வெற்றி பெரும் ஊழியருக்கு ரூ.10 லட்சம் பரிசு; Zerodha சிஇஓ விட்ட சவால்!
இந்தியாவின் பிரபலமான ஸ்டாக் டிரேடிங் நிறுவனமான ஜீரோதா சிஇஓ தனது ஊழியர்களுக்காக அசத்தலான பரிசு ஒன்றினை அறிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரபலமான ஸ்டாக் டிரேடிங் நிறுவனமான
சிஇஓ தனது ஊழியர்களுக்காக அசத்தலான பரிசு ஒன்றினை அறிவித்துள்ளார்.2010ம் ஆண்டு தனது சகோதரர் நிதினுடன் இணைந்து நிதின் காமத் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக தரகு நிறுவனமான ’ஜீரோதா’வை தொடங்கினார். இளம் பெரும் பணக்காரராக உருவெடுத்து வரும் ஜீரோதா நிறுவனத்தின் சிஇஓ நிதின் காமத் தனது ஊழியர்களை பிட்னஸ் பிரியர்களாக மாற்றுவதற்காக சூப்பரான பரிசுத் திட்டம் ஒன்றிணை அறிவித்துள்ளார்.
ஃபிட்னஸ் சேலஞ்ச்:
தற்போது ஜீரோதா நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றி வருவதால், அவர்களது உடல் நலனை ஊக்குவிக்கும் விதமாக உடல்நலம் தொடர்பான முயற்சிகளில் கவனம் செலுத்திவரும் ஊழியர் ஒருவருக்கு ரூ.10 லட்சம் போனஸ் அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதுகுறித்து காமத் தனது பதிவில்,
"நம்மில் பெரும்பாலோர் WFH -இல் இருப்பதால், உட்கார்ந்திருப்பது, புகைபிடித்தல் ஆகியவை புதிய தொற்றுநோயாக மாறி வருகிறது. நமது டீமில் உள்ள அனைவரையும் உடல் நலம் குறித்து உற்சாகப்படுத்தும் விதமாக புதிய போட்டியை அறிமுகப்படுத்துகிறோம். இதன் மூலம் உடல் நலத்தை சரியாகப் பராமரிக்கும் ஊழியர்களுக்கு ஒரு மாத போனஸும், அதிர்ஷ்டசாலியான ஒரு நபருக்கு ரூ.10 லட்சம் பரிசாகவும் வழங்கப்படும்,” என அறிவித்துள்ளார்.
ஜீரோதா நிறுவனம் ஃபிட்னஸ் டிராக்கர்களைக் கொண்டு தினசரி இலக்குகளை நிர்ணயிக்கும் என்றும், ஒரு நாளைக்கு குறைந்தது 350 கலோரிகளை எரிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.
நிதின் காமத் லிங்கிடு இன் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"Zerodha-வில் உடல் நலம் பற்றிய சமீபத்திய சவால், ஃபிட்னஸ் டிராக்கர்கள் உதவியுடன் ஊழியர்கள் தங்களது தினசரி இலக்கை அடைய உதவும். அடுத்த ஆண்டிற்குள் 90 சதவீத இலக்கை அடையும் ஊழியருக்கு ஒரு மாத சம்பளம் போனஸாக வழங்கப்படும். மேலும், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் ஒரு ஊழியருக்கு ஊக்கத்தொகையாக 10 லட்சம் பரிசாக வழங்கப்படும்,” என பதிவிட்டுள்ளார்.
இது முதல் முறை அல்ல:
நிதின் காமத் ஜீரோதா ஊழியர்களுக்கு இதுபோன்ற ஃபிட்னஸ் சவால்களை விடுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. 25 க்கும் குறைவான உடல் நிறை குறியீட்டெண் (BMI) கொண்ட ஊழியர்களுக்கு போனஸாக அரை மாத சம்பளம் வழங்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார்.
பிஎம்ஐ-யை வைத்து ஊழியர்களுக்கு போனஸ் திட்டத்தை அறிவித்தது நிதின் காமத் மீது கடும் விமர்சனங்களை உருவாக்கியது.
ஆனால், வொர்க் ஃப்ரம் ஹோம் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்கவும், உடல் நலன் மீது அக்கறை செலுத்துவதை தூண்டவுமே இப்படியொரு சவாலை விட்டதாக நிதின் காம்த் தெளிவாக விளக்கமளித்திருந்தார்.