’வாவ்’ வாசல்

89 வயதில் பிஹெச்டி செய்யும் சுதந்திரப் போராட்ட வீரர்!

முன்னாள் சுதந்திர போராட்ட வீரர், சமூக ஆர்வலர், ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் தற்போது கன்னட இலக்கியத்தில் பிஹெச்டி படித்து வருகிறார்.

YS TEAM TAMIL
15th Aug 2019
18+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே. சாதனை படைக்க வயது ஒரு தடையல்ல என நிரூபித்துள்ளார் 89 வயது சரணபசவராஜ் பிசாரஹல்லி. இவர் முன்னாள் சுதந்திர போராட்ட வீரர், சமூக ஆர்வலர். ஓய்வுபெற்ற ஆசிரியர். தற்போது கன்னட இலக்கியத்தில் பிஹெச்டி படித்து வருகிறார்.


பதினைந்து புத்தகங்கள் எழுதியுள்ள இவர் கன்னட இலக்கியத்தில் ஆய்வுப்படிப்பை மேற்கொள்ள விரும்புகிறார். இவர் சட்டம் படித்துள்ளார். அத்துடன் தார்வாட் கர்நாடக பல்கலைக்கழகம் மற்றும் கர்நாடகாவின் ஹம்பி கன்னட பல்கலைக்கழகத்தில் இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

1

1929-ம் ஆண்டு பிறந்த இவர் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். இவருக்கு கல்வி மீதான ஆர்வம் சற்றும் குறையவில்லை. அவர் கூறும்போது,

”ஒரு மாணவராக தொடர்ந்து அறிவாற்றலைப் பெறவேண்டும் என்பதே என்னுடைய வாழ்க்கையின் முழுமையான நோக்கம். எந்த வயதிலும் கற்பதை நிறுத்தக்கூடாது,” என்றார்.

சரணபசவராஜ் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளை பராமரித்துள்ளார். தற்போது மூன்று பேரும் சிறந்த நிலையில் உள்ளனர். இவர்களில் ஒருவர் பொதுப்பணித் துறையில் கண்காணிப்பாளராக உள்ளார். மற்றொருவர் கர்நாடக காவல் துறையில் உதவி துணை ஆய்வாளராக உள்ளார். மூன்றாவது நபர் தொலை தொடர்புத் துறையில் பணிபுரிகிறார்.

2

சரணபசவராஜ் நீதிமன்றத்தில் பயிற்சி மேற்கொள்ளாதபோதும் 1991-ம் ஆண்டு சட்டம் படிக்கத் தீர்மானித்தார். ’தி நியூஸ் மினிட்’ உடனான உரையாடலில் அவர் கூறும்போது,

”இளம் வயதிலேயே இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியதால் நம் நாட்டில் இயற்றப்பட்டுள்ள சட்டங்கள் குறித்து முறையாக தெரிந்துகொள்ள சட்டப்படிப்பு உதவியது,” என்றார்.

55 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண் எடுத்ததால் அவரால் பிஹெச்டி படிக்க முடியவில்லை. தேவையான மதிப்பெண்களை எடுப்பதற்காக மீண்டும் கர்நாடகாவின் ஹம்பியில் உள்ள கன்னடப் பல்கலைக்கழகத்தில் கன்னடப் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் படித்தார். இதில் 66 சதவீதம் எடுத்தார்.


தனிப்பட்ட காரணங்களால் அவரால் இளம் வயதில் படிக்கமுடியாமல் போனது. பிஹெச்டி படிக்க முழுமையான அர்ப்பணிப்பும் நேரமும் அவசியம். அவர் எழுதியுள்ள பிஹெச்டி தேர்வு குறித்து கேட்டபோது,

“கடந்த ஆண்டும் நான் தேர்வெழுதினேன். ஆனால் வெற்றி பெறவில்லை. இந்த முறை நன்றாக எழுதியுள்ளேன். தேர்ச்சி பெறுவேன் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்றார்.

கட்டுரை: THINK CHANGE INDIA18+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags