கிஃப்ட் சிட்டி மூலம் 11 மில்லியன் டாலர் நிதி பெற்றது அனிகட் கேபிடல்!
முதலீட்டு நிறுவனமான அனிகட் கேபிடல், தனது தனியார் கிரெடிட் நிதி -3இல், 11 மில்லியன் டாலர் முதலீட்டை கிஃப்ட் சிட்டி அமைப்பு வாயிலாக பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான 'அனிகட் கேபிடல்', தனது தனியார் கிரெடிட் நிதி -3இல், 11 மில்லியன் டாலர் முதலீட்டை கிஃப்ட் சிட்டி ஸ்டக்சர் வாயிலாக பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. வலுவான முதலீட்டாளர் நம்பிக்கை மற்றும் இந்திய தனியார் கடன் பரப்பில் சர்வதேச முதலீட்டாளர்களின் அதிகரிக்கும் ஆர்வத்தின் அடையளமாக இது அமைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டு அமைப்பு, அமெரிக்கா, யூகே, ஐரோப்பா, மத்திய கிழக்கு உள்ளிட்ட முக்கிய சந்தையிகளில் இருந்து, நிதி கழக முதலீட்டாளர்கள், குடும்ப அலுவலகங்கள், அதிக நிகர மதிப்பு கொண்டவர்கள் ஆகியோரிடம் இருந்து டாலர் முதலீட்டை ஈர்க்கும் வகையில் உள்ளது. சர்வதேச முதலீட்டை ஊக்குவிக்க மத்திய அரசு உருவாக்கிய சர்வதேச நிதிச்சேவைகள் மையங்கள் ஆணையம் (IFSC), வாயிலாக இந்த முதலீடு அமைகின்றன.
தனியார் கடனில், கையகப்படுத்தல், பங்குகள் திரும்ப வாங்குவது, பிரிட்ஜ் நிதி மற்றும் இதர வளர்ச்சி மூலதனம் ஆகியவற்றில் உள்ள இடைவெளியை அனிகட் கேபிடல் நிரப்பும் நோக்கம் கொண்டுள்ளது. கிஃப்ட் சிட்டி ஸ்டக்சர் வாயிலாக திரட்டப்பட்ட நிதி, தனது மூன்றாவது தனியார் கடன் நிதிக்காக அனிகட் கேபிடல் திரட்டி வரும் ரூ.1,500 கோடியில் இணையும். இந்த பரப்பில் அனிகட், மத்திய அளவு நிறுவனங்களில் ரூ.3,200 கோடி அளவு முதலீடு செய்துள்ளது. நிறுவனங்கள் விரிவாக்கம், அதிக வர்த்தக வாய்ப்பு உள்ளிட்டவற்றில் இது உதவுகிறது.
“கிஃப்ட் சிட்டி அமைப்பு வாயிலாக பெற்றுள்ள நிதி, அனிகட் நிறுவனத்தின் மீது சர்வதேச முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை உணர்த்துகிறது,” என்று அனிகட் கேபிடல் மேனேஜிங் பார்ட்னர் அஸ்வின் சத்தா கூறியுள்ளார்.
எங்கள் தொழில் அனுபவத்தை கொண்டு, முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் என இரு தரப்புக்கும் மதிப்பு உருவாக்கும் வகையில், பிரத்யேக கடன் தீர்வுகள் மூலம் அதிக பலன் அளிப்பதில் உறுதியாக இருப்பதாகவும், அவர் கூறினார்.
அனிகட் கேபிடல், கடன் மற்றும் சமபங்கு உத்திகளுடன் செயல்பட்டு வருகிறது. மூன்று கடன் மற்றும் மூன்று சமபங்கு நிதிகளை செயல்படுத்தி வருகிறது. ரூ.3,500 கோடியை இந்த நிதிகள் மூலம் நிர்வகிக்கிறது. மில்கி மிஸ்ட், வின்கிரீன்ஸ், மோமோ, புளுபைனரிஸ், மிஸ்ட்ரல், அக்னிகுல், புளுடோகாய், நீமன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை தனது போர்ட்போலியோவில் கொண்டுள்ளது. தில்லி, சென்னை, பெங்களூரு, கிஃப்ட் சிட்டி ஆகிய இடங்களில் அலுவலகம் கொண்டுள்ளது.
Edited by Induja Raghunathan