Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

'கடந்த நிதியாண்டில் 4.7 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன' - ஆர்பிஐ

நாட்டின் வேலைவாய்ப்புக்கான ஆண்டு வளர்ச்சியானது, முந்தைய நிதியாண்டின் 3.20 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், ஆறு சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த நிதியாண்டில், 4.70 கோடி பேருக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

'கடந்த நிதியாண்டில் 4.7 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன' - ஆர்பிஐ

Thursday July 11, 2024 , 1 min Read

கடந்த நிதியாண்டில், கிட்டத்தட்ட 4.7 கோடி பேருக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளதாக, ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் நாட்டில் இப்போது 27-க்கும் அதிகமான துறைகளில் 64.33 கோடி பேர் பணியாற்றி வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆர்பிஐ-யின் ஆய்வறிக்கையில் இது தொடர்பாகக் கூறப்பட்டுள்ளதாவது,

நாட்டின் வேலைவாய்ப்புக்கான ஆண்டு வளர்ச்சியானது, முந்தைய நிதியாண்டின் 3.20 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், ஆறு சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த நிதியாண்டில், 4.70 கோடி பேருக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
RBI

இதையடுத்து, வேலைவாய்ப்பு பெற்ற மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையானது, குறிப்பிட்ட 27 துறைகளில் 64.33 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டான 2022 - 23-இன் மார்ச் இறுதி நிலவரப்படி, தொழிலாளர்களின் எண்ணிக்கை 59.67 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், மொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை 53.44 கோடியில் இருந்து, 64.33 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டில் வேலை வாய்ப்பு வளர்ச்சி 6 சதவீதமாகும். இதுவே முந்தைய ஆண்டு 3.2 சதவீதமாக இருந்தது. வேளாண்மை, மீன்பிடித்தொழில், வனம் சார்ந்த தொழில்களில் 25.3 பேர் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். கட்டுமானம் வர்த்தகம், போக்குவரத்து உள்ளிட்டத் துறைகள் அதிக வேலைவாய்ப்புகளை அளித்து வருவதாக ஆர்பிஐ அறிக்கை கூறுகின்றது.