மின்னணு கழிவுகள் கொட்டிக் கிடக்கும் இந்தியா...
உலக மின்னணு கழிவுகள் அதிகம் சேரும் நாடுகளின் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளது இந்தியா!
சொர்க்கமாக இருந்த பூமி கொஞ்சம் கொஞ்சமாக நரகமாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் வேறு யாரும் அல்ல மனிதர்களாகிய நாம் தான்.
ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுச்சூழல் தினத்தன்று மட்டும் சுற்றுச்சூழலை எப்படி பாதுகாப்பது, மரங்கள் நடுவது பற்றி பேசினால் போதாது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா அதனால் என்ன என்ற மெத்தனத்தை முதலில் நாம் கைவிட வேண்டும்.
காற்றின் தீண்டலை மட்டும் தனியாக உணர முடியுமா? நிச்சயமாக முடியாது. காற்றோடு சேர்ந்து மண், பிளாஸ்டிக் கவர்கள், கிழிந்த காகிதங்கள் என அனைத்தும் நமது தேகத்தை தீண்டி, ’ஹாய்’ சொல்லிவிட்டு செல்லும் அளவுக்குக்காற்று மாசு அதிகம். கண்ணுக்குத் தெரியாத பல நுண் துகள்கள், நாசி வழியாக சுவாசப்பாதைக்குள் சென்றுகொண்டேதான் இருக்கின்றன. நம்மைச் சுற்றி வளையம் அமைத்திருக்கும் மாசுகளோடுதான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
கண்ட இடத்தில் குப்பையை வீச மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். அருகில் குப்பைத் தொட்டி இல்லாவிட்டால் பேப்பர்களை உங்கள் கைப்பையில் சிறிது நேரம் வைத்திருப்பதில் தவறு இல்லை.
சாலைகளில் நடப்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், பேருந்தின் ஜன்னலோர இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள்... அனைவரும் புழுதிக் குளியல் மேற்கொள்வது, இன்றைய புழுதி யுகத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வு
நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகள் பூமியில் மக்காமல் கிடக்கும் தன்மை உடையன. அதனால் இனி பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்போம்.
வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைதான் நம் உடலுக்கு மிகப்பெரிய எதிரி. நம் ஒவ்வொருவரும் முயன்றால் மட்டுமே இதனைக் கட்டுப்படுத்த முடியும். கார், பைக்குகளை அதிக அளவில் பயன்படுத்தி காற்றை மாசுபடுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்போம். அருகில் உள்ள இடங்களுக்கு கால்நடையாகவோ அல்லது சைக்கிளிலோ செல்வது நம் உடல் நலத்திற்கும், பூமிக்கும் நல்லது. தண்ணீரை வீணாக்குவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மின்னணு கழிவுகள் அதிகம் சேரும் மாநிலங்களில் நாட்டில் இரண்டாவது இடத்தைப் தமிழ்நாடு பிடித்திருப்பது, ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகெங்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில், செல்போன், சார்ஜர், கம்ப்யூட்டர் போன்ற மின்னணு கழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், அசோசெம் தொழில் வர்த்தக சபை மற்றும் ஜப்பானை சேர்ந்த என்.இ.சி. ஆகிய நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
19.8% பெற்று மகராஷ்டிரா முதலிடத்திலும், 13 % மின்னணு கழிவுகளுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. மின்னணு கழிவுகள் அதிகம் சேரும் மாநிலங்களில் 10 சதவீதத்துடன் உத்திரப்பிரதேசம் 3ம் இடத்தை பிடித்துள்ளது.
மரங்கள் மரங்களை வெட்டிவிட்டு நிழல் தேடி அலையும் நாம் இனியாவது மரங்கள் நடுவோம். மரங்களை வெட்டுவதை முடிந்த அளவில் குறைத்துக் கொள்வோம். மரங்களின் எண்ணிக்கை குறைய குறைய மழையின் அளவும் குறையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
விலங்குகள், பறவைகள் அனைத்து விலங்குகள் மற்றும் பறவைகளை அழிக்காமல் அவைகளின் மதிப்பை உணர்ந்து நடந்து கொள்வோம் என்று உலக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உறுதிமொழி எடுப்போம்.