1/2 லிட்டர் தண்ணீர் பாட்டில் வெறும் 2 ரூபாய் - புதுமையாக்கம் மூலம் குறைந்த விலையில் ‘வாட்டர்’ வழங்கும் தம்பதி!
2023ம் ஆண்டு நிறுவப்பட்ட குருகிராமைச் சேர்ந்த ’Wahter’ தனது தண்ணீர் பாட்டிலின் லேபிலில் 80 சதவீதத்தை பிராண்ட்கள் விளம்பரம் செய்ய அளிக்கிறது. அதன்மூலம் குறைந்த விலையில் பாட்டிலை விற்பனை செய்யமுடிகிறது.
ஸ்வதேஸ் திரைப்படத்தில், நாயகன் மோகன் பார்கவ் (ஷாருக் கான்) ஒரு ரெயில் நிலைத்தில் சிறுவன் தண்ணீர் விற்பதை பார்த்து வாழ்க்கையின் தனது பாதைக்கான ஊக்கம் பெறுவார்.
'வாஹ்ட்டர்' (Wahter) இணை நிறுவனர் அமீத் நேன்வானிக்கு, இத்தகைய ஒரு தருணம் அவரது வர்த்தக பயணத்தின் போது உண்டானது.
தண்ணீர் பாட்டில் வாங்குவதற்கான சென்ற போது (ஒரு பாட்டிலின் விலை ரூ.30), சாலை அருகே குழந்தை ஒன்று சிறு குட்டையில் இருந்து தண்ணீர் குடிக்கும் காட்சியை கண்டார்.
உடனடியாக அவர் இந்த காட்சியை தனது மனைவி காஷிசுடன் பகிர்ந்து கொண்டார்.
”நெஞ்சை உலுக்கிய இந்த காட்சி பற்றி நீண்ட நேரம் யோசித்த பிறகு, அனைவருக்கும் தூய குடிநீர் கிடைக்கச்செய்ய தண்ணீரின் தரத்தை பாதுகாக்கும் அதே நேரத்தில் விலையை குறைத்தாக வேண்டும் என இருவரும் தீர்மானித்தோம். இது ஊக்கமாக அமைந்தது,” என யுவர்ஸ்டோரியிடம் பேசிய போது அமீத் நேன்வானி கூறினார்.
பாதுகாப்பான குடிநீரை எளிதாக சாத்தியமாக்கும் பிரச்னைக்கு தீர்வு காண இந்த தம்பதி தீர்மானித்தனர். இந்திய மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கு அல்லது 163 மில்லியன் மக்கள் தூய குடிநீருக்கான அணுகல் வசதி பெற்றிருக்கவில்லை என 2018 வாட்டர் எய்ட் அறிக்கை தெரிவிக்கிறது.
இருவரும் இணைந்து 2023ல் 500 மிலி பாட்டில் தண்ணீர் ரூ.2 எனும் விலைக்கு விற்கும் நோக்கத்துடன் வாட்டர் நிறுவனத்தை துவக்கினர். குருகிமாமில் இருந்து செயல்படும் நிறுவனம், தனது தண்ணீர் பாட்டில் லேபிலில் 80 சதவீதத்தை பங்குதாரர் பிராண்ட்களுக்கு அளித்து, அவர்கள் அதை விருப்பம் போல பயன்படுத்திக்கொள்ள செய்கிறது. விளம்பரதாரர்களுக்கு நல்ல பலன் கிடைப்பதையும் உறுதி செய்கிறது.
“மற்ற நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கும் வெண்டர்களே எங்களுக்கும் தண்ணீர் வழங்குகின்றனர்,” என்கிறார்.
நிறுவனம் தற்போது 10 ஊழியர்களோடு, நேன்வானி குடும்ப வர்த்தகமான சிவா குழுமத்தின் கீழ் இயங்குகிறது.
தொழில்நுட்பம் சார்ந்த விநியோகம்
நிறுவனம் உருவாக்கியுள்ள செயலியில், விளம்பரதாரர்கள் தங்கள் ஆர்டரை வழங்கி, பிராண்ட் வடிவமைப்பை சமர்பித்து அதன் இறுதி வடிவமையும் காணலாம். அவர்கள் குறிப்பிட்ட பகுதியை இலக்காகக் கொண்டும் விளம்பரம் செய்யலாம்.
