Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 லட்சம் வேலை வாய்ப்பு அளிக்கும் சோனு சூட்!

தனது பிறந்த நாளன்று 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்குகிறார் இந்த ரியல் ஹீரோ.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 லட்சம் வேலை வாய்ப்பு அளிக்கும் சோனு சூட்!

Monday August 03, 2020 , 1 min Read

சோனு சூட் ரியல் லைஃப் ஹீரோ. கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். உடனே அவர்களுக்கு உதவ சோனு சூட் களமிறங்கினார். அவர்கள் ஊர் திரும்ப ஏற்பாடுகள் செய்தார். உணவு, தங்குமிடம் போன்றவற்றையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.


இவை அனைத்தையும் செய்து கொடுத்ததுடன் நின்றுவிடாமல் சோனு சூட் தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

Sonu Sood
அதாவது மூன்று லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்காக இலவச ஆன்லைன் தளம் ஒன்றை அவர் தொடங்கியுள்ளார். Pravasi Rojgar என்கிற இந்த தளம், மக்கள் வேலை வாய்ப்புகளைப் பெற உதவும் வகையில் தகவல்களை வழங்கி வேலை வாய்ப்பு தேடுவோரையும் பணியமர்த்துவோரையும் இணைக்கிறது.

“கடந்த சில மாதங்களாகவே இந்த முயற்சி குறித்து திட்டமிட்டு வந்தேன். வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள இளைஞர்களுக்கு திறன் பயிற்சியளிக்கும் முன்னணி நிறுவனங்கள், என்ஜிஓ-க்கள், அரசு அதிகாரிகள், ஆலோசகர்கள், தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் ஆகியோர்களுடன் விரிவான ஆலோசனைகள் நடந்து வருகிறது,” என்றார் சோனு சூட்.

கட்டுமானம், ஜவுளி, மருத்துவப் பராமரிப்பு, பொறியியல், பிபிஓ, செக்யூரிட்டி, ஆட்டோமொபைல், மின் வணிகம், லாஜிஸ்டிக்ஸ் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த ஆன்லைன் தளத்தில் இணைந்திருந்து வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று இது தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்ல சம்பளம் மட்டுமல்லாது பிஎஃப், ஈஎஸ்ஐ உள்ளிட்ட சலுகைகளுடன் கூடிய வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
1

சோனு சூட் ஏற்கெனவே பஞ்சாபில் 1,500 தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை வாங்கிக் கொடுத்துள்ளார்; மும்பையில் உள்ள தனது உணவகத்தை முன்கள பணியாளர்களான மருத்துவப் பணியாளர்களின் பயன்பாட்டிற்கு ஒதுக்கியுள்ளார்; ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் உணவளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.