கழிப்பறையை சொல்லும் "டாய்லெட் ஃபைன்டர்": பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!
இந்த சம்பவம் சில மாதங்களுக்கு முன் நடந்தது. அப்போது நான் ஒரு நிறை மாத கர்பிணி. நான், புனே நகரில் உள்ள "பீட்சா ஹட்" கடைக்குள் நுழைந்தேன். பீட்சா சாப்பிடுவதற்காக அல்ல, அங்குள்ள ரெஸ்ட் ரூம் அதாவது கழிப்பறையை உபயோகிப்பதற்காக.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, அங்கிருந்த பணியாளர்கள் எப்பொழுது அந்த பக்கம் திரும்புவார்கள், நான் எவ்வாறு அந்த இடத்தை விட்டு வெளியே செல்வது என்று. இல்லையென்றால் நான் தர்ம சங்கடமான கேள்விகளை எதிர்கொள்ள நேரிடுமே என்று வெகுவாக பயந்தேன். இந்த காலத்தில் கழிப்பறை செயலிகள் பல உள்ளது என்பது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
இந்தியாவில், அதிகமான பெண்கள், இது போன்ற பிரச்சனைகளை தினந்தோறும் சந்திக்கிறார்கள், ஆனால் சிலருக்கு மட்டுமே இதை சமாளிக்கும் வழிமுறைகள் பற்றி நன்றாக தெரிந்திருக்கிறது.
கடந்த வாரம், டெல்லியை சேர்ந்த "பீபட்டி" (PeeBuddy) எனும் தொழில்முனைவு நிறுவனம், பெண்களுக்கான சுகாதாரம் மற்றும் அந்தரங்க பாதுகாப்பு பொருட்கள் தொடர்பான, “யூஸ்-ரெப்ஃயூஸ்” (Use-Refuse) எனும் செயிலி யினை கூகிள் ப்ளே யில் வெளியிட்டது.
"பீபட்டி" (PeeBuddy) யின் நிறுவனர் தீப் பஜாஜ் கூறுகையில், " ‘பீபட்டி’ எனும் பேப்பரால் ஆன சிறுநீர் கழிப்பு சாதனத்தை, பெண்கள் கழிப்பறையில் இருக்கும் போது மட்டும் தான் பயன்படுத்தமுடியும். ஆனால் கழிப்பறைகளை எங்கே தேடுவது? இதன் காரணமாகத்தான் நாங்கள் அருகில் உள்ள கழிப்பறைகளை கண்டுபிடிக்க ஒரு செயலியை உருவாக்கி வெளியிட்டோம்”.
கழிப்பறை செயலி என்பது இதர உணவகங்களை கண்டுபிடிக்கும் செயலிகளை போல தான் செயல்படுகிறது. நாம் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு இந்த செயலி நமக்கு கழிப்பறைகளை கண்டுபிடித்து தருகிறது.
சில கழிப்பறை பட்டியலில், கழிப்பறையின் புகைபடம், சிறப்புகள், மதிப்பீடு, மற்றும் வசதிகள் குறித்த விவரங்கள் காண்பிக்கப்படுகிறது. கழிப்பறையில் உபயோகத்திற்கு வைக்கப்பட்டுள்ளா காகிதம் முதல் தண்ணீர் குழாய் குறித்த தகவல்கள் வரை இது தருகிறது. ஆனால், மற்ற செயலிகள் அடிப்படை தகவல்களான இலவச கழிப்பறையா ? அல்லது கட்டண கழிப்பறையா ? போன்றவைகள் மட்டுமே நமக்கு தருகிறது. பொதுவாக எல்லா செயலி களும் ஜிபிஎஸ் லோகேஷன் தொழில்நுட்பம் கொண்டே அருகிலுள்ள கழிப்பறையை பயனாளிக்கு காண்பிக்கின்றன.
கூகிள் ப்ளே ஸ்டோரில் (Google Playstore) இது போன்ற செயலிகள் ஏராளமாக காணலாம். தேடவேண்டிய சிக்கல் இல்லை. இதில், நமது பார்வைக்கு சட்டென்று படுவது, "முத்ராலய" (Mutralaya), "ஃபளஷ்" (Flush), "ஸ்வச் பாரத் டாயலேட் லோகேடர்" (Swach Bharat Toilet Locator), "கோட்டகோ" (GottaGo), "டாயலேட் ஃப்ஸ்ட்" (ToiletFirst) மற்றும் "சுசுவிதா" (Susuvida).