“வடிவமைப்பு ஏற்கப்பட்டு பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்ட பிறகு, விளம்பர நிறுவனம் குறிப்பிட்ட பகுதிகளில் அதன் செயல்பாட்டை அறிந்து, விற்பனை உத்திகளையும் வகுக்கலாம்,@ என காஷிஷ் விளக்குகிறார்.
பிராண்ட்களுக்கு விற்பனை தொடர்பான அனைத்து தகவல்கள், அலசலும் வழங்கப்படுவதால், அதற்கேற்ப உத்திகளை வகுத்திக்கொள்ளலாம்.
இலக்கு வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற உத்திகளை வகுக்க இது உதவுகிறது, என்கிறார். தற்போது, வாஹ்ட்டர், தில்லி என்சிஆர் பகுதியில் உள்ள கானட் பிளேஸ், ஐடிஒ, நொய்டா பிலிம் சிட்டி, உத்யோ விகார் உள்ளிட்ட இடங்களில் விநியோகம் கொண்டுள்ளது.
“மார்கெட், கடைகள், வர்த்தக நிறுவங்கள், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பாட்டில் கிடைக்கச்செய்கிறோம்,” என்கிறார் அமீத்.
மேலும், ஸ்கேரப்பட்டி எனும் மறுசுழற்சி நிறுவனத்துடன் மூன்று மாதங்களில் 10 மில்லியன் பாட்டில்களை மறுசுழற்சி செய்து பயனுள்ள பொருட்களாக மாற்றவும் ஒப்பந்தம் செய்துள்ளது.
வர்த்தக மாதிரி
நிறுவனம் விளம்பர நிறுவனங்களின் இலக்கு வாடிக்கையாளர் பரப்பிற்கு ஏற்ப தண்ணீர் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 முதல் 20 வரை கட்டணம் வசூலிக்கிறது. தில்லியைச் சேர்ந்த மின்சாதன நிறுவனம் விஜய் சேல்சுடன் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அதன் விற்பனை நிலையங்களில் விநியோகம் செய்கிறது.
போட் (boAt Lifestyle) நிறுவனம் மற்றும் தில்லி பகுதியில் மக்களுக்கு தூய குடிநீர் வழங்கும் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஷூபி பவுண்டேஷன் ஆகியவற்றுடனும் இணைந்து செயல்படுகிறது. இதுவரை 5 லட்சம் பாட்டில் உறுதி அளித்துள்ளது.
“எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச பிராண்ட்களோடு ஒப்பந்தம் செய்ய உள்ளோம். விரைவில் ஐக்கிய அரபு அமீரக ரியல் எஸ்டேட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் இறுதியாகும் என்கிறார் அமீத்.
விநியோ பிரச்சனைக்கு தீர்வு காண 75 கிமீக்கு ஒரு ஐஎஸ்.ஓ சான்றிதழ் பெற்ற தண்ணீர் பாட்டில் ஆலை அமைக்க உள்ளது.
எதிர்காலத் திட்டம்
இந்திய விளம்பர சந்தை 2023ல் ரூ.916.32 பில்லியன் மதிப்பு கொண்டது, ஆண்டுக்கு 11 சதவீத வளர்ச்சி கண்டு 2032 ல் ரூ.2344.01 பில்லியன் டாலர் மதிப்பு பெற்றிருக்கும் என எக்ஸ்பர்ட் மார்க்கெட் ஆய்வு தெரிவிக்கிறது.
வாஹ்ட்டர் நிறுவனம், 2025 நிதியாண்டில் ரூ.250 முதல் ரூ.300 கோடி வருவாயை எதிர்பார்ப்பதாகவும், 2028 நிதியாண்டில் ரூ.3600 கோடி எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கிறது. மேலும், நகரங்களில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
தற்போது 250 மற்றும் 500 மிலி தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்கிறது. தேவைக்கேற்ப பாட்டில் அளவை அதிகரிக்க உள்ளது. இந்த பிரிவில் நிறுவனத்திற்கு நேரடி போட்டி இல்லை.
உடனடியாக நிதி திரட்டும் எண்ணமும் இல்லை என்றாலும், எதிர்காலத்தில் விரிவாக்கத்திற்காக நிதி திரட்ட உத்தேசித்துள்ளது.
ஆங்கிலத்தில்: பூஜா மாலிக். தமிழில்: சைபர் சிம்மன்
'காற்றிலிருந்து தண்ணீர்’ - புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவில் செயல்படும் ‘உறவு லேப்ஸ்’
Edited by Induja Raghunathan