‘என் மருமகன் ரிஷி பிரதமர் ஆக என் மகளே காரணம்’ - இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி!
ரிஷி சுனக் பிரதமராக உயர எனது மகள் தான் காரனம் என அவரது மாமியார் சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ரிஷி சுனக் பிரதமராக உயர எனது மகள் தான் காரனம் என அவரது மாமியார் சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார்” என்பது பிரபலமான பழமொழி உண்டு. அதை நிரூபிக்க பல உதாரணங்களும் எடுத்துக்காட்டப்படுகிறது. இதற்கு இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியே சிறந்த உதாரணம் என்று சொல்லலாம்.
ஏனெனில், புனேவில் உள்ள TELCO நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்த என்.ஆர். நாராயண மூர்த்தியை சுதா மூர்த்தி திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர், நாராயண மூர்த்தி, சுதா மூர்த்தியுடன் இணைந்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தை தொடங்கினார். தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்தியாவிலேயே 2வது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக உள்ளது.
இந்நிலையில், கணவரை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்ல மனைவியால் முடியும் என சுதா மூர்த்தி தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதாவை தான் இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் திருமனம் செய்துள்ளார். இங்கிலாந்தின் இளம் வயது பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்க தனது மகள் அக்ஷதா தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
"நான் எனது கணவரை தொழிலதிபர் ஆக்கினேன். என் மகள் அவளுடைய கணவரை இங்கிலாந்து பிரதமராக்கினாள். காரணம் மனைவியின் மகிமை. கணவனை மனைவி எப்படி மாற்ற முடியும் என்பதற்கு உதாரணம்,” என்று சுதா மூர்த்தி கூறினார்.
ரிஷி சுனக்கின் வாழ்க்கையில், குறிப்பாக அவரது உணவுமுறையில் அவரது மகள் செல்வாக்கு செலுத்தியதாகவும் சுதா மூர்த்தி கூறினார்.
“ஆமா, என் மருமகன் முன்னோர்கள் 150 ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ளனர். இருப்பினும், மதம் சம்பந்தமான விஷயத்தை இன்று வரை பின்பற்றி வருகிறார்கள். எனது மருமகன் வியாழன் தோறும் ராகவேந்திரா சுவாமிக்கு விரதம் இருக்கிறார். எனது மகளுடனான திருமணம் கூட வியாழக்கிழமையில் தான் நடந்தது,” எனக்கூறியுள்ளார்.
தனது மகள் மற்றும் மருமகள் குறித்து சுதா மூர்த்தி பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.