குடியரசு மாளிகை வரை தன் முயற்சியை எடுத்து சென்ற 23 வயது இளைஞனின் பயணம்!
வருண் சிவராம். வயது 23, தன் இதயத்தில் மின்னணுவியலுக்கு (Electronics) என்றென்றும் தனி இடத்தை கொண்டிருப்பவர். பெங்களூரு, எஸ்பி சாலையில் நடந்து செல்லும் பொழுது கடைகளில் முன் வைக்கப்படிருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களால் ஈர்க்கப்பட்டார். அதன் மீது அளவிலா மோகம் ஏற்பட்டது அவருக்கு.
அவர் புத்தகங்களோடு நிறுத்திக்கொள்ளவில்லை, தனக்கு பிடித்த வழியிலேயே தான் எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நம்பினார். கற்றுக்கொள்ளுதல் என்பது சோதனை அடிப்படையிலும், உருவாக்குதலிலும், உருவாக்கும் பொழுது சிலவற்றை உடைப்பதிலும் தான் இருக்கிறது என்பதை நம்பினார்.
சக பள்ளி தோழர்கள் போல் அல்லாமல், வருண், பள்ளி கல்வி முடிந்த பிறகு கல்லூரியில் சேரவில்லை. அதற்கு மாறாக அவர் கலந்து கொண்ட தொழில்முனைவோர் கருத்தரங்கில் ஈர்க்கப்பட்டு, மின்னணு சோதனை கருவி கொண்டு தொழில் தொடங்க முடிவெடுத்தார். ஆனால் சரியான விற்பனையில்லாத காரணத்தால் இம்முயற்சி தோல்வியை சந்தித்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், பெங்களுரு, ஜாகா (Jaaga) வில் நடைபெற்ற 3டி பிரிண்டிங் நிகழ்ச்சி (3D printing event) ஒன்றில் கிருஷ்ணாவை சந்தித்தார் வருண். அந்த சமயத்தில் தான் கிருஷ்ணா தனது தொழிலில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டு கொண்டிருந்த நேரம். இந்த சந்திப்பானது "க்ரியேடர்பாட்" ( CreatorBot) எனும் பின்னர் ஏற்பட்ட கூட்டணி முயற்சிக்கு இலக்கு பாதையாக அமைந்தது.
"க்ரியேடர்பாட்" என்பது குறைந்த விலையில் தனி வடிவமைப்பாளர்கள் ஊக்கமளிக்கும் விதத்திலும், தொழில் முனைவோருக்கும், 3டி பிரிண்டர்கள் மற்றும் கருவிகளை தயாரிக்கும் நிறுவனமாக திகழ்கிறது.
இந்நிறுவனம், புதிதாக கண்டுபிடிப்பவர்களுக்கான வன்பொருள் அங்காடியை அமைத்துக்கொண்டிருக்கிறது. அதில் குறைந்த விலையில் அதிக தரம் வாய்ந்த சிறிய அளவிலான 3டி பிரிண்டர்கள் மற்றும் சி என் சி இயந்திரங்கள் (CNC Machines) போன்ற டெஸ்க்டாப் புனைதளுக்கான (Desktop Fabrication) அளவில் டிஜிட்டல் தயாரிப்பு கருவிகளை விற்பனை செய்யவுள்ளது.
ஆனால் அவர்களின் கதை இத்துடன் முடியவில்லை. சமீபத்தில் அகமதாபாத் நகரில் நடைபெற்ற "மேகர்பெஃஸ்ட்" (Makerfest) நிகழ்ச்சியில், இன்டெல் அதிகாரிகள், இவர்கள் பணியின் மீது ஆர்வம் கொண்டு ஒரு அடாப்டெட் 3D பிரிண்டரை (adapted 3D printer) உருவாக்கி தரும்படி கேட்டனர். இந்த பிரிண்டரை, அண்மையில் ராஷ்டிரபதி பவனில், நமது ஜனாதிபதியால் தொடங்கப்பெற்று, புது அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு அருங்காட்சியகமான "நவச்சர கக்ஷ்" (Navachara Kaksh) இல் வைக்கப்பட்டிருக்கிறது. இதை சிறுவர்கள், அசோக சக்ரம் மற்றும் இந்திய கொடி போன்ற 3D மாதிரிகளை அச்சிட உபயோகிக்கின்றனர். இது அவர்கள் தொழில்நுட்பத்தை பற்றி அறிந்துகொள்ள முதற்படியாக அமைகிறது.
கடினத் தன்மை
இந்நிறுவனத்தை, ஜனவரி 2015 ஆம் ஆண்டு ஆரம்பித்த போது, அது அவ்வளவு சுலபமாக இல்லை. இணை நிறுவனர், கிருஷ்ணா கூறுவது படி, சரியான தயாரிப்பாளர்களை பெறுவதும், சரியான பணியாளர்களை பெறுவதும் இருவருக்கும் பெரும் சவாலாக இருந்தது.
தங்களின் முதல் பிரிண்டரை உருவாகியது ஒரு வெறுப்பான அனுபவம் என்று கூறும் கிருஷ்ணா, சரியான உதிரி பாகங்கள் விற்பனை செய்பவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்காக காத்திருந்த அனுபவம் இவ்விருவரையும் எப்படி பொறுமை இழக்கச் செய்தது என்பதை கூறுகிறார். சரியான பொருளை செய்து முடிப்பதற்குள் இருவரும் சுமார் 5 முறை தோல்வி அடைந்ததாக கூறுகிறார்.
