Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

அறிந்திடாத அரிய இடங்களுக்கு பயணம்: அற்புத அனுபவத்துக்கு அழைக்கும் 'பியாண்டர்'

அறிந்திடாத அரிய இடங்களுக்கு பயணம்: அற்புத அனுபவத்துக்கு அழைக்கும் 'பியாண்டர்'

Friday February 26, 2016 , 6 min Read

பிரபலமான ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்த ஒருவர் அந்த பதவியை உதறிவிட்டு தனது மனது நாடிய பாதையில் பயணித்து அதன் மூலம் தொழில்முனைந்ததன் விளைவே “பியாண்டர்”.

முதன் முதலில் ஆனந்த் பரமேஸ்வரனை நான் நேர்முகத்தேர்வுக்கு சென்றிருந்த நிறுவனத்தின் கழிவறையில் சந்தித்தேன். நேர்காணளுக்காக 2 மணிநேர காத்திருப்பில் போரடித்துப் போய் சிறுநடை போட்டு அங்கிருந்த கழிவறைக்குச் சென்றேன். அங்கு வேலைமுடிந்த பின்பு கைகளை உலர்த்த காகிதம் தேடி அருகில் இருந்த மனிதரை வினவினேன். அது இருக்கும் இடம் காட்டிவிட்டு தன்வழியே சென்றார். 15 நிமிட காத்திருப்புக்குப் பின்னர் நேர்முகத்தேர்வு அறைக்கு அழைக்கப்பட்டேன். கழிவறையில் சந்தித்த நபர் அங்கு கைகளை கட்டியபடி ஒரு சிறுனகையுடன், அமர்ந்திருந்தார். எனக்கு ஆரம்பமே அமர்களமாக ஆரம்பித்தது புரிந்தது. ஆனால் அன்று சந்தித்த அந்த மனிதரைப் பற்றி பின்னாளில் நானே ஒரு கட்டுரை எழுதுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.

அன்றும், ஐந்து வருடங்கள் கழிந்தும் மாறாத ஒன்று ஆனந்தின் நகைச்சுவையுணர்வு. 20 வருடங்களுக்கும் மேலாக பணி அனுபவம் உள்ள ஒருவர், தனது நாற்பதுகளில், தொழில்முனைய தனது வேலையை ராஜினாமா செய்தார் என நீங்கள் அறியும் பொழுது மனதில் ஆச்சர்யம் தோன்றலாம். எனக்கு சற்று அதிர்ச்சியும் தோன்றியது. காரணம் சில வேலைகளை செய்வதற்கு என்றே பிறப்பெடுத்தது போன்ற பிம்பம் வெகுசிலருக்கே கிட்டும். அதில் ஆனந்தும் ஒருவர்.

image


 ஆனந்த் பரமேஸ்வரன் பிளாஷ்பாக் 

1995 இல் ஐஐம் கொல்கத்தாவில் மேலாண்மை கல்வி பயின்று, தொலைத்தொடர்பு, மற்றும் ஊடகத்துறையில் பல பதவிகளை வகித்தார் ஆனந்த். அந்த இருபது வருடங்களில் அவர் மிகவும் நேசித்த மற்றொரு விஷயம் பயணம். பயணமென்றால் தபால் அட்டைகளின் பின்புறத்தை அலங்கரிக்கும் இடங்களுக்கு குடும்பத்தோடு சென்று வரும் பயணமல்ல. இயக்குனர் ஷங்கரின் படங்களில் காட்டப்படுவது போன்று மனிதனின் கால்படாத இடங்களை தேடிய பயணம். இதற்கு ஒரு வகையில் அதிக மன அழுத்தம் தந்த கார்ப்பரேட் வேலையும் காரணமாகக் கூறலாம்.

“சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு வேலைகளுக்கு நடுவில் தடையற்ற நீண்ட நெடும் பயணங்களை என்னால் மேற்கொள்ள முடிந்தது," என்கிறார் ஆனந்த்.

