$1 மில்லியனை நெருங்கிய அமிதாப் பச்சனின் NFT ஏலம்!
இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7.18 கோடி ஏலம்!
NFT எக்ஸ்சேஞ் தளமான Beyondlife.club அக்டோபர் 28 அன்று தங்களது NFT தளத்தில் மூத்த பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் NFT வடிவிலான போட்டோ கலெக்ஷன்களை வெளியிடவுள்ளதாக அறிவித்தது. அதற்காக ஒரு தனிப்பட்ட வாலட்டை உருவாக்கப் போவதாகவும் அந்நிறுவனம் அறிவித்தது.
அதன்படி, அமிதாப் பச்சனின் 'மதுஷாலா' எனப் பெயர் கொண்ட NFT ஆட்டோகிராப் போஸ்டர்கள் மற்றும் சேகரிப்புகள் இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.18 கோடி ஏலத்தில் பெற்றுள்ளன.
'மதுஷாலா' NFT தொகுப்பு என்பது அமிதாப் பச்சனின் தந்தையின் கவிதையை அமிதாப் பச்சனின் குரலிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டும் சுமார் ரூ.5.5 கோடி மதிப்புள்ள ஏலத்தைத் தாண்டியது. NFT என்பது பிளாக்செயின் எனப்படும் டிஜிட்டல் லெட்ஜரில் சேமிக்கப்பட்ட தரவுகளின் அலகு ஆகும். புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோ மற்றும் பிற வகையான டிஜிட்டல் கோப்புகள் போன்ற பொருட்களைப் பிரதிநிதித்துவப்படுத்த NFTகள் பயன்படுத்தப்படலாம்.
இந்த ஏலத்தை பெறுபவர், அமிதாப்பை சந்திக்க முடியும். ஏலத்தின் மற்றொரு சிறப்பம்சம் தி லூட் பாக்ஸ் NFT ஆகும். இதில் ஒரு பாக்ஸ் வாங்கும் ஒவ்வொருவரும் NFT சேகரிப்பில் இருந்து ஒரு உறுதியான கலைப் பகுதியைப் பெறுவர் எனச் சொல்லப்பட்டுள்ளது.
அதாவது, இந்த பாக்ஸில் அமிதாப்பின் அரிய விண்டேஜ் போஸ்டர்கள் போன்ற 5000 பொருட்கள் இடம்பெறும். இந்த பாக்ஸ்கள் ஒவ்வொன்றும் 54 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்தன. மொத்தம் 50,000 டாலருக்கு விற்கப்பட்டது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
"இந்த டிஜிட்டல் மயமாக்கல் உலகில், என் ரசிகர்களுடன் முன்பை விட NFT-கள் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டன. எனது NFT-களின் வெற்றிகரமான ஏலம், எனது வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையின் மிகவும் பொக்கிஷமான மற்றும் தனிப்பட்ட தருணங்களில் சில எனது ஆதரவாளர்களால் மிகவும் வரவேற்கப்பட்டு முதலீடு செய்யப்பட்டன.”
இது உண்மையில் எனக்கு மிகவும் பெருமையான தருணம், மேலும், எனது தொழில்துறையினரும் இந்த புதிய யுக தொழில்நுட்பத்துடன் குழுவில் வந்து தங்கள் ரசிகர்களுடன் ஈடுபட வழி வகுக்கிறது, என்று அமிதாப் பச்சன் இந்த ஏலம் தொடர்பாக பேசியுள்ளார்.
நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 4 ஆம் தேதி முடிவடைந்த ஏலம், BeyondLife.Club இல் நடத்தப்பட்டது. BeyondLife.Club நிர்வாகம் NFTகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய பரவலாக்கப்பட்ட பிராண்டட் சந்தைகளில் ஒன்றான கார்டியன் லிங்க் மூலம் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தி: பிடிஐ | தமிழில்: மலையரசு