எனினும், எண்ணக்கருத்தின் உள்ளாற்றலே அவர்களின் பயணத்தை கொண்டு சென்றது. அவர்களின் சுவாரஸ்யமான தொலைநோக்கு கண்ணோட்டம் பற்றி நம்மிடம் கூறுகையில்,
மக்களுக்கு சக்திவாய்ந்த வழிமுறைகள் கிடைக்கப் பெறும் போது, அவர்களின் எண்ணக்கருத்துகள் உருப்பெற்று பொருட்களாக மாறுகின்றன. தனி கணினி புரட்சியும் அதை தான் செய்தது. யார் வேண்டுமென்றாலும் தங்கள் அறிவையும் வழிமுறைகளையும் பயன் படுத்தி மென்பொருள் உருவாக்கலாம். அதற்கான அறிவும் வழிமுறைகளும் சுலபமானது. கணினியையும் கடன் அட்டையை பயன்படுத்த வாய்ப்புள்ளோர் எவராக இருந்தாலும் மென்பொருள் தொழில் தொடங்கலாம். தொழில் உற்பத்தி, சிறு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடையேயும் நாம் இது போன்ற புரட்சிகளை காண்கிறோம். தற்போது, இவர்கள், "க்ரியேடர்பாட்" துணைகொண்டு அவர்களின் எண்ணக்கருத்துக்களை நிஜப்பொருட்களாக மாற்றி, இந்த உலகிற்கு ஒரு முன்மாதிரி நகலாக வெளியிட உதவுகிறது.
எண்ணங்களையும் யோசனைகளையும் உயிரூட்டும் நோக்கத்தோடு செயல்படுவதால், அவர்கள் படைத்த பொருட்களை வெறும் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு கல்லூரிகள் மட்டுமல்லாது படைப்பாற்றல் திறனை வளர்த்துவிடும் பள்ளிகளிலும் பார்வையாளர்களை கவரும். தற்போது, அவர்களின் பொருட்கள் "நீங்களே செய்யுங்கள்"(Do-it-yourself) சமூகத்தில் பிரபலமடைந்து வருகிறது.
நிறைவேற்றல்
ஐந்து பேர் கொண்ட குழுவாக செயல்பட்டுகொண்டிருக்கும் இந்த நிறுவனம் கடந்த ஆறு மாதங்களில் (ஜனவரி முதல்) சுமார் 29 பிரிண்டர்களை விற்றுள்ளது. கூடிய விரைவில், தயாரிப்புகளின் வரிசையில், சிஎன்சி ரூடர்களை (CNC routers) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 100 பிரிண்டர்கள் மற்றும் 50 சிஎன்சி ரூடர்களை விற்பனை செய்வதை இலக்காக கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் 10 சதவீதம் ஈடேறி வளர்ந்து வரும் இந்த நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள், "ஃபேப் லேப்ஸ்" (FabLabs), கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Cochin University of Science and Technology), ஐசிஐசிஐ அறிவுசார் பூங்கா (ICICI Knowledge Park) மற்றும் ஜனாதிபதி மாளிகை (Rashtrapati Bhavan)
எதிர்கால பார்வை
தொழில் துறை மற்றும் தொழில் சார் சந்தையை கருத்தில் கொண்டு வரும் மாதங்களில் "க்ரியெடர்பாட்" மற்றொரு ப்ரிண்டரை வெளியிட திட்டமிட்டுள்ளது. நிதி பெறுதல் என்பதை பார்க்கும் பொழுது, இந்த நிறுவனத்தின் பொறியாளர்கள் குழுவை விரிவுபடுத்தவும், தயாரிப்பு பொருட்களுக்கு சிறந்த தொழில் நுட்பத்தினை வழங்கி மேன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
நிறுவனர்கள் கூறியது போல, வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் புது தாக்கம் ஏற்படுத்தும் வகையில் தொழிற் புரட்சி அமைந்துள்ளது. இந்தியாவின் 3D அச்சு சந்தையானது 46 மில்லியன் அமெரிக்க டாலர்களை 2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் அடைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக செயல்பட்டு வரும் சர்வதேச நிறுவனங்களான ஃபேப்ஸ்டெர் (Fabbster), 3டி சிஸ்டம்ஸ் (3D Systems), லீப் ஃப்ராக் (Leapfrog) மற்றும் ஃப்லாஷ் ஃபோர்ஜ் (Flashforge) தங்களின் செயல்பாட்டினை முன்னதாகவே உள்ளூர் நிறுவனங்களான ஆல்டெம் டெக்னாலஜீஸ் (Altem Technologies), இமேஜிநேரியம் (Imaginarium), பிரம்மா 3 (Brahma 3), கேசி போட்ஸ் (KCbots) மற்றும் ஜே குரூப் ரோபோடிக்ஸ் (JGroup Robotics) போன்றவற்றுடன் இணைந்து இந்திய சந்தையில் ஏற்கனவே செயல்பட தொடங்கி இந்த சுழலுக்கு மேலும் பன்முகத்தன்மையை சேர்த்து வருகிறது.
இணையதள முகவரி : CreatorBot
யூடியூப் நிகழ்படம் : Video