பின்பு 2015 மத்தியில், தனது கார்ப்பரேட் வேலையை ராஜினாமா செய்துவிட்டு “பியாண்டர் எக்ஸ்பிரியன்சஸ் எல்எல்பி” யை துவங்கினர். “சில காலம் தொழில்முனைதல் பற்றிய சிந்தனையில், மற்றும் அதனால் வரும் விழைவுகள் பற்றிய சிந்தனையில் இருந்தேன். ஆனால் என் நண்பன் ஸ்ரீநி என்னோடு இணைந்தவுடன் சிந்தனைகளை புறந்தள்ளிவிட்டு, உடனடியாக செயலில் இறங்கிவிட்டோம்”.

ஸ்ரீநிவாசா ஷெனாய் பிளார்ஷ்பாக் 

அடிப்படையில் பட்டையகணக்காளராக இருந்த ஸ்ரீநி, ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ்சில் இருந்து மேலாண்மை பட்டமும் பெற்றுள்ளார். பயணம், ஊடகம், கேளிக்கை, மற்றும் தணிக்கை துறைகளில் 15 வருட அனுபவம் கொண்டுள்ளார்.

அவரை பொறுத்தவரையில்,

"எந்த ஒரு தொழில்முனைவிற்கும் முதலீடு என்பதைக் காட்டிலும் முக்கியமானது, தொழில்முனைவதற்கான சரியான வாய்ப்பு. மேலும், துவக்க காலத்தில் வருவாய் இல்லாமல் தொழிலை மேம்படுத்த நாம் செலவிடும் நேரமும் தான். அதிலும் கார்ப்ரேட் நிறுவனங்களில் சம்பளத்திற்கு பழக்கப்பட்ட நபர்களுக்கு இது மிகவும் அன்னியமாக தோன்றும் என்கிறார் அவர்.
Mr. Srinivasaa shenoy<br>

Mr. Srinivasaa shenoy


பியாண்டர் உருவான விதம் 

நிறுவனர்கள் இருவருக்கும் அதிகம் பிரபலம் இல்லா இடங்களுக்கு செல்வதில் ஆர்வம் அதிகம் இருந்து வந்தது. அந்த இடங்களுக்கு அதிகமாக மக்கள் செல்லாமல் இருந்ததற்கு காரணம் அவற்றை பற்றிய விவரங்கள் அவர்களுக்கு அவ்வளவு எளிதாக கிடைக்க வில்லை என்பதே. மேலும், இந்தியாவில் உள்நாட்டு விமானங்களின் கட்டணங்கள், அயல் நாட்டு விமானப்பயணங்களை காட்டிலும் அதிகமாக இருந்தது. எனவே தற்போது பயணங்களை பெரிதும் விரும்பும் இளைய தலைமுறைக்கு ஏற்ப அவர்களை கவரும் விதமாக நாங்கள் பியாண்டரை துவங்கினோம் என்கின்றனர் நிறுவனர்கள் ஆனந்த் மற்றும் ஸ்ரீநி.

மேலும் இந்த எண்ணம் உதித்த அந்த உன்னதமான இடம், பெங்களுருவில் தெரு ஒரத்தில் இருந்த ஒரு தேனீர் அங்காடியில்...!

எண்ணங்களுக்கு இருக்கும் வேகம் மனிதர்க்கு இல்லை என்ற கருத்திற்கு ஏற்ப, நிறுவனத்தை துவக்க வேண்டும் என்று முடிவெடுத்தாலும், அதற்காக குடும்பங்களின் ஒப்புதல் பெறுதல், ஆரம்பத்தில் அதற்கான முதலீடு திரட்டுதல் கடினமான காரியமாக இருந்துள்ளது.

