Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

நிஜ வாழ்க்கையில் சூப்பர் ஹீரோக்களாக திகழ்ந்தவர்களை கவுரவித்த ‘அலர்ட் பியிங்’ விருதுகள்!

நிஜ வாழ்க்கையில் சூப்பர் ஹீரோக்களாக விளங்கியவர்கள் ‘அலர்ட் பியிங்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

நிஜ வாழ்க்கையில் சூப்பர் ஹீரோக்களாக திகழ்ந்தவர்களை கவுரவித்த ‘அலர்ட் பியிங்’ விருதுகள்!

Friday February 09, 2024 , 3 min Read

நிஜ வாழ்க்கையில் சூப்பர் ஹீரோக்களாக விளங்கியவர்களுக்கு ‘அலர்ட் பியிங்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

அலர்ட் பியிங் விருது விழா:

‘Alert’ என்ற சென்னையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பானது, நிஜ வாழ்க்கையில் ஹீரோக்களாக செயல்பட்டு உயிர்களைக் காப்பாற்றியும், பலருக்கு உதவி புரியும் நபர்களை விருது வழங்கி கெளரவித்து வருகிறது.

சென்னையில் நடைபெற்ற 7ம் ஆண்டு ‘Alert Being’ விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் அடையாறு புற்று நோய் மைய மற்றும் ஏஷியன் பெயிண்ட்ஸ் தலைவர் சேஷசாயி, சென்னை இஎன்டி ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் பத்மஸ்ரீ மோகன் காமேஸ்வரன் ஆகியோர் நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தனர்.

அலர்ட் தன்னார்வ தொண்டு அமைப்பு, தன்னார்வலர்களை விபத்தில் மாட்டிக்கொள்ளும் நபர்களுக்கு அவசர உதவி அளித்திடவும், அவர்களுக்கு உயிர் காக்க உதவும் சிபிஆர் போன்ற முதலுதவி கொடுத்திடவும் பயிற்சி அளித்து வருகிறது.

alert

தங்கள் அமைப்பு பற்றி இந்நிகழ்ச்சியில் பேசிய அலர்ட் தலைவர் மைக் முரளிதரன்,

“பயிற்சி பெற்ற தன்னார்வலர்களின் எண்ணிக்கையை 3 லட்சம் பேரிலிருந்து வரும் 2028-ம் ஆண்டுக்குள் 1 கோடியாக உயர்த்த இருக்கிறோம். கொரோனா காலத்தில் பயிற்சியின் வேகம் குறைந்த போதிலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பிற சமூகங்களைத் தவிர, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆபத்து காலங்களில் உதவிடும் பயிற்சியை அளிப்பதன் மூலம் இதனை அதிகரிக்க உள்ளோம். விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற அவசரகாலத்தில் உதவுவதற்கு அதிகமான மக்களுக்கு பயிற்சி அளிப்பதே இதன் நோக்கம்,” என்றார்.

யாருக்கெல்லாம் விருது வழங்கப்பட்டது?

‘அலர்ட் பியிங்’ விருது தனிநபர், நிறுவனங்கள், மற்றும் வாழ்நாள் சாதனையாளர் என 5 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டது.

  • நிறுவனங்களுக்கான பிரிவில், நிஜாம்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் பார் இ ஐசியூ, யுனைடெட் வே ஆப் சென்னை, தாரா சன்ஸ்தான், தரணி ஜியோடெக் என்ஜினியர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், சுரபி டிரஸ்ட், ஆகிய 5 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

  • அலர்ட் பியிங் ஐகான் விருது உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 பேரை காப்பாற்றிய ரேட் ஹோல் மைனர்களுக்கு வழங்கப்பட்டது.

  • வணிகத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், சிறப்பாக சமூகத் தொண்டாற்றியதற்காகவும் வாழ்நாள் சாதனையாளர் விருது ரத்தன் டாடாவிற்கு வழங்கப்பட்டது.
alert

மனிதத்தை காத்த நிஜ ஹீரோக்கள்:

தனி நபர் பிரிவில் தங்கள் உயிரை பணையம் வைத்த 5 நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கு வழங்கப்பட்டது.

  • வெள்ளத்தின் போது குழந்தையைப் பெற்றெடுக்க உதவிய தூத்துக்குடி ஏரல் எனும் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த செவிலியர் ஜெயலட்சுமி,

  • தூத்துக்குடி மாவட்டம் நவலட்சுமிபுரத்தில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த 200 மக்களை வெறும் கயிறு மற்றும் லாரி டயர் உதவியுடன் சுமார் 12 மணி நேரம் போராடி மீட்ட அன்புராஜ் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.

  • புதுச்சேரியில் ஆதரவின்றி தவிக்கும் தாய்மார்களுக்கு தலைமகனாக சேவையாற்றி வரும் மோகனுக்கு விருது வழங்கப்பட்டது. இவர் கைவிடப்பட்ட பெண்கள், முதியவர்கள் என அனைவர்க்கும் முழு நேரமாக உதவி செய்யும் வகையில் ஷரோன் என்ற அறக்கட்டளையை உருவாக்கி 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிவருகிறார்.

  • ஓசூரில் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு தக்க சமயத்தில் முதலுதவி செய்து, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து உயிர் காத்து வரும், ஹுமானிட்டியின் மருவுருவமான ஹுமேஷுக்கும் விருது வழங்கப்பட்டது.

  • மிக்ஜாம் புயலின் போது, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த 500க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சேவை செய்ததற்காக புதுக்குடி மேலூர் கிராம மக்களுக்கும் வழங்கப்பட்டது.
alert

விருது வழங்கப்பட்டது குறித்து அலர்ட் இணை நிறுவனரும், நிர்வாக அறங்காவலருமான ராஜேஷ் திரிவேதி பேசுகையில்,

“உத்தரகாண்ட் சுரங்க தொழிலாளர்கள் மீட்பு சம்பவமாக இருக்கட்டும், புதுக்குடி மேலூர் மக்களாகட்டும், செவிலியர் ஜெயலட்சுமி போன்ற கடமையைத் தாண்டிய தனிமனிதர்களாக இருக்கட்டும், மனிதனாக இருப்பதற்கு கருணையை வெளிப்படுத்துவதை விட பெரிதாக எதுவும் இல்லை. ரத்தன் டாடாவின் மனிதநேய செயல்பாடுகளை போற்றி கவுரவிக்கும் விதமாக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.

இந்த விருது வழங்கும் விழாவில் பஹ்வான் சைபர்டெக், அசோக் லேலண்ட் மற்றும் விஜிஎன் குழும நிறுவனங்கள், மார்க் மெட்ரோ அன்ட் டெசோல்வ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், நாகா புட்ஸ், சைதன்யா பில்டர்ஸ், டிஎன்கேஜி அறக்கட்டளை ஆகியவை ஆதரவு அளித்தன.

விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் நடுவர்கள் குழுவில், நேச்சுரல் குரூப் சலூன்ஸ் நிறுவனர் வீணா குமாரவேல், தலைமை தகவல் ஆணையர், டிஜிபி (ஓய்வு) முகமது ஷகீல் அக்தர், ஆற்காடு இளவரசரின் வாரிசு மற்றும் திவான் நவாப்சாதா முகமது ஆசிப் அலி, லைப்லைன் மருத்துவமனைகள் தலைவர் மற்றும் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜே.எஸ். ராஜ்குமார், மாற்றம் அறக்கட்டளை நிறுவனர் சுஜித்குமார் மற்றும் தொழில் அதிபர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.