'நமக்கு தான் அது தேவையற்ற பொருள்; அவருக்கு அது சிற்பம்’ – வியக்க வைக்கும் ஆந்திர பேராசிரியர்!
ஆட்டோமொபைல் சிற்பக்கலை பட்டறையின் கிங்!
"பொது இடங்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட ஆட்டோமொபைல் மெட்டல் ஸ்கிராப்பில் இருந்து கவர்ச்சிகரமான மாடல்களை தயாரிப்பதில் எனது குழு உறுப்பினர்கள் வல்லுநர்கள்."
உலகத்துக்கு பழைய, வேண்டாத பொருட்களாக தெரியும் யாவும் இந்த பேராசியருக்கு தங்கமாக காட்சியளிக்கின்றன. அவற்றை பேராசிரியர் ஒருவர் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பது மட்டுமல்லாமல், வித்தியாசமான முயற்சி ஒன்றையும் மேற்கொண்டுள்ளார்.
ஆந்திராவின் குண்டூரில் உள்ள ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழக கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியில் நுண்கலைத் துறைத் தலைவராக இருப்பவர் சீனிவாஸ் படகண்ட்லா. இவர், மறுசுழற்சி செய்யப்பட்ட ஆட்டோமொபைல் மெட்டல் ஸ்கிராப்பை சிற்பங்களாக மாற்றி வருகிறது.
"ஒரு சாதாரண மனிதர் பெரிய ஹோட்டல்களில் அல்லது கண்காட்சி மையங்களில் உள்ள அதிநவீன கலைக்கூடங்களை பார்வையிட முடியாது. அங்கு உலோக கலைகள் உட்பட பல்வேறு வகையான கலை வடிவங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அந்த சலுகை பெரும்பாலும் உயரடுக்கு அல்லது பணக்காரர்களுக்கு கிடைக்கிறது.
நாங்கள் உருவாக்கும் உலோக சிற்பங்கள் அந்தந்த நகராட்சி நிறுவனங்களின் உதவியுடன் பொது பூங்காக்களில் நிறுவப்பட்டுள்ளன, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அதை ரசிக்க வேண்டும், என்று அவர் தி லாஜிக்கல் இந்தியன் இடம் தெரிவித்தார்.
விஜயவாடாவின் மாருதி நகரைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ், 1998ல் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சிற்பக்கலைகளில் நுண்கலைகளில் முதுகலைப் படிப்பை முடித்தார். அவர் 2007 முதல் 2010 வரை ஹைதராபாத்தில் உள்ள பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகத்தில் ஃபேகல்டி மெம்பராக பணியாற்றினார். அவர் 15 முதல் 20 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவைக் கொண்டுள்ளார்.
அதில் அவரது ஜூனியர்ஸ், சப் ஜூனியர்ஸ் மற்றும் மாணவர்கள் உள்ளனர்.
“ஆட்டோமொபைல் ஸ்கிராப்பை ஒரு கலையாக மாற்ற பல நாட்கள் ஆகாது. 15 அடி மாதிரி ஒரு வார நேரம் மட்டுமே ஆகும். பொது இடங்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட ஆட்டோமொபைல் மெட்டல் ஸ்கிராப்பில் இருந்து கவர்ச்சிகரமான மாடல்களை தயாரிப்பதில் எனது குழு உறுப்பினர்கள் வல்லுநர்கள்,” என்று சீனிவாஸ் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
2007 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் அகில இந்திய கல் செதுக்குதல் முகாமில் சீனிவாஸ் தனது சிற்பங்களைக் காட்சிப்படுத்தியுள்ளார். 2016 ஆம் ஆண்டில் கடப்பாவில் உள்ள ஷில்பராமத்தில் நடந்த ஆட்டோமொபைல் சிற்பக்கலை பட்டறையிலும் பங்கேற்றுள்ளார்.
மேலும், அவரவர் பகுதிகளில் கிடைக்கக்கூடிய உலோக ஸ்கிராப்பில் இருந்து குறைந்த விலை சிற்பங்களை வடிவமைக்குமாறு அவர் மக்களை ஊக்குவிக்கிறார்.
"காலநிலை மாற்றம் இன்று மனிதகுலத்தை அச்சுறுத்தும் ஒரு தீவிரமான பிரச்சினையாக இருப்பதால், மாணவர்களும் மற்றவர்களும் இந்த சூழல் நட்பு மாதிரிகளால் ஈர்க்கப்படும்போது இது எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது," என்று அவர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு தெரிவித்தார்.
தொகுப்பு: மலையரசு