இது போன்று, கழிப்பறைகளை கண்டுபிடித்து காட்டும் செயலிகள் உருவாக்கியவர்களே, "நிர்பயா" (Nirbhaya) எனும் பெண்கள் பாதுகாப்பு செயலியை உருவாக்கியவர்கள். பெண்களுக்கு இது அடிப்படை தேவை என்பதால், நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள பொது கழிப்பறைகளின் தகவல்களை ஒருங்கிணைத்து, இந்த செயலியில் கொண்டுவந்துள்ளனர்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (The New Indian Express) க்கு பேட்டியளித்த ஸ்மார்ட் கிலௌட் இன்ஃபோடெக் (Smart Cloud Infotech) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, திரு.கஜனன் சக்காரே (Gajanan Sakhare) கூறுகையில், "இன்றைய காலகட்டத்தில் வேலைக்காக, பெண்கள் நீண்ட தூரம் பயணித்து பல ஊர்களுக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு இது போன்ற தகவல்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும். நாங்கள் பல இடங்களில் உள்ள பயன்பாட்டிற்குரிய கழிப்பறைகள் குறித்த தகவல்களை சேகரித்து அதை செயலியில் கிடைக்கப்பெற செய்திருக்கிறோம்".
நமது இந்தியாவிற்கு மிகப்பெரிய சவாலாக அமைவது கழிப்பறை பற்றாகுறையே. 2012 ஆம் ஆண்டு என்எஸ்எஸ்ஓ (தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம்) NSSO (National Sample Survey Office) நடத்திய ஆய்வில், 32% கிராமப்புற வீடுகளில் மட்டுமே சொந்தமாக கழிப்பறைகள் உள்ளது. கூடுதலாக 9% மக்கள் வீட்டிற்கு வெளியே உள்ள கழிப்பறையை பயன்படுத்துகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக புதிய கழிப்பறைகள் கட்டுவதற்கு பலர் குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர். நமது பிரதமர் மோடியும், 10 கோடிக்கு மேல் புதிய கழிப்பறைகள் கட்டப்படும் என்று அறிவித்தார். ஆனால் இவற்றை பராமரிப்பதே மிகப்பெரிய சவாலாகும். குறிப்பாக ஏற்கனவே உள்ளவற்றை பராமரிப்பது தான்.
திரு.தீப் கூறுகையில்,"எல்லா கழிப்பறைகளும் சுத்தமாக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதற்காக அதிகமாக செலவிடுவதில்லை என்றாலும், பற்பல காரணங்களால் இவற்றை கூர்ந்து கண்காணிப்பது மிகவும் கடினமே. இந்த செயலியின் வாயிலாக, கழிப்பறைகளில் உள்ள வசதிகள் மற்றும் இதன் பராமரிப்பு அட்டவணைகள் குறித்து அதன் பயனாளிகள் கூற நாம் தெரிந்தும் கொள்ளலாம்".
நகர்ப்புறங்களில் கொஞ்சம் பரவாயில்லை. அங்கே, கஃபே கடைகள், பெட்ரோல் நிலையங்கள், கேஎஃப்சி, மெக் டொனால்ட்ஸ் போன்ற பெரிய உணவகங்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் கழிப்பறைகள் மக்கள் பயன்பாட்டிற்காக உள்ளது. ஆனால், இதை பற்றி நமக்கு கூடுதல் தகவல் கிடைத்தால் மேலும் சிறப்பே ! இறுதியாக ஒரு பெண் விரும்புவது, இது போன்ற கழிப்பறைகளை உபயோகித்த பிறகு எந்த ஒரு பிரச்சனையும் நிகழாமல் அவ்விடத்தை விட்டு வெளியே வருவது தான். ஏனென்றால் இவர் இந்த இடத்தின் வாடிக்கையாளர் அல்ல.
சில செயலிகள் எல்லா கழிப்பறை இடங்களையும், நாம் சுலபமாக தெரிந்துகொள்ள பட்டியலிடுகின்றன. ஆனால் ஒரு சிறந்த செயலி என்பது, பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள கழிப்பறைகளை பட்டியலிடுவது தான்.
உதாரணத்திற்கு, பீபட்டி" (PeeBuddy) குழுவானது தனது தன்னார்வலர்களை கொண்டு மும்பையிலுள்ள உள்ளூர் கழிப்பறை பட்டியலை செயலியில் இணைப்பார்கள் . கூடிய விரைவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களின் உரிமையாளர்களை அணுகி அவர்களின் கழிப்பறை இடங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டு, அந்த பட்டியலையும் இணைத்து இந்த சமமூகத்திற்கு பெரிதும் உதவிகரமாக இருக்க உள்ளனர்.
திரு தீப் மேலும் கூறுகையில், “உண்மையாகவே, இவர்கள் வாடிக்கையாளர்களை கவனத்தில் கொண்டு, தரமான செயல்பாடுகளுடன் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருந்தால், தங்கள் கழிப்பறையை. யூஸ்- ரெப்ஃ யூஸ் (Use-Refuse) போன்ற கழிப்பறை செயலியில் இணைப்பதில் எந்த விதமான தடுமாற்றமும் இருக்காது”.