நோக்கம்

அதிக பிரபலம் இல்ல சுற்றுலாத் தளங்களுக்கு பயணிகள் சென்று வர ஏற்றவாறு அனைத்து வசதிகள் அடங்கிய பயணங்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.” 

என்கின்ற நிறுவனர்கள் இருவரும், அவர்கள் சுற்றுலா வசதிகள் அளிக்கும் நாடுகள் அனைத்திற்கும் அவர்களே சென்று அனைத்து வசதிகளையும் சரிபார்த்து வந்துள்ளனர். இத்தொழில்முனைவின் கவர்சிகரமான அம்சமாக அவர்கள் குறிப்பிடுவதும் இப்பயணங்களையே..!

பியாண்டரில் நாங்கள் மக்களை இயல்பாக அவர்கள் செல்ல நினைக்காத, ஆனால் கண்டிப்பாக காணவேண்டிய இடங்களுக்கு அழைத்துச் செல்கிறோம். எனவே அது சுற்றுலா செல்வது போன்று இராது. பயணம் என்பதே அதற்கு பொருத்தமான வார்த்தையாகும். எனவே அப்படி ஒரு அனுபவம் வாடிகையாலர்களுக்கு தர முதலில் அந்த அந்த நகரங்களுக்கு நாங்கள் சென்று, அங்கு உள்ள மக்களோடு உரையாடி அந்த இடங்களில் உன்னதங்களை அறிந்து, அதன் பின்பு அதை மக்களுக்கு ஏற்றவாறு ஒரு பயணமாக மாற்றுகிறோம். இதற்காக இதுவரை உலகின் பல நாடுகளில் நாங்கள் பாக்பாக்கிங் செய்துள்ளோம்” என்கிறார் ஆனந்த். மேலும் அவர் சென்ற இடங்களை பற்றி தொடர்ந்து கூறினார். 

கம்போடியா கபால் ஸ்பின் : முதலில் கம்போடியா. அங்குதான் உலகின் மிகப்பெரிய ஆலயம் அங்கோர் வாட் உள்ளது. கம்போடியாவிற்கு சுற்றுள்ள செல்லும் மக்கள், அங்கோர் வாட்டை மட்டும் கண்டு புகைப்படங்கள் எடுத்துவிட்டு, திரும்பி விடுவர். ஆனால் அங்கிருந்து ஒரு மணி நேர பயணத்தில், கபால் ஸ்பின் என்ற ஒரு மலை உள்ளது. கீழ்இருந்து அதன் மேலே ஏற ஒரு மணிநேர ட்ரெக்கிங் செய்யவேண்டும். அங்கு மலை மேல் இருந்து கிழே விழும் நதியில் போக்கை அங்கிருக்கும் ஒரு ஆலையதிர்க்குள் சென்று பின்னர் கிழே விழும் வண்ணம் அங்கு வாழ்ந்த மக்கள் மாற்றி அமைத்துள்ளனர். மேலும் ஆற்றின் போக்கில், சிவன் துர்க்கை முருகை விஷ்ணு என பல்வேறு கடவுள்களின் உருவங்களையும் செதுகியுள்ளனர். அவை இன்றும் நமக்கு காணக்கிடைக்கும் அற்புதம். இவ்விடம் அதிகம் கூட்டம் இல்லாது இருப்பதால் நாம் நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டும் வர இயலும்.

ஸ்ரீலங்கா : முதலில் கொலம்போ கடற்கரை பின்னர் நகரத்தை சிறிது தூரம் சென்று பார்ப்பது பின்னர் கண்டி சென்று புத்தரின் பல் இருப்பதை பார்ப்பது என்பது மட்டுமே இல்லாமல், அதைத்தாண்டி அங்கு ராமாயணத்தில் நாம் படித்த இடங்களை பார்க்கும் வாய்ப்பு உள்ளது. சீதை அடைத்து வைக்கபட்டிருந்த வனம், ராவணன் வாழ்ந்த அரண்மனை இருந்த இடம், ராமர் வந்து இறங்கிய இடம், என பல சிறப்பு வாய்ந்த இடங்கள் உள்ளன. அங்கும் எங்கள் குழுவை அழைத்து செல்கிறோம் நாங்கள்.

