது,” என்கிறார் சலோனி.

ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா