ஒரு பில்லியன் டாலர் வருவாயை கடந்த Zerodha - லாபமும் 89 சதவீதம் உயர்வு!
பங்குச்சந்தை கட்டுப்பாடு அமைப்பு செபியின் சேவை கட்டணம் தொடரபான புதிய கட்டுப்பாடு காரணமாக, இந்த நிதியாண்டில் 10 சதவீத வருவாய் குறைவு ஏற்படலாம், என்று ஜெரோதா தெரிவித்துள்ளது
இணைய வழி பங்குச்சந்தை மேடையான ஜெரோதாவின் நிகர லாபம், 2024 மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில் 89 சதவீதம் அதிகரித்து ரூ.5,496 கோடியாக உள்ளது என தெரிவித்துள்ளது. நிறுவனம் தனது செலவுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பங்குச்சந்தை கட்டுப்பாடு அமைப்பு செபியின் சேவை கட்டணம் தொடர்பான புதிய கட்டுப்பாடு காரணமாக, இந்த நிதியாண்டில் 10 சதவீத வருவாய் குறைவு ஏற்படலாம் என்றும், டிரைவேட்டிவ் தொடர்பான விதிகளால் 30 முதல் 50 சதவீத வருவாய் தாக்கம் ஏற்படலாம், என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2020 நிதியாண்டில் நிறுவன நிகர லாபம் ரூ.5,496 கோடியாக இருந்தது, முந்தைய நிதியாண்டில் இது 2,908 கோடியாக இருந்தது. செயல்பாடுகள் மூலமான வருவாய், 37 சதவீதம் அதிகரித்து, ரூ.9,372 கோடியாக (ஒரு பில்லியன் டாலர்) இருந்தது. 2023 நிதியாண்டில் இது ரூ.6,832 கோடியாக இருந்தது.
இதர ஆதாயங்கள் உள்ளடக்கிய மொத்த வருவாய், முந்தைய ஆண்டில் ரூ.6,877 கோடியில் இருந்து, ரூ.9,994 கோடியாக அதிகரித்தது. நிறுவனம் ஊழியர் நலன் செலவுகளில், 24 சதவீத குறைவை கண்டு, ரூ.473.96 கோடியாக இருந்தது.
இதனிடையே, இதர செலவுகள் 11 சதவீதம் அதிகரித்து ரூ.2,619 கோடியாக இருந்தது. 28 சதவீதம் அதிகரித்து தகவல் தொழில்நுட்ப செலவு (ரூ.492 கோடி) இதற்கு முக்கியக் காரணம். முக்கிய செயல்முறை செலவான பரிவர்த்தனை, டெபாசிட்டரி செலவு, வர்த்தகம் அதிகரிப்பின் காரணமாக ரூ.14,756 கோடியாக இருந்தது.
போட்டி நிறுவனம் க்ரோ 2024 நிதியாண்டில், ரூ.3,145 கோடி வருவாய் ஈட்டியுயுள்ளது. முந்தைய நிதியாண்டில் இது ரூ.1,435 கோடியாக இருந்தது. இந்த செயல்முறை லாபமும் ரூ.535 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் இது ரூ.458 கோடியாக இருந்தது. இந்நிறுவனம் இந்தியாவுக்கு தலைமை அலுவலகத்தை மாற்றியதன் காரணமாக ஒரு முறை வரி பொறுப்பு ரூ.1,340 கோடியால் 24 நிதியாண்டில் ரூ.805 கோடி நிகர நஷ்டத்தை எதிர்கொண்டது.
ஆங்கிலத்தில்: சயான் சென், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan