Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

மாணவிகளுக்கு இனி மாதம் ரூ.1000 - ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் கீழ் உதவி பெறுவது எப்படி?

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித் தொகை வழங்கும் "புதுமைப் பெண்" திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.

மாணவிகளுக்கு இனி மாதம் ரூ.1000 - ‘புதுமைப்பெண்’  திட்டத்தின் கீழ் உதவி பெறுவது எப்படி?

Monday September 05, 2022 , 3 min Read

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித் தொகை வழங்கும் "புதுமைப் பெண்" திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.

கடந்த முறை 2022 - 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது, “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்” என மாற்றப்படும் என அறிவித்தார்.

அதன்படி, அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு உயர் கல்வி அல்லது டிப்ளமோ அல்லது தொழிற்படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, இதற்காக 698 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ். அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று. உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித் தொகை வழங்கும் "புதுமைப் பெண்" திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

MK Stalin

புதுமைப்பெண் திட்டம்:

மாநிலத்தின் அனைத்து வளர்ச்சியிலும் பெண்களுக்கு உரிய இடம் வழங்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை என்ற பெயரை "சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை" என மாற்றம் செய்துள்ளது.

பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள். திருநங்கையர் போன்றவர்களின் நலனை காத்திடும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும். மருத்துவராகவும். பொறியாளராகவும், படைப்பியலாளராகவும். நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும், உருவாக்க அடித்தளமாக "புதுமைப் பெண்" என்னும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.

இன்று சென்னை, பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித் தொகை வழங்கும் "புதுமைப் பெண்" திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில், உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர் பாபு. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

67 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித்தொகை:

முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில், மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்குச் செல்லும் மாணவிகளுக்கும். மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில், நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளனர்.

MK Stalin

அந்த வகையில், இன்று முதற்கட்டமாக 67,000 கல்லூரி மாணவிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில், 2,500 மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் மற்றும் நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய "புதுமைப் பெண்" பெட்டகப்பை மற்றும் வங்கி பற்று அட்டை (Debit Card) ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின்போது, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்று பயன்பெற்ற மாணவிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

புதுமைப்பெண் திட்டம் யாருக்கு கிடைக்கும்?

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும் அல்லது தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவியர்களாக இருத்தல் வேண்டும்.

MK Stalin

மாணவிகள் 8-ஆம் வகுப்பு அல்லது 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்புகளில் படித்து பின்னர், முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் (Higher Education Institutions) சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.

புதுமைப் பெண் திட்டத்தில், சான்றிதழ் படிப்பு (Certificate Course), பட்டயப் படிப்பு (Diploma/ITI./D.TEd., Courses), இளங்கலைப் பட்டம் (Bachelor Degree - B.A., B.Sc., B.Com., B.B.A. B.CA., and all Arts & Science, Fine Arts Courses), தொழில் சார்ந்த படிப்பு (B.E, B.Tech., M.B.B.S. B.D.S. B.Sc., (Agri.), B.V.Sc. B.Fsc., B.L, etc.,) மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு (Nursing, Pharmacy, Medical Lab Technology, Physiotherapy etc..) போன்ற படிப்புகளை பயிலும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.