வியட்நாம் : வியட்நாம் என்ற உடன் சைகான் மற்றும் ஹனாய் இந்த இரு இடங்களே நினைவிற்கு வரும். அங்கு மட்டும் சென்று விட்டு திரும்பும் படலமே நிகழ்கிறது. ஆனால் அங்கு ஹலாங் பே என்கிறம் இடம் உள்ளது. மிக சிலரே அங்கு சென்றுள்ளனர். இங்குள்ள ஒரு மறக்கப்பட்ட நகரத்தில் கட்டுமானத்தின் பரிமாற்றங்களை அவை இருந்த வகையிலேயே காண இயலும். மேலும் அவை இருந்தவாறே பராமரிக்கப் படுகின்றன. அதன் சிறப்பே தனியாகும்.

ஐரோப்பா : ஜெர்மனி, பாரிஸ், லண்டன் சென்று திரும்பிவிடுவர். ஆனால் பெல்ஜியம் கட்டாயம் காணவேண்டிய நாடாகும். அங்கு பீர் மட்டும் சாக்கலேடுகள் பிரசித்திபெற்றவை. மேலும் சமீபத்தில் ஹிந்தியில் வந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற பீகே திரைப்படம் அங்கு எடுக்கபட்டிருக்கும். தற்போது அதன் அழகு வெளியுலகிற்கு தெரியவந்துள்ளதை அடுத்து, அங்கும் நாங்கள் அங்கே அழைத்துச்செல்கிறோம்.

image


முதலீடு 

தற்போது தங்கள் சேமிப்பில் இருந்து நிறுவனர்கள் இருவரும் தொழில்முனைவிற்காக செலவு செய்துவருகின்றனர். மேலும் வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தல், சுற்றுலா தளங்களில் உள்ளவர்களோடு தொடர்பில் இருத்தல் போன்ற முக்கிய பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காது அவர்களே செய்து வருகின்றனர். இத்தொழில் முனைவின் ஆழத்திற்கு சென்று முக்கிய பொறுப்புகளை உணர, மற்றும் வாடிக்கையாளர் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு ஏற்ப இவர்களின் சேவைகளை மேம்படுத்த இம்முறை வழிவகுக்கும் என்றும் நம்புகின்றனர்.

நிறுவனதுக்கான விளம்பரம் 

வாடிக்கையாளரிடம் எங்கள் நிறுவனத்தை கொண்டு சேர்க்கும் பொருட்டு சமூகவலைதளங்களிலும், எங்கள் வலைத்தளம் மூலமும் விளம்பரப்படுத்தி வருகின்றோம். துவங்கி சிலமாதங்கள் தான் ஆகின்றது என்றாலும், எங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்க்கையில் நம்பிக்கையாகவும் ஆனந்தமாகவும் உள்ளது. மேலும் அவற்றின் மூலம் கிடைக்கும் விமர்சனங்கள் மற்றும் சந்தேகங்கள் மூலம் எங்கள் சேவையை செழுமைப்படுத்தி வருகின்றோம் என்கிறார் ஆனந்த்.

மேலும் முதலீடிற்காக மற்றவர்கள் எவரையும் அணுகவில்லை. எங்கள் சேவைகளை வழங்கும் நாடுகளின் எண்ணிக்கை மிகப்பெரிதாக வளர்ந்து நிற்கையில் அதற்கான அவசியம் உண்டாகும். எனவே அதுவரை அக்கவலை எங்களுக்கு இல்லை. வளர்ச்சி பற்றி கூறும் வேளையில், முக்கியமாக உலகின் மிகப்பிரபலமான 200 நாடுகளின் சுற்றுலா தளங்களுக்கு உங்களை அழைத்து செல்லும் நிறுவனமாக பியாண்டர் இராது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். தனித்துவம் வாய்ந்த நாடுகள், சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிக்காத நாடுகள் என எங்கள் நிறுவனத்திற்கு புவியியல் ரீதியாக எல்லைகள் இருப்பினும், எங்கள் எண்ணங்களுக்கும் கனவுகளுக்கும் எல்லைகள் இல்லை என்கிறார் ஸ்ரீநி.

