Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

சபர்மதி நதியின் ஒரு பகுதி கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் சமூக ஆர்வலர்!

பத்திரிக்கையாளராக இருந்து சமூக ஆர்வலராக மாறிய தினேஷ்குமார் கௌதம் இரண்டே மாதங்களில் தன்னார்வலர்களின் உதவியுடன் சபர்மதி நதியில் இருந்து மூன்று டன் கழிவுகளை அகற்றியுள்ளார்.

சபர்மதி நதியின் ஒரு பகுதி கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் சமூக ஆர்வலர்!

Tuesday February 19, 2019 , 2 min Read

கங்கை, யமுனை நதிகள் போன்றே சபர்மதி நதியும் அதிக மாசடைந்துள்ளது. அரசாங்கம் இந்த சிக்கலுக்குத் தீர்வுகாணத் தேவையான நடவடிக்கை எடுக்க குழு அமைப்பதில் பரபரப்பாக இருக்கும் நிலையில் பத்திரிக்கையாளராக இருந்து சமூக ஆர்வலராக மாறிய தினேஷ்குமார் கௌதம், சபர்மதி நதியை சுத்தப்படுத்தும் பணியை கையில் எடுத்துள்ளார்.

காந்திநகர் மற்றும் அஹமதாபாத் வாயிலாக குஜராத்தில் பாயும் இந்த நதி கழிவுகளால் மாசடைந்துள்ளது. நதிகளின் மோசமான நிலையையும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் சீரழிவையும் கண்டு ’திருஷ்டி ட்ரஸ்ட் ஃபவுண்டேஷன்’ என்கிற தனது அரசு சாரா நிறுவனம் மூலம் 2017-ம் ஆண்டு சபர்மதி நதியின் ஒரு பகுதியை கௌதம் தத்தெடுத்துக்கொண்டார்.

நதியை சுத்தப்படுத்தும் முயற்சி 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது. இந்த முயற்சியின் வாயிலாக கௌதம் 1,000 தன்னார்வலர்களுடன் இணைந்து நதியிலிருந்து மூன்று டன் கழிவுகளை அகற்றினார்.

Life Beyond Numbers உடனான உரையாடலில் கௌதம் குறிப்பிடுகையில்,

”நான் தினமும் தன்னார்வலர்களுடன் இணைந்து காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டேன். அத்துடன் கழிவுகளை முறையாக அகற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தினேன். என்னுடைய பத்து வயது மகளும் இந்தப் பணியில் என்னுடன் இணைந்துகொண்டார்,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில்,

”சபர்மதி நதியின் ஒரு பகுதியில் (காந்திநகர் மற்றும் அஹமதாபாத் இடையே இருக்கும் பகுதி) நாங்கள் கவனம் செலுத்தினோம். இங்கு ஐந்து கி.மீ பகுதியை தத்தெடுத்துக்கொண்டோம். நாங்கள் இரண்டே மாதங்களில் மூன்று டன் கழிவுகளை நதியிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளோம்,” என்றார்.

உள்ளூர் நகராட்சி மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் மற்றும் இதர மாவட்ட அதிகாரிகளும் கௌதமின் முயற்சி எளிதாக மேற்கொள்ளப்பட உதவுகின்றனர். மக்கள் தற்போது ஈரக்கழிவுகளையும் உலர்கழிவுகளையும் வகைப்படுத்தத் துவங்கியுள்ளதால் நகராட்சியால் எளிதாக கழிவுகளை சேகரிக்க முடிகிறது என்கிறார் கௌதம்.

எனினும் இத்தகைய தூய்மைப்படுத்தும் பணிகளைத் துவங்குவது கௌதமிற்கு எளிதாக இருந்துவிடவில்லை. ஆரம்பத்தில் உள்ளூர் மக்களிடையே நதியை சுத்தப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அதன் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தையும் தன்னார்வலர்களுடன் இணைந்து எடுத்துரைக்கத் துவங்கினார். கௌதம் அஹமதாபாத் நகராட்சியுடன் இணைந்து நதியில் கழிவுகளை கொட்டவேண்டாம் என்று கிராமவாசிகளிடம் வலியுறுத்தியதாக Youth Ki Awaaz தெரிவிக்கிறது.

தற்போது கௌதம் இலக்காகக் கொண்ட குறிப்பிட்ட பகுதி சுத்தப்படுத்தப்பட்டதால் சுற்றுச்சூழல் பசுமையாக காணப்படுவதுடன் இடம்பெயர்ந்த பறவைகளும் இந்தப் பகுதிக்கு வரத்துவங்கியுள்ளன.

இது குறித்து கௌதம் விவரிக்கையில்,

”நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் நதிகளை பழைய நிலைக்கு மீட்டெடுக்கமுடியும் என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். இதே முயற்சியை பெரியளவில் மேற்கொள்ளவேண்டிய நேரம் இது,” என்றார்.

கௌதம் நதியை சுத்தப்படுத்தியது மட்டுமின்றி சுற்றுச்சூழலை பாதுகாக்க 2,00,000 மரங்களை நடும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். இவரது முயற்சிகளை நாடு முழுவதும் உள்ள மக்கள் பாராட்டி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி கௌதம் தனது அரசு சாரா நிறுவனம் மூலம் நாடு முழுவதும் பல் சுகாதாரம் மற்றும் வாய் புற்றுநோய் தொடர்பாக பல்வேறு முகாம்களும் ஏற்பாடு செய்து வருகிறார்.

கட்டுரை : THINK CHANGE INDIA