Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

ஒரு நாளைக்கு 7 மணி நேரம் நடை; 13.6 எடை கொண்ட உடை - 1 மணி நேர வேலைக்கு ரூ.4,028 சம்பள வேலையை அறிவித்த டெஸ்லா!

ஒரு நாளைக்கு 7 மணி நேரம் நடக்கும் அளவிற்கு உடல் தகுதி உள்ள நபர்களுக்கு, மாதம் ரூ. 8 லட்சத்தில் புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்து இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது டெஸ்லா நிறுவனம்.

ஒரு நாளைக்கு 7 மணி நேரம் நடை; 13.6 எடை கொண்ட உடை - 1 மணி நேர வேலைக்கு ரூ.4,028 சம்பள வேலையை அறிவித்த டெஸ்லா!

Tuesday August 27, 2024 , 2 min Read

எலான் மஸ்க்கையும், டெஸ்லா நிறுவனத்தையும் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அவ்வப்போது ஏதாவது அதிரடி அறிவிப்புகள் அல்லது சர்ச்சைக் கருத்துக்கள் என ஊடகங்களில் தனது பெயரையும், தனது நிறுவனத்தின் பெயரை ஆக்டிவ்வாக வைத்திருப்பார் எலான் மஸ்க்.

அந்தவகையில், தற்போது Data Collection Operator என்ற புதிய வேலைக்கான ஆள் தேடும் அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது டெஸ்லா. இந்த வேலையானது, டெஸ்லாவின் இன்ஜீனியர்களுடனும், ரோபோக்களுடனும் கலந்து டேட்டாக்களைச் சேகரித்து, எக்யூப்மென்ட் அதிகாரிகளுக்கு ஃபீட்பேக் அனுப்புவது ஆகும்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான தகுதிகளாக டெஸ்லா குறிப்பிட்டுள்ள விசயங்கள், ஆச்சர்யத்தையும், வியப்பையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

tesla

டெஸ்லா பாட்

கடந்த 2021ம் ஆண்டு 'டெஸ்லா பாட்' என்ற humanoid Optimus robots வகை ரோபோக்களை உருவாக்கத் தொடங்கியது டெஸ்லா நிறுவனம். தற்போது அதன் மூன்றாவது தலைமுறை ரோபோக்களை தயாரிக்கும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த வகை ரோபோக்களுக்கான தரவுகளைச் சேகரிக்கும் வேலைக்குத்தான் தற்போது ஆட்களைத் தேடி வருகிறது டெஸ்லா.

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், ரோபோக்களின் இயக்கங்களைப் பிரதிபலிக்கும் வகையில், டெஸ்லாவில் மோஷன் கேப்சர் சூட் (Motion Capture Suit) மற்றும் VR (Virtual Reality) கண்ணாடியும் அணிய வேண்டும். இது சிலருக்கு செட் ஆகாது என்பதாலும், இதனால் VR Sickness எனும் நோய்க்கான அறிகுறிகளும் வருவதாலும், வேலைக்கு ஆள் எடுப்பதற்கு முன்பே இதனைத் தெளிவாக சொல்லி இருக்கிறது டெஸ்லா.

ரோபோக்களின் உயரத்துக்கு ஏற்ப வேலைக்குத் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்பதால், 5’7’’ மற்றும் 5’11’’ அடி உயரத்தில் இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை என்றும் குறிப்பிட்டுள்ளது. அதோடு, 13.6 கிலோவுக்கும் அதிகமான எடையைத் தூக்கும் வகையில் உடல் வலிமையையும் பெற்றிருக்க வேண்டுமாம்.

tesla

7 மணி நேர நடை

இவையெல்லாவற்றையும் விட, டெஸ்லா எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ள இந்தத் தகுதிதான், தற்போது இந்தச் செய்தியை இணையத்தில் பேசுபொருளாக்கி இருக்கிறது. அதாவது, இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் தினமும் ஏழு மணி நேரம் நடக்கும் அளவிற்கு உடல்தகுதி கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் அது. அதாவது,

தரவு சேகரிக்க தினசரி ஒரு குறிப்பிட்ட பாதையில் நடக்க வேண்டும். மேலும், ரெக்கார்டிங் சாதனங்களை நிர்வகிப்பது, சிறிய தொழில்நுட்ப சிக்கல்களைச் சமாளிக்கும் திறன், பெற்ற தரவுகளைப் பகுப்பாய்வு செய்து பதிவேற்றம் செய்தல் மற்றும் இந்த பணியில் ஏற்படும் சிக்கல்கள் பற்றிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் பணிகளைச் செய்ய வேண்டும்.
tesla

அதோடு, உபகரணங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மேற்பார்வையாளருக்குத் தெரிவிப்பதும் இந்த பணியாளருக்கான வேலைதான்.

அடேங்கப்பா சம்பளம்!

இவ்வளவு தகுதிகளைச் சொல்லி கிறுகிறுக்க வைத்துள்ள டெஸ்லா, அதற்காக அறிவித்துள்ள சம்பளத்தைக் கேட்டால் மயக்கமே வந்து விடும். ஆம், இந்த வேலைக்கு ஒரு மணி நேரத்திற்கு 2,120 ரூபாய் முதல் 4,028 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, தேர்ந்தெடுக்கப்படும் நபரின் அனுபவம் மற்றும் திறனின் அடிப்படையில் அவர்களது சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

elon
இந்த வேலையில், காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை; மாலை 4 முதல் இரவு 12.30 மணி வரை; நள்ளிரவு 12 மணி முதல் காலை 8.30 மணி வரை என மொத்தம் 3 ஷிஃப்ட்கள் உண்டு. எனவே, ஒரு ஷிஃப்டிற்கு 8.30 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். அதன்படி பார்த்தால், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.28,000 வருகிறது. இதை மாதச் சம்பளமாகக் கணக்கிட்டால், சுமார் 8 லட்சம் ரூபாய் கிடைக்கிறது.

இந்த Data Collection Operator வேலைக்கான விண்ணப்பங்கள் டெஸ்லாவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் உள்ளது. பணியிடம் கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோ என்பது குறிப்பிடத்தக்கது.