Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

வெளிநாட்டு பிராண்ட்கள் என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் 5 இந்திய பிராண்ட்கள்!

வெளிநாட்டு பிராண்ட்கள் என நாம் நினைத்திருக்கும், ஆனால் உண்மையில் இந்தியாவில் உருவான ஐந்து புகழ் பெற்ற பிராண்ட்களின் பட்டியல்.

வெளிநாட்டு பிராண்ட்கள் என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் 5 இந்திய பிராண்ட்கள்!

Saturday March 19, 2022 , 5 min Read

பிராண்ட் பெயரில் என்ன இருக்கிறது? ஒரு vaaர்த்தையில் சொல்வது என்றால் நம்பகத்தன்மை.

பிராண்ட பொருள் வாடிக்கையாளர்களுக்கு நம்பக உணர்வை அளிக்கிறது. பொருட்களுக்கு அளிக்கும் விலை தகுதியானது தான் எனும் உறுதியை இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர்.

சர்வதேச பிராண்ட்கள் போல தோன்றும், இந்தியாவில் உருவான பிராண்ட்களின் பட்டியலை வழங்குகிறோம்:

பிராண்ட்

உட்லேண்ட் (Woodland)

இது உங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கலாம்! ஆனால், பெரும்பாலான மில்லினியல்களால் நாடப்படும் பிராண்டான ‘உட்லேண்ட்’ இந்திய வேர்கள் கொண்ட ப்ராண்ட் ஆகும்.

உட்லேண்ட் தாய் நிறுவனமான ’ஏரோ குழுமம்’, 1980ல் கனடாவின் குவெபக்கில் அவதார் சிங்கால் துவக்கப்பட்டது. அபோது ஏரோ குழுமம் கனடா மற்றும் ரஷ்யாவுக்கான குளிர்கால ஷூக்களை தயாரித்தது.

பிராண்ட்

உட்லேண்டின் தற்போதிய நிர்வாக இயக்குனரும், அவ்தார் சிங்கின் மகனுமான ஹர்கிரத் சிங், எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் பேசும் போது,

“என் தந்தை 1970-கள் முதல் ஷூ வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். எங்களிடம் டேனரிகள், ஆலைகள் இருந்தன. சோவியத் சந்தைக்கான ஷுக்களை தயாரித்து வந்தோம். அப்போது எங்களுக்கு என பிராண்ட் இல்லை. 1980 களில் தான் நிறுவனத்தைத் துவக்கி சந்தையில் செழிக்கத்துவங்கினோம்,” என்று கூறினார்.

சோவியத் யூனியன் சிதறும் முன் 1990-கள் வரை ஏரோ குழும வர்த்தகம் உச்சத்தில் இருந்தது.

“எங்கள் பிரதான சந்தையாக ரஷ்யா இருந்ததால், அதன் நிலை எங்களுக்கு மிகுந்த சோதனையாக அமைந்தது. ஐரோப்பா மற்றும் கனடாவில் செயல்பட்டு வந்தாலும், வளரும் சந்தையை தேடி கண்டறியும் நிலையில் இருந்தோம்,” என்கிறார் ஹர்கிரத் சிங்.

1992ல், அவ்தார் சிங் மற்றும் ஹர்கிரத் சந்தை நிலை மேம்பாடு மற்றும் பிரத்யேக விற்பனை மையங்கள், மால்களின் துவக்கத்தை அடுத்து இந்திய சந்தையில் நுழைய தீர்மானித்தனர். ஏரோ குழுமத்தின் கீழ் உட்லேண்ட் பிராண்டை அறிமுகம் செய்து, இந்திய சந்தையில் கைகளால் தைக்கப்பட்ட ஷூக்களை அறிமுகம் செய்தனர். இவை மிகவும் பிரபலமாயின.

நிறுவனம் தில்லியில் கானாட் பிளேஸ் மற்றும் தெற்கு எக்ஸ்டன்ஷனில் இரண்டு பிரத்யேக பிராண்ட் மையங்களை (EBOs) துவக்கியது. இன்று உட்லேண்ட் நாடு முழுவதும் 600 பிரத்யேக விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. மேலும், 5,500க்கும் மேற்பட்ட பல பிராண்ட் மையங்களிலும் இருப்பை கொண்டுள்ளது. 2019 நிதியாண்டில் இதன் விற்றுமுதல் ரூ.1,250 கோடியாக இருந்தது.