பியாண்டரின் பயணம் 

ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை பியாண்டர் எங்களுக்கு நிறைய பாடங்களை கற்றுத்தந்துள்ளது. அவற்றில் பல ஆனந்தமாகவும், சில ஆத்திரமூட்டும் விதமாகவும் அமைந்துள்ளது. ஆனால் தொழில்முனைதலின் போது அனைத்திற்கும் தயாராக வேண்டியது தொழில்முனைவோரின் கடமையாகும். எனவே நாங்கள் தயாராக இருந்தோம். மேலும் அச்சமையங்களில் என் நண்பன் ஒருவன் கூறுவதை நினைத்துகொள்வேன்.

“ நம் நிறுவனத்தின் அலுவலக உதவியாளராக, கணக்காளராக, சட்ட ஆலோசகராக, விற்பனை பிரதிநிதியாக, வாடிக்கையாளர் சிக்கல்களை கையாள்பவராக, இன்னும் பல அவதாரங்களை, தொழில்முனைவோரே எடுக்க வேண்டி இருக்கும். சில நேரங்களில் அனைத்து அவதாரங்களையும் ஒரே சமையத்தில் கையாலும் சூழ்நிலையும் உருவாகும். அதுதான் உண்மை நிலை”.

எனவே தொழில்முனைதல், ரோலர் கோஸ்டர் பயணம் போன்று. ஏற்ற இறக்கங்களை கடந்து செல்வதில் அலாதி இன்பம் உண்டு” என்கிறார் ஸ்ரீநி. 

புதிதாக தொழில்முனைவோருக்கு சில வார்த்தைகள் 

அறிவுரை கொடுக்கும் அளவு நான் இன்னும் தகுதி அடையவில்லை. ஆனால் அவ்வாறு கொடுக்க நேர்ந்தால், எனது பதில், தொழில்முனைவதை பற்றி சில சந்தேகங்களோடு நான் இருக்கையில் எனக்கு ஒருவர் அளித்த அறிவுரையே.

“மனதில் மீண்டும் அலைகள் போல வந்து வந்து செல்லும் ஒரு எண்ணத்தை, ஒரு கருத்தை, தொழில் பற்றிய சிந்தனையை கண்டுகொண்டு, அது நிறைவேறும் வரை, அதன் கழுத்தை இறுக பற்றிக்கொள். எதிர்வரும் சூழ்நிலை எவ்வாறு இருப்பினும், நம் பிடி தளர்தல் கூடாது. விரைவில் வெற்றி உனை தேடி வரும். அவ்வாறு இல்லையென்றால், முயற்சி போதவில்லை என்றே அர்த்தம்” 

என்கிறார் ஆனந்த். சுருக்கமாக சித்தார்த் அபிமன்யு வார்த்தைகளில் கூறுவது என்றால், “வாழ்வில் ஒரு சிந்தனையை எடுத்துக்கொண்டு, அதனையே வாழ்க்கையாக்கி கொள்தல்”...

இணையதள முகவரி: Beyonder

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

பயணம் தொடர்பு கட்டுரைகள்:

கெராஜில் பிறந்த 'வொயில்டுகிராஃப்ட்' இன்று 400 இந்திய நகரங்களில் விழுதுவிட்ட ஆலமரம்

எக்பீரியன்ஸ் அன்லிமிடட் வழங்கும் கிராம சுற்றுலா!