லண்டனில் அனந்த் அம்பானியின் திருமணமா? ரூ.572 கோடி மதிப்புள்ள அரண்மனையின் சிறப்பம்சங்கள் என்ன?
லண்டனில் உள்ள ரூ. 592 கோடி மதிப்பிலான ஸ்டோக் பார்க் கன்ட்ரி கிளப்பில், வரும் ஜூலை மாதம் ஆனந்த அம்பானி- ராதிகாவின் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிச்சயம் இந்தத் திருமணத்திற்கான செலவு பல ஆயிரங்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகமே வியக்கும் வண்ணம் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளை நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக அவரது திருமணம் இதைவிட பிரமாண்டமாக, லண்டனில் உள்ள ரூ.592 கோடி மதிப்பிலான ஸ்டோக் பார்க் கன்ட்ரி கிளப்பில் நடைபெற இருப்பதாகவும், அதற்கான ஆயத்த வேலைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அம்பானி வீட்டு விசேஷம் என்றாலே நிச்சயம் அது ஊடகங்களுக்கும், சமூகவலைதளப் பக்கங்களுக்கும் திருவிழாதான். பிரம்மாண்டம், பிரபலங்கள் என அடுத்தடுத்து ஏதாவது செய்திகள் உலா வந்து கொண்டே இருக்கும்.

சாதாரண விசேஷத்திற்கே அப்படியென்றால், அம்பானி மகன் திருமணம் என்றால் கேட்கவா வேண்டும். கடந்தாண்டு, அம்பானியின் இளைய மகன் அனந்திற்கும், அவரது நீண்டநாள் தோழி ராதிகாவுக்கும் மும்பையில் உள்ள அம்பானியின் அன்டிலியா வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் மூன்று நாட்கள் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவாக்கிய காடுகள் மத்தியில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.
பிரமாண்டமாக நடந்த ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி
தடபுடலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சர்வதேச மற்றும் இந்திய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டதால், குஜராத்தே விழாக்கோலம் பூண்டது. ஒட்டுமொத்த பாலிவுட்டும் ஓடி ஓடி வேலை செய்ததை யாராலும் மறக்க முடியாது.
திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியையே அம்பானி இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்துகிறார் என்றால், திருமணத்தை எப்படியெல்லாம் நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு அப்போதே எழத் தொடங்கியது. அதற்கேற்றார்போல், மும்பையில் தான் திருமணம்.. இல்லையில்லை துபாயில் திருமணம் என ஆளாளுக்கு ஒரு இடத்தை கூறினார்கள்.

லண்டனில் திருமணம்?
இந்நிலையில், அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம், வரும் ஜூலை மாதம் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க் எஸ்டேட்டில் (Stoke Park estate in London) நடைபெற இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பக்கிங்ஹாம்ஷயரில் அமைந்துள்ள இந்த ஸ்டோக் பார்க் கன்ட்ரி கிளப் ரூ.592 கோடி மதிப்பிலானது. இங்கிலாந்தின் மிக ஆடம்பரமான சொத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. 900 ஆண்டுகள் பழமையான இந்த இடம், ஜேம்ஸ் பாண்ட்டின் 'கோல்ட்ஃபிங்கர்' (1964) மற்றும் 'டுமாரோ நெவர் டைஸ்' (1997) படங்களில் காட்டப்பட்டுள்ளது.
இங்கு அனந்த் அம்பானி-ராதிகா திருமணம் நடைபெற இருக்கிறதா அல்லது அவர்களது மது விருந்து (cocktail) அல்லது சங்கீத் நடைபெற உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. திருமணம் இங்கு நடைபெற இருப்பதாகவும், அவர்களின் சங்கீத் (sangeet) நிகழ்ச்சி அபுதாபியில் நடத்தப்படும் என்றும் ஒரு தகவல் கூறுகிறது.

இந்த சொத்து முதலில் 1066ம் ஆண்டு கட்டப்பட்டது. பின்னர், 1760ல் ஜான் பென்னால் புதுப்பிக்கப்பட்டது.
சுமார் 900 ஆண்டுகள் பழமையான இந்த இடம், ஜேம்ஸ் பாண்ட்டின் 'கோல்ட்ஃபிங்கர்' (1964) மற்றும் 'டுமாரோ நெவர் டைஸ்' (1997) படங்களில் காட்டப்பட்டுள்ளது. இங்கு அனந்த் அம்பானி-ராதிகா திருமணம் நடைபெற இருக்கிறதா அல்லது அவர்களது மது விருந்து (cocktail) அல்லது சங்கீத் நடைபெற உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பிரமாண்டமான இடம்

ஸ்டோக் பார்க் எஸ்டேட் 49 நேர்த்தியான அறைகள், மூன்று சிறந்த உணவகங்கள், 4,000 சதுர அடிக்கு மேல் ஒரு உடற்பயிற்சி கூடம், ஒரு சுகாதார மையம், உட்புற மற்றும் வெளிப்புற நீச்சல் குளங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. , 13 டென்னிஸ் மைதானங்கள் மற்றும் ஒரு பெரிய கோல்ஃப் மைதானமும் உள்ளது.
1581ல் ராணி முதலாம் எலிசபெத் இந்த இடத்தில்தான் வாழ்ந்ததாக வரலாற்று அறிக்கைகள் கூறுகின்றன. அப்போதிருந்தே, அரசக் குடும்ப உறுப்பினர்கள் கூட தங்களின் முக்கியமான கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை அங்கு கொண்டாடியதாகவும், அங்கு தங்குவது அவர்களது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.
அம்பானி குடும்பத்தைப் பொறுத்தவரை, அவர்கள் தற்போது மும்பையில் உள்ள ஆன்டிலியாவில் வசிக்கின்றனர், இது பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த குடியிருப்பாக உள்ளது. அதன் மதிப்பு ரூ.15,000 கோடி ஆகும். எனவே, தங்கள் மகனின் திருமண நிச்சயதார்த்தத்தை தங்களது வீட்டில் நடத்தியதைப் போல், தற்போது அவர்களின் திருமணத்தை ஸ்டோக் பார்க் எஸ்டேட்டில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனாலும் இந்தத் தகவலை அம்பானி குடும்பத்தினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருந்தபோதும், பாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு, ஜூலை மாதம் குறிப்பிட்ட அந்த தேதியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதிர்பார்ப்பு
மூன்று நாட்கள் நடைபெற்ற திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில், விருந்தினர்களுக்கு ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனித்தனியே ட்ரெஸ் கோட் தரப்பட்டது. பிரபலங்களும் அதன்படியே வந்து அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். எனவே, அதே மாதிரி திருமணத்திற்கும் ஏதாவது திட்டமிட்டு வைத்திருக்கிறார்களா என்பது இனி வரும் நாட்களில் தெரிய வரும்.

திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைவிட, இந்த திருமணத்தில் சர்வதேச அளவில் ஒட்டுமொத்த விவிவிஐபிக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, செலவும் பல ஆயிரம் கோடியை தாண்டலாம் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக இந்த மாதத் தொடக்கத்தில் அனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சன்ட்டும் துபாயில் உள்ள 2 ஷாப்பிங் மால்களில் ஷாப்பிங் செய்த தகவல் ஊடகங்களில் வெளியானது. அப்போதே, மணமக்கள் 20 கார்கள் கொண்ட கான்வாயில் பலத்த பாதுகாப்புடன் ஷாப்பிங் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.1,000 கோடி செலவில் கோலாகல திருமணம் - அம்பானி வீட்டு விசேஷத்தில் திரண்ட செலிபிரிட்டிகள்!