ஹைடிசைன் (HiDesign)

பிராண்ட்

படிப்பை முடித்து புதுச்சேரி திரும்பியதும் திலிப், லெதர் பைகளை ஒரு பொழுதுபோக்கு பழக்கமாக விற்கத்துவங்கினார். ஆலையில் இருந்த காலம் அவருக்கு லெதர் பேக் பற்றி எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தது. சென்னையில் இருந்து தோல் தருவித்து ஆரோவில்லில் கைகளால் உருவான பைகளை தயாரிக்கத்துவங்கினார்.

“லெதர் ஆலையில் குறுகிய காலம் இருந்தது இந்தத் துறை மீது வாழ்நாள் ஈர்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் பைகளை, வடிவமைத்து, விற்பனை செய்தது என்னை வர்த்தக மனிதராக ஆக்கவில்லை. என்னால், லாப நஷ்ட அறிக்கையை கூட வாசிக்க முடியவில்லை,” என்று திலிப் கூறினார்.

ஆனால், இது அவரது தொழில்முனைவு ஆர்வத்தை பாதிக்கவில்லை. ரூ.25,000 பணத்தை திரட்டி, ஒரு தையல்காரரை பணிக்கு அமர்த்திகொண்டு ‘ஹைடிசைன்’ எனும் பெயரில் பட்டறையை துவக்கினார்.

“வெகுஜன சந்தையில் ஒரே மாதிரியாக தோற்றம் அளித்த செயற்கை தட்டைத்தன்மை கொண்ட லெதர் பைகளில் இருந்து வேறுபட்டு இருக்கும் நோக்கத்துடன் ஹைடிசைன் பிறந்தது. இயற்கையாக தோன்றாத வர்ணம் பூசிய லெதர் பைகள் மீதான அதிருப்தியே இதற்குக் காரணம் எனலாம்.”

1984ல் ஹைடிசைன் யுகேவில் ஜான் லூயிஸ் கடை மூலம் முதலில் நுழைந்தது. இந்த நடவடிக்கை, மாற்று பிராண்ட் என்பதில் இருந்து வெகுஜன பிராண்ட் அந்தஸ்தை கொடுத்தது.

1988ல் ஹைடிசைன், லெதர் ஜாக்கெட் மற்றும் பேண்ட்களில் விரிவாக்கம் செய்தது. திலிப் லெதர் பைகளுக்கு யுகே சந்தை போதுமானதாக இருந்தது. லண்டனில் 700 விற்பனை நிலையங்களில் ஹைடிசைன் பைகள் விற்பனை செய்யப்பட்டன.

“1990ல் புதுச்சேரியில் ஆலை அமைத்தாலும், இந்திய சந்தையில் நுழைய தயாராகவில்லை. அதன் பிறகு இந்தியாவில் ஹைடிசைன் விற்பனை நிலையங்களை துவக்க 9 ஆண்டுகள் ஆனது,” என்கிறார்.

தொடர்ந்து புதுச்சேரியில் ஒரு உற்பத்தி ஆலை மற்றும் சிக்கிம்மில் ஒரு ஆலை அமைத்தார். சென்னையில் தோல் பதப்படுத்தும் ஆலையும் அமைத்தார்.

திலிப்பின் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.170 கோடி வருவாய் ஈட்டுகிறது மற்றும் 1,400 ஊழியர்களைக் கொண்டுள்ளது. லெதர் பொருட்கள் தயாரிப்பாளர் என்பதில் இருந்து விமான நிலைய கடைகள், பல பிராண்ட் மையங்கள், இ-காமர்ஸ் மேடைகள் ஆகியவற்றில் இருப்பை கொண்ட வாழ்வியல் பிராண்டாக உருவாகியிருக்கிறது. 102 பிரத்யேக விற்பனை நிலையங்கள் மற்றும் 112 பெரிய பல பிராண்ட் மையங்களில் இருப்பை கொண்டுள்ளதாக நிறுவனம் தெரிவிக்கிறது.

ஹைடிசைன்; பெண்கள் பைகள், ஆண்கள் பைகள், பெல்ட், பர்ஸ், குளிர் கண்ணாடி, ஜாக்கெட் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பைகள் அதிகம் விற்பனையாகின்றன.

மோடி எண்டர்பிரைசஸ் (Colorbar)

இந்தியாவின் முன்னணி அழகுக் கலை பிராண்டான ‘கலர்பார்’ (Colorbar), தில்லியைச்சேர்ந்த மூன்று தலைமுறை குடும்பத்தொழில் நிறுவனமான மோடி எண்டர்பிரைசஸ் கீழ் வருகிறது.

கலர்பாரின் கொள்கை, பாலின நடுநிலை கொண்டிருப்பதோடு, இதனுடன் இணைந்த பன்முகத்தன்மையை கொண்டாடுவதாகும். சித்தரவதையில் இருந்து விடுபட்ட பொருட்களை இந்த பிராண்ட் அளிக்கிறது.

“மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த எண்ணமே குறுகிய காலத்தில் இந்தியாவின் மூன்றாவது பெரிய அழகு கலை பிராண்டாக உயர்த்தியுள்ளது,” என்கிறார் மோடி எண்டர்பிரைசஸ் நிர்வாக இயக்குனர் சமீர் மோடி.

மோடி எண்டர்பிரைசஸ், 1932ம் ஆண்டு சமீர் மோடியின் தாத்தா குஜர்மால் மோடியால் துவக்கப்பட்டது, அப்போது வனஸ்பதி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது. எனினும் அரசு உள்ளூர் சர்க்கரை உற்பத்தியை ஊக்குவிக்க இறக்குமதி வரியை அதிகரித்தது. இதன் காரணமாக வனஸ்பதி தயாரிப்புக்கு பதிலாக சர்க்கரை ஆலை அமைத்தனர்.

பிராண்ட்

இரண்டு உலக போர் சவால்களை எதிர்கொண்டதோடு, 1933 முதல் 1972 வரை 27 நிறுவனங்களை அவர் உருவாக்கினார். மேலும் அறக்கட்டளைகள், கல்லூரிகள், பள்ளிகளை அமைத்தார்.

மோடி எண்டர்பிரைசஸ் அங்கமாக அமையும் கலர்பார் பிராண்ட், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கொரியா, அமெரிக்காவில் தயாரித்து பேக் செய்யப்பட்டு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய நாடுகளின் தர நிர்ணயத்தை பூர்த்தி செய்கிறது.

ஆடம்பர பேஷனில் ஆர்வம் கொண்ட பிரிமியம் பிரிவை இந்த பிராண்ட் இலக்காகக் கொண்டுள்ளது. முக்கிய இடங்களில் 100க்கும் மேலான பிரத்யேக விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது.

1,200க்கும் மேற்பட்ட அழகு கலை விற்பனை நிலையங்கள், கடைகள், காஸ்மட்டிக் கடைகளிலும், இதன் பொருட்கள் கிடைக்கின்றன. மேலும், அமேசான், நைகா, மிந்த்ரா உள்ளிட்ட இ-காமர்ஸ் தளங்களிலும் கிடைக்கிறது.

மாண்டே கார்லோ (Monte Carlo)

வட இந்தியா அல்லது வட கிழக்கு இந்தியாவில் வசிப்பவர்கள் நிச்சயம் 'மாண்டே கார்லோ'ம் ஜேக்கெட் அல்லது ஸ்வெட்டரை வைத்திருப்பார்கள். இல்லை என்றாலும் விற்பனை நிலையங்களில் இந்த தயாரிப்புகளை பார்த்திருக்கலாம். இதன் குளிர்கால தயாரிப்புகள், பஞ்சாப், உத்தரபிரதேசம், பிகார், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனையாகின்றன.

ஆனால், இந்தியாவின் முதல் நிறுவனமயமான பேஷன் ஆடை பிராண்ட் இது என்பது தெரியுமா?

இதன் பாரம்பரியம் சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் இருந்து துவங்குகிறது. பஞ்சாப்பின் லூதியானாவில் இருந்து இதன் வரலாறு துவங்குகிறது. 1949ல் லூதியாவில் அமைக்கப்பட்ட ஆஸ்வல் வுடன் மிலிசில் இருந்து மாண்டே கார்லோ வரலாறு ஆரம்பமாகிறது. கம்பளி தொழிலில் இருந்தவர்களை ஒருங்கிணைத்து பயன்பெறும் வகையில் இந்த ஆலை செயல்பட்டது. காலப்போக்கில் இந்தியாவின் மிகப்பெரிய கம்பளி இழை ஆலையாக உருவாவது.

பிராண்ட்

1984ல் மாண்டே கார்லோ பிராண்டாக அறிமுகமானது. இந்தியாவின் முதல் நிறுவனமயமான பேஷன் ஆடைகள் பிராண்டாக அமைகிறது.

“கம்பளி இழைகள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தோம் மற்றும் பல்வேறு தொழில்களுக்கான பொருட்களை உற்பத்தி செய்து வந்தோம். அப்போது தான், இந்தத் தொழிலை ஒருங்கிணக்கும் தேவை மற்றும் அவசியத்தை உணர்ந்து இந்தியாவின் முதல் நிறுவனமயமான பேஷன் பிராண்டை உருவாக்கினோம்,” என்கிறார் நிறுவன செயல் இயக்குனர் ரிஷப் ஆஸ்வால்.

மாண்டே கார்லோ துவங்கப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உள்ளது போல் அனைத்து பருவங்களுக்குமான பிராண்டாக உருவாகியுள்ளது.

“இந்தியாவில் பிராண்டட் கார்மெண்ட் பிரிவில் இதன் அறிமுகம் முக்கியமாக அமைந்தது. அதன் பிறகு வேகமாக வளரும் ஆடை மற்றும் பேஷன் துறைக்கு ஈடு கொடுத்து வருகிறோம்,” என்கிறார் ரிஷப்.

பாலிவுட் சூப்பர் ஹிட் படங்கள் பர்பி, மேரி கோம், பாக் மில்கா பாக், ஸ்டூடன் ஆப் தி இயர் போன்றவற்றில் இந்த பிராண்ட் ஆடை பங்குதாரராக விளங்கியது.

டா மிலானோ

தில்லி என்.ஐ.எப்.டி- ல் பட்டம் பெற்ற பிறகு சாஹில் மாலிக் லண்டனில் மார்க்கெட்டிங் படிக்க விரும்பினார். இந்தியாவில் அப்போது அந்நியமாக இருந்த பிரிமியம் கைப்பைகள் பிரிவில் அவருக்கு ஆர்வம் இருந்தது.

“இந்தியாவில் பெண்களுக்கான பிரிமியம் கைப்பைகள் பிராண்ட்கள் எதுவும் இருக்கவில்லை, வாடிக்கையாளர்கள் தங்கள் ஆடம்பர கைப்பை தேவைக்கு சர்வதேச பிராண்ட்களையே நாட வேண்டியிருக்கிறது,” என்கிறார் சாஹில்.
பிராண்ட்

இந்த மூன்றாம் தலைமுறை தொழில்முனைவோர் பேஷன் மற்றும் துணை பொருட்களில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். எனவே அவர் இந்தியாவில் ‘டா மிலானோ’ பிராண்டை 2000 மாவது ஆண்டில் அறிமுகம் செய்தார்.

இன்று டா மிலானோ 15 விமான நிலைய விற்பனையங்கள் உள்ளிட்ட 75 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. 2019 நிதியாண்டில் ரூ.143 கோடி விற்றுமுதல் ஈட்டியது. 2013ல் இந்த பிராண்ட சர்வதேச சந்தையில் நுழைந்தது. கத்தார், காட்மாண்டு, துபாய் உள்ளிட்ட இடங்களில் இருப்பை கொண்டுள்ளது. கடந்த ஆண்டு துபாய் மாலில் விற்பனையகம் அமைத்தது.

ஆங்கிலத